KG Sami1937 — 2006

பிறவித் தொடர் தத்துவதில் செய்த புரட்சி

Signed Kannimuthu

வேதாத்த்ரி மகரிஷிகள் வாய்ச்சொல்லைச் செவிகொள்வீர்!

போதிபார் வேதத்தைப் புகட்டிடுவார் யோகத்தை!

தவமுறையை எளிதாக்கிக் தக்கபடிச் சீர்திருத்தி,

நவயுகத்திற் கேற்றபடி நன்மைபல வும்சேர்த்தார்.

பவமறுக்கும் வழிசொன்னர், பூர்வீக நிலையான

சிவமிருக்கும் இடம்போகச் சுருக்குவழி சொல்லியுளார்! (வேதாத்திரி..)

அன்றாடம் தவமிருக்கச் சென்றோடும் துன்பமென்றார்.

நின்றாடும் இயற்கை இன்பம்.நீடித்த அமைதிவரும்.

வென்றாகும் மனம்ஆறு குணப்பேயை, மாட்சிவரும்.

குன்றாவீர் குணநலத்தில்! பேறடையப் புறப்படுவீர்! (வேதாத்திரி..)

வேதாந்த வீடுகண்டார். சித்தாந்தத் துள்புகுந்தார்.

நாதாந்தம் நவயுகத்துக் காகாத தறிவித்தார்.

‘யோகந்தம் ஒன்றேதான் மோகாந்தம் போக்கும்’ எனும்

வேதாத்திரி வழிபற்றி விரைவாக உய்ந்திடலாம்!  (வேதாத்திரி..)

யோகத்தின் அருட்கையால் அன்புடனே உமைத்தொடுவார்.

தேகத்தின் மேல்கொள்ளும் மோகத்தை நீர்மறந்து.

வேகத்தின் நின்றொடுங்கி உய்ருணவீர்!  பரமுணர்வீர்!

ஆகாத்தன் நிலையுணர்ந்து. ஆன்ந்து வீட்டைவீர்  (வேதாத்திரி..)

Keep reading

More from the archive

KG Sami

சுபிதாவின் முதல் பிறந்தநாளுக்காக

புதுவை அருட்செல்வர் ஜானகிராமன் ஐயா அவர்களின் மகள்சுபிதாவின் முதல் பிறந்தநாளுக்காககே.ஜி. சாமி ஐயா அவர்களால்எழுதி அளிக்கப்பட்ட அருமையான மரபு வாழ்த்துப்…

Arulnithi Muthappan

தியாகச் செம்மல் வேதாத்திரி

ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எழுபதோ, எழுபத்தொன்றோ, சரியாக நினைவிலில்லை. ஆகஸ்ட் மாதம் 16 ஆம் தேதி. கூடுவாஞ்சேரியில் மகரிஷிகளுடைய இல்லத்தின் எதிர்புறத்தில்…

KG Sami

தவம்-6

மேலேற்றப்பட்ட குண்டலினி சக்தி ஆக்கினையில் பல காலம் தொடர்ந்து நிறுத்தப்பட்டிருந்தால் மனக்கட்டுப்பாட்டை மீறி, உடலுக்கும், மனதுக்கும் பல தொந்தரவுகளை…

Granthaalayam

இன்சொல்

ஸ்ரீ குரு கனக கோவிந்தசாமி அய்யா அவர்களின் உரைக்குஎழுத்து வடிவம் கொடுத்தவர் திருமதி. S. செல்வி அவர்கள்.அன்பர்களே!உலக மக்கள் எல்லோரும் மன…

KG Sami

தவம்-12

பெரும்பாலும் ஆசிரமங்களிலும், மடங்களிலும் தான் இந்த தவம் செய்யப்பட்டது. சமுதாய விரிவாக அந்த காலத்தில் வரவில்லை. ஆசிரமங்களிலும், மடங்களிலும் செய்யும்…

Arulnithi Muthappan

சினமும், செந்தன்மையும்

1969, முப்பது நாளைக்கு ஒரு முறை மகரிஷிகளைச் சந்திக்கும் எனது வழக்கப்படிக் கூடுவாஞ்சேரி சென்றிருந்தேன். கூடுவாஞ்சேரிக்கும், சென்னைக்குமாக நானும்,…