KG Sami1937 — 2006

தவம் – 48

Signed KG Sami

இதைச் சொல்லவில்லையென்றால் இதைப் ‘பிரசாதம்’ என்று நினைத்து விடுவார்கள். மனவளக்கலை மன்றத்துக்குப் போனால் ‘கல்கண்டு பிரசாதம்’ கொடுப்பார்கள் என்று சொல்லி கொடுக்கவே ஆரம்பித்து விடுவார்கள். அதற்கு ஒரு கூட்டமே வந்து விடும். கூட்டுத் தவம் முடிந்து வெளியே போகும் போது ‘gate’ இல் இருந்து ஒரு ஆள் கல்கண்டு பிரசாதம் கொடுப்பார். நான் பல மன்றங்களில் அங்கேயும், இங்கேயும் போய் வருவதால் பார்த்திருக்கிறேன். சரி. கல்கண்டு  தானே கொடுக்கிறார்கள் சாப்பிட்டு விட்டுப் போகட்டும்.

ஏன் இந்தப் பழக்கம் வந்தது. தீட்சை கொடுத்த அன்று கல்கண்டு  கொடுத்தார்கள். இல்லையா. ஆகவே இது பிரசாதம் என்ற நினைவோ, உணர்வோ வரக் கூடாது. ஆகவே “நீங்கள் எந்த உணவு உண்டாலும், அனுபோகம் கொண்டாலும் ஆக்கினைச் சக்கரத்தில் இந்த நினைவு மாறாமல் அந்தந்த அனுபோகத்தைக் கொள்ளப்படுவதற்கு இன்றைக்கு ஒரு தொடக்கம். இன்று முதல் நீங்கள் எந்த அனுபோகம் கொண்டாலும் ஆக்கினை நினைவிலேயே இருந்து கொண்டு அந்தந்த அனுபோகங்களிலும் நன்றாக இறங்கலா” என்று சொல்லி எதிரில் வந்து வாழ்த்த வேண்டும்.

அதன்படி இரண்டு கையையும் தூக்கி ஆசீர்வாதம் பண்ணுவது ‘ஊஹூம் அது எப்படி மகரிஷி மாதிரி நாமும் அந்த மாதிரி சொல்லுவது. அது தான் தாழ்வு மனப்பான்மை. உயர்வு மனப்பான்மை என்றவுடன் திருத்துறைப்பூண்டிக்குப் பக்கத்தில் ’பாமினி’ என்ற ஊர் இருக்கிறது. அங்கே போய் நீங்கள் யாரிடமாவது “வாழ்க வளமுடன்” என்று சொல்லுங்கள். உடனே இரண்டு கையையும் தூக்கி விடுவார்கள். உயர்வு மனப்பான்மை அவர்களுக்கு ‘automatic’  ஆக வந்துவிட்டது. வித்தியாசம் இல்லாமல் அவர்கள் செய்கிறார்கள்.

இரண்டு கையையும் தூக்கி ‘அன்பரே இந்தப் புனிதமான நல்ல தினத்தில் மகாசக்தி குண்டலினி யோகத்தை அருட்பேராற்றலின் கருணையினாலும் நமது ஆசான் யோகிராஜ்வேதாத்திரி மகரிஷி அவர்களின் ஆசி கொண்டும் மனம் உவந்து உங்களுக்கு கற்பித்து வைத்திருக்கிறேன். ‘மகாசக்தி குண்டலிணி யோகம் என்பதை மறக்கக் கூடாது. இதை இறைவனுடைய கிருபையினாலும், குருவினுடைய ஆசி கொண்டும் கற்றுக் கொடுத்திருக்கிறேன். இந்த வாசகத்தைக் கொஞ்சம் முன்னே பின்னே மாற்றிக் கொள்ளலாம். தப்பில்லை கருத்து மட்டும் நான் சொல்லிவிட்டேன்.

Keep reading

More from the archive

KG Sami

தவம் – 36

தன்னால் வாத்யார் வேலைக்குப் போகவே முடியாது என்று தெரிகிறது. ஏனெனில் அவருக்கு வயது நாற்பத்து ஐந்து. அவர் ‘Teacher training’ அல்லது B.Ed., Course-க்கு…

KG Sami

தவம் – 16

அந்த Negative-ஐ Affirmative ஆக்கிப் பார்த்தால் அங்கே வெளி இருக்கிறது. சுத்தவெளி இருக்கிறது. அங்கே அரூபமான ஒரு தத்துவம் ஒன்று இருக்கிறது அதற்கு உருவம்…

KG Sami

தவம் – 23

தவம் செய்வதற்கு ஒரே தெய்வத்தை (பிரம்மாவை) வேண்டி தவம் செய்தார்கள். அவன் என்ன கேட்டான் என்றால், ‘நித்திய தத்துவம்’ தத்துவம் என்றால் இந்த இடத்தில்…

KG Sami

தவம் – 40

பிரம்ம ஞானத்தைப் பெறுவதற்கு அந்தக் காலத்தில் குருவோடு கூடி இருக்க வேண்டும். குரு சிஷ்ய பரம்பரை என்று சொல்வார்கள். குருவுக்குத் தெரிந்ததெல்லாம்…

Granthaalayam

எல்லோரிடமும் இணக்கம்

(ஸ்ரீ குரு கனக கோவிந்தசாமி அய்யா அவர்கள் ஆற்றிய உரை - பேச்சு நடையில்)அன்பர்களே! இணக்கம் என்ற தமிழ்ச்சொல், பிணக்கு என்பதனுடைய எதிர்ப்பதம்.…

KG Sami

தவம் – 41

Certificate வரும். இப்பொழுதே உங்களை பிரம்ம நிலைக்கு உயர்த்தி விட்டேன். உங்களை பிரம்ம ஞானி என்று அறிவித்து விட்டேன். கூன் விழுந்து உட்கார்ந்து…