KG Sami1937 — 2006

தவம் – 47

Signed KG Sami

சரி கண்ணை மூடித் தவம் செய்யுங்கள். ஒரு மாதிரி “குறு குறு” “விறு விறு” என்று மனசில, நெற்றியில் தெரிகிறதா. இப்பொழுது தான் கேட்க வேண்டும். இதற்கு முன்பு சொல்லிக் கொண்டு தான் இருந்தோம். “குறு குறு” எனத் தெரியும். “விறு விறு” எனத் தெரியும், என்று சொல்லிக் கொண்டு தான் இருந்தோம். இப்பொழுது தான் கேட்க வேண்டும்.

என்ன சொல்லிக் கேட்க வேண்டும். சூடு தெரிகிறதா, குளிர்ச்சி தெரிகிறதா, இதெல்லாம் தெரிகிறதா என்று கேட்கக் கூடாது. இதில் தெரிவது ஒன்று அவருக்கு வந்திருக்கும். ஏதாவது ஒரு புதுமையான உணர்வு தெரிகிறதா என்று கேட்க வேண்டும். ஆமாம் என்பார். அவர்க்கு என்ன வந்திருக்கும். சூடு வந்திருக்கும். இவருக்கு என்ன வந்திருக்கும். கூச்சம் வந்திருக்கும்.

நாம் ஏதாவது ஒன்று சொல்லிக் கேட்டால் அவருக்கு அது வந்திருக்காது. அதனால் வருத்தப்படுவாரே. எனவே ஏதாவது ஒரு புதுமையான உணர்வு தெரிகிறதா என்று கேட்க வேண்டும். மெல்லத் தலையை ஆட்டி சொன்னால் போதும் என்று சொல்லி விடுங்கள்.

நான் இப்போ கேள்வி கேட்பேன். நீங்கள் அதற்கு உள்ள பதிலை ‘Yes’ or ‘No’ என தலையை ஆட்டிச் சொன்னால் போதும், என்று முன்னமே சொல்லி வைத்தி விடுங்கள். இல்லையென்றால் கண்ணைத் திறந்து விடுவார்கள். கண்ணை மூடிக் கொண்டு இருப்பதற்கு என்ன பாடுபடுவார்கள் தெரியுமா. அதனால் கண்ணைத் திறந்து விடுவார்கள். கண்ணைத் திறந்தால் வராது போய் விடும். எனவே தலையை ஆட்டி பதில் சொல்லி விடுங்கள் என்று சொல்லிவிட வேண்டும்.

அதுதான் குண்டலினி சக்தி. அது மேல் மனம் வைத்து செய்வது தான் தவம். “இப்போ கல்கண்டு தரேன்” வாயைத் திறந்து வாங்கிக் கொள்ளுங்கள் என்று சொல்லி கல்கண்டு கொடுக்க வேண்டும். சுவைத்துக் கொண்டே ஆக்கினைச் சக்கரத்தில் மனதை வையுங்கள் என்று சொல்லி கல்கண்டு கொடுத்து விடுங்கள்.

சுவையும், உணர்வும் பொருந்தட்டும். “இனிமேல் நீங்கள் எந்த உணவை உண்டாலும், அல்லது வேறு எந்த அனுபோகத்தைக் கொண்டாலும் ஆக்கினைச் சக்கரத்திலேயே மனதை வைத்துக் கொண்டு அந்தந்த அனுபோகத்தையும் கொள்ள வேண்டும் என்பதற்கு இன்றைக்கு ஒரு தொடக்கம்.”

Keep reading

More from the archive

KG Sami

தவம் – 2

முற்காலத்தில் பரவலாக நடைமுறையில் இருந்த முறை பிராணாயாமம். பிராணன் என்றால் இரண்டு பொருள். ஒன்று காற்று. இரண்டு உயிர். (தமிழிலும் அப்படி ஒரு வார்த்தை…

KG Sami

வீடு பேறு

(ஸ்ரீ குரு கனக கோவிந்தசாமி அய்யா அவர்கள் ஆற்றிய உரை - பேச்சு நடையில்) அன்பர்களே! நாம் இறைவனைத் தேடுகிறோம், ஆனால் இறைவன்னா என்ன? என்று தெரியாமலே…

Granthaalayam

அருளும் பொருளும்

(ஸ்ரீ குரு கனக கோவிந்தசாமி அய்யா அவர்களின் உரையிலிருந்து)பொருள் என்ற வார்த்தைக்கு இரண்டு விதமான அர்த்தங்கள் உண்டு.ஒன்று: உலகத்தில் வாழ் வதற்குத்…

KG Sami

இறைவனும் இறைநீதியும்

(ஸ்ரீ குரு கனக கோவிந்தசாமி அய்யா அவர்கள் ஆற்றிய உரை - பேச்சு நடையில்)அன்பர்களே! நாம் இறைவனைத் தேடுகிறோம், ஆனால் இறைவன்னா என்ன? என்று தெரியாமலே…

KG Sami

தவம்-13

ஊறுகாய் சாப்பிட்டிருக்கிறீர்களா? ஆவக்காய் ஊறுகாய் சாப்பிட்டிருக்கிறீர்களா? ஐயோ ஆவக்காய் ஊறுகாய் சாப்பிட வில்லையா ? நீங்கள் தவம் செய்யவில்லை…

KG Sami

தவம் – 32

5mm, 4mm thickness-ல் என்றெல்லாம் கண்ணாடி இருக்கிறது. 1mm thickness-ல் கூட கண்ணாடி இருக்கிறது. சினிமாவில் fighting scene-ல் பயன்படுத்துவார்கள்.…