5mm, 4mm thickness-ல் என்றெல்லாம் கண்ணாடி இருக்கிறது. 1mm thickness-ல் கூட கண்ணாடி இருக்கிறது. சினிமாவில் fighting scene-ல் பயன்படுத்துவார்கள். கதாநாயகன் கண்ணாடியை உடைத்துக் கொண்டு பாய்ந்து வருவார் பாருங்கள். அப்படியெல்லாம் கூட கண்ணாடி இருக்கிறது. ஆனால் நாம் 6mm கண்ணாடி வாங்கினால் தான் பிம்பம் ஸ்பஷ்டமாக, துல்லியமாக deformation இல்லாமல் இருக்கும். நமது ஜீவகாந்தம் பிரதிபலிக்கப்பட்டு திருப்பி வருகிறது. நமது ஜீவகாந்தம் தான் பிரதிபலிக்கப்பட்டு திருப்பி வருகிறது. விளக்கிலும் சரி நமது ஜீவகாந்தம்தான் பிரதிபலிக்கப்பட்டு இந்த ”technique” பிரகாரம் பெருகுகிறது.
முதலில் செலவு. விளக்கை பார்க்கிறீர்கள். கண் பார்வையே ஜீவகாந்த சக்தியாக செலவழிக்கப்படுகிறது. ஒளிக்கீற்றை உற்றுப்பார்க்கும் பொழுது ஜீவகாந்தம் இன்னும் அதிகமாக செலவாகும். உற்றுப் பார்க்க, அதையே தொடர்ந்து பார்க்க, பார்க்க ஜீவகாந்தம் வாரிக்கொண்டு செலவாகும். இது என்ன ஜீவகாந்தப் பெருக்கப் பயிற்சியா இல்லை ஜீவகாந்த வறட்சி பயிற்சியா?
ஆனால் சின்ன மீனைப் போட்டு பெரிய மீனை பிடித்த கதையாக நமது ஜீவகாந்தத்தைக் கொஞ்சம் செலவு பண்ணும் பொழுது அதை ஈடுகட்டுவதற்காக வான் காந்தம் வரும். எந்த அளவுக்கு வான் காந்த வரவு இருக்கம். அப்போ செலவுக்கும், வரவுக்கும் சரியாகப் போய்விட்டது என்று சொல்லக்கூடாது. சிலபேர் சொல்வார்கள், இதிலே வரவு எங்கே இருக்கிறது என்று. நமது உடலின் ‘exposure part’ தோல். நமது தோலை உரித்து தரையில் விரித்து அளந்து எவ்வளவு தெரியுமா? 2 Sq.m. கண் எவ்வளவு பெரிது. அது வழியாகத் தான் ஜீவகாந்தம் செலவாகும். கண் இருக்கிறது, அதில் கருவிழி எவ்வளவு எவ்வளவு பெரிது. அதற்கு நேர் பின்புறம் இருக்ககூடிய ‘retina’ எவ்வளவு பெரிது. ஒரு மி.மீ. ஸ்கொயர் கூட இருக்காது. அதன் வழியாக செலவு. 2 Sq.m. வழியாக வரவு என்றால் எவ்வளவு வரவாகும்.
ஏனென்றால் கண் வழியாக செலவு பண்ணுகிறோம். ஆனால் வான் காந்தம் கண் வழியாகத் தான் உள்ளே செல்வேன் என்று இல்லாமல், ஐயோ செலவாகிவிட்டதே என்று உடல் முழுவது வரவாகும். இறைவன் அன்பும் கருணையும் உடையவன் அல்லவா? எனவே கண் வழியாக மட்டும் செலவு. உடல் முழுவது வரவு அபரிமிதமாக இருக்கும் அதாவது அதிகமாக இருக்கும்.
அதனால் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே ஜீவகாந்த பெருகிவிட்டதால் ஒரு புத்தணர்ச்சி, ஒரு கிளர்ச்சி, ஒரு புல்லரிப்பு ஏற்படுவது தெரியும். அதிகமாக பெருகுகிறது கண்ணாடிப் பயிற்சியில் எவ்வளவு ஜீவகாந்தம் அதிகமாகப் பெருகுகிறது. ஏனென்றால் நாம் முழு பிம்பத்தையும் நாம் focus பண்ணி பார்க்கிறோம். அப்போ அந்த ஜீவகாந்தம் பெருகுவதற்குரிய வழி மிகப் பெரியதாக இருக்கிறது.
நாம் நமது ஜீவகாந்தத்தை செலவு பண்ணித்தான் அதை பிரதிபலிக்க வைத்து பெருக்கிக் கொள்கிறோம், என்றால் போனது தானே வரும். அதிகரிப்பது இருக்காது என்று ஒரு கேள்வி எழலாம்.
கண்ணாடிப் பயிற்சியின் போது ஆகின்ற செலவு கண் மூலமாக மட்டும் தான். வரவு உடல் முழுவதும். எவ்வளவு பெரிய உடல் நாம் பார்த்துக் கொண்டிருக்கக் கூடிய உடல். இப்படிச் சில தெய்வீக ரகசியங்கள் இயற்கையில் இருக்கிறது. இதை நமது சித்தர்கள், மகரிஷிகள் கண்டு பிடித்து அதை வாழ்க்கை இலாபமாக பயன்படுத்த கண்டுபிடித்து இருக்கிறார்கள். வழி வகுத்து இருக்கிறார்கள். அதுதான் ஜீவகாந்தப் பெருகப் பயிற்சி.
ஜீவகாந்தம் எங்கிருந்து வருகிறது? வான் காந்தத்தில் இருந்து வருகிறது. வான் காந்தத்திலிருந்து அல்லது வான் காந்தத்துக்குப் பக்கமாகவோ உட்கார்ந்து இருக்கிறோம். நாம் இந்த atmosphere-ல் தானே உட்கார்ந்து இருக்கிறோம். பூமி தன்னைத் தானே சுற்றும் முயற்சியில் காற்று மண்டலமும் சேர்ந்து சுற்றும். அவ்வாறு காற்று மண்டலம் சுழல்கிறது. அதற்கு அப்பால் உள்ள காந்த மண்டலத்தில் உரசும். அது (காந்தம்) Still. இது (காற்று) moving. அதில் ஒரு உரசல் ஏற்படும். அந்த உரசல் காரணமாக காந்தம் காற்று மண்டலத்தில் கரைகிறது.
குளத்தின் மேல் நீர் இருக்கிறது. அதில் அலை அடிக்குது. மீனகள் எல்லாம் துள்ளிக்குதிக்கிறது. மாடுகள் எல்லாம் குளித்துக் கொண்டு இருக்கிறது. அப்போ நீரில் ஏற்படும் சலனமானது நீரிலே காற்று கரைந்து விடுகிறது. அங்கேயே இருக்கக் கூடிய காற்று கரைந்து விடும். நீரில் ஏற்படக் கூடிய சலனம் காற்றை கரைத்து நீரில் ஏற்றுக்கொண்டது மாதிரி காற்று மண்டலத்தில் ஏற்படக்கூடிய சலனம், உரசல் காந்தத்தை ஈர்த்து கரைத்து விடுகிறது.
நாம் காற்றைத் தொட்டுக் கொண்டு இருக்கிறோம், உடலின் எல்லா பாகங்கள் வழியாக. அதாவது காந்தத்தைத் தொட்டுக் கொண்டு இருக்கிறோம். ஜீவகாந்தப் பெருக்கப் பயிற்சியின் மூலமாக ஜீவகாந்தம் கண் வழியாக செலவாகும். அதனால் உடல் முழுவதும் இருக்கக்கூடிய ஜீவகாந்தத்தின் அளவு குறையும். அளவு என்று சொல்வதைவிட அழுத்தம் குறையும். வெளியில் வான் காந்தம் ஒரு குறிப்பிட்ட அழுத்தத்தில் இருக்கும். நம் உடலுக்குள் இருக்கும் ஜீவகாந்தத்தைக் குறைத்து விட்டோம். அதிகமாக இருப்பது குறைவாக இருப்பதோடு கலக்கும்.