KG Sami1937 — 2006

உலக அமைதிக்கென எடுத்த அவதாரம்… கல்கி அவதாரம்!

Signed Puthiya Bharathi

’எப்பொழுது எப்பொழுதெல்லாம் அதர்மம் தலை தூக்குகிறதோ, அப்பொழுது அப்பொழுதெல்லாம் நான் தோன்றி, அதர்மத்தை அழித்து, தர்மத்தை நிலை நாட்டுவேன்’ என்றாராம் மகாவிஷ்ணு, தனது ஒன்பதாவது அவதாரத்தில். இந்தக் கருத்தில் ஓர் ஓட்டை தெரிகிறதா? அதாவது விஷ்ணுவால், கடவுளால், ஒரேயடியாக அதர்மத்தை அழித்து, தர்மத்தை நிலைநாட்ட முடியாது என்றல்லவா வருகிறது? அப்படியானால், கடவுளால் முடியாத காரியமும் இருக்க முடியுமா? நிரந்தரமான உலக சமாதானத்தை ஒருவராலும் உருவாக்கவே முடியாதா? ‘அதற்காகத்தான், பத்தாவதான கல்கி அவதாரம்!’ என்றால், கல்கி அவதாரம் இன்னும் வரவில்லையே என்று மயங்காதீர்கள். கல்கி அவதாரம் வந்து விட்டது. எங்கே! எங்கே! என்கிறீர்களா? சொல்கிறேன்.

      நமது மனவளக்கலை எல்லோராலும் பயிலப்பட்டால், சரியாகப் பயிலப்பட்டால், எல்லோருமே நல்லவர்களாக ஆகிவிடுவார்கள் அல்லவா? எல்லோரையும் நல்லவராக்குவது தானே மனவளக்கலை? அப்படி அனைவரையும் நல்லவர்களாகி, தவறு செய்பவர்களும், துன்பம் விளைவிப்பவர்களும் இல்லாத உலகம் ஒன்றை உருவாக்குவதுதானே நமது நோக்கம்!

      ஆகவே, உலகம் சமாதானத்திற்குச் சரியான விதையான இந்த மனவளக்கலையை உருவாக்கிய நமது மகரிஷிகள் தான் கல்கி அவதாரம் என்றால், ‘காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு’ என்பது போல் ஆகுமா? இல்லை, அது சரியான கருத்துத் தானா? நீங்களே சிந்தியுங்கள். ‘நமது அருள் தந்தை அவர்களுடைய பிறவியின் நோக்கமே, அவதார நோக்கமே உலக சமாதானந்தான்’ என்பதற்கு எல்லோரும் ஒப்புக் கொள்ளக் கூடிய ஒரு சான்றை நான் இப்போது அளிக்கிறேன்.

      1970களின் ஆரம்ப ஆண்டுகளில் ஒரு நாள். நான் சென்னை தலைமை மன்றம் சென்றிருந்தேன். அப்பொழுது அது மாம்பலத்தில் ஒரு வாடகைக் கட்டிடத்தில் செயல்பட்டுக் கொண்டிருந்தது. ஒரு பத்து வருடம் மகரிஷிகள் அங்கேயே தங்கியிருந்து அருட்பணியாற்றிக் கொண்டிருந்தார்.

      அன்று ஞாயிற்றுக்கிழமை மாலை. வாராந்திரச் சிறப்புக் கூட்டுத் தவமும், சிறப்புச் சொற்பொழிவும் நடக்க ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. அப்போது இருந்த வழக்கப்படி, ஓர் அன்பர் தூபக் காலில் கட்டி நெருப்புத் துண்டுகள் வைத்து, அதில் சாம்பிராணி தூள்களைப் போட்டு, புகை பரப்பிக் கொண்டே வந்தார். புகை சூழ ஆரம்பித்தது.

      கூட்டத்தில் அ/நி. பத்மாவதி அம்மையாரும் (சென்னை), அவருடைய டிரைவரும் கூட அமர்ந்திருந்தனர். அந்த டிரைவராகப்பட்டவர் லேசாக ஆட ஆரம்பித்தார். பிறகு, உறும ஆரம்பித்தார். அதன் பிறகு, எழுந்து நின்று, ‘கா!... கூ!...’ என்று கத்திக் கொண்டே, ;தா!... தை!...’ என்று ஆட ஆரம்பித்தார். எல்லோரையும் போட்டு மிதித்துத் துவைத்தெடுத்தார். அவருடைய ஆர்ப்பாட்டத்தைக் கேட்டு மகரிஷிகள் தனத் அறையிலிருந்து எழுந்து வெளியே வந்தார். நிலமையைப் புரிந்து கொண்டார். அந்தப் பிள்ளையாண்டானைப் பிடித்து அவனை அவனது வலது பக்கமாக ஒருக்களித்துப் படுக்க வைத்தார். பையன் சாதுவாகச் சுருண்டு படுத்துக் கொண்டான். மகரிஷிகள் அவனது தலையிலிருந்து மூலாதாரம் வரை முதுகந்தண்டை வருடிக் கொடுத்தார். அவ்வளவுதான். அவன் பக்கென்று எழுந்து கொண்டான். தலையை உதரிக் கொண்டு சுற்றிலும் பார்வையைச் செலுத்தி, ‘சாம்பிராணிப் புகை போட்டீர்களா? என்மீது சாமி வந்து விட்டதா? என்னிடம் ஒரு சாமி இருக்கிறது. சாம்பிராணிப் புகையைக் கண்டால் அது வெளிவந்துவிடும்… நடந்தது, நடக்க இருப்பது பற்றி யார் என்ன கேட்டாலும் சரியான பதிலை அப்பொழுது நான் சொல்லியிருப்பேனே! ஏதாவது கேட்டீர்களா? என்ன பதில் சொன்னேன்’ என்று ஆவலோடு கேட்டான்.

      எல்லோரும் தங்களுக்கேற்பட்ட அதிர்ச்சியை மறந்து, ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். நமது மகரிஷிகள் மட்டும் மிகவும் அமைதியாக, ‘அப்படியா அப்பா! எனக்கு முதலிலேயே தெரியாமல் போய் விட்டதே!, தெரிந்து மட்டும் இருந்தால், இந்த உலக சமாதானம் எப்பொழுது வரும்? என்று கேட்டிருப்பேனே! அருமையான வாய்ப்பு தவறிப் போய் விட்டதே!’. என்று மிகவும் சர்வ சாதாரணமாகக் ஆயாசப்பட்டுக் கொண்டார்.

      தமாஷ் செய்து, நகைச் சுவையாகப் பேசுவதில் கூட உலக சமாதானந்தான் கருப்பொருள் என்றால், மகரிஷிகளின் பேச்செல்லாம், மூச்செல்லாம் உலக சமாதானந்தான் என்பதும், அவருடைய பிறவியின் நோக்கமும் உலக சமாதானந்தான் என்பதும் தெரிகிறதல்லவா?

Keep reading

More from the archive

KG Sami

தவம் – 36

தன்னால் வாத்யார் வேலைக்குப் போகவே முடியாது என்று தெரிகிறது. ஏனெனில் அவருக்கு வயது நாற்பத்து ஐந்து. அவர் ‘Teacher training’ அல்லது B.Ed., Course-க்கு…

KG Sami

தவம் - 46

உடலுக்கு நோய், மனதுக்கு பைத்தியம், வாழ்க்கையே முடிந்து போனவனும் உண்டு. சரியான வழி, சுலபமான வழி முறை தெரியாது. இப்போ நாம் இவ்வளவு சுலபமான வழிமுறை…

KG Sami

தவம் - 32 – ஏ

அதனால் தான் நமக்கு ஜீவ காந்தப் பெருக்கம் ஏற்படுகிறது. இது ஒரு தந்திரமான டெக்னிக். கண்ணாடிப் பயிற்சியில் அதிகமாக ஜீவகாந்தம் ‘மளமள’ வென ஏறுகிறது.…

Granthaalayam

ஒரே கல்லில் இரண்டு மாங்காய்

ஸ்ரீ குரு கனக கோவிந்தசாமி அய்யா அவர்களின் உரைக்கு எழுத்துவடிவம் கொடுத்தவர் திருமதி. S. செல்வி அவர்கள்.அன்பர்களே!இறைநிலையை புலன்களால் உணர்ந்து…

Kannimuthu

துரியாதீதம் தந்த தூயவர்

தாடியின்மடியில்தலைவைத்தால், தோன்றும்இன்பம்தோன்றிடுதே! – மேவிப்போய்அம்மெய்ப்பொருள்தன்னோடு பொல்லாநினைவைப்பூட்டிவிடின். – அப்போ,காயம்இருப்பதும்தெரியாது!…

Granthaalayam

உயிர்

ஸ்ரீ குரு கனக கோவிந்தசாமி அய்யா அவர்களின் உரைக்குஎழுத்து வடிவம் கொடுத்தவர் திருமதி. S. செல்வி அவர்கள்.அன்பர்களே!இந்த பிரபஞ்சத்தின் அடிப்படை ஆகாசம்…