KG Sami1937 — 2006

தவம்

Signed KG Sami

மூத்த பேராசிரியர். அருள்நிதி. K. G. சாமி

தவம்-1

     குண்டலினி யோகம் என்று முற்காலத்தில் பெயரிட்டு வழங்கிய யோக முறையைத் தான் நமது அருள்தந்தையவர்கள் எளிமைப் படுத்தி “எளிய முறைக் குண்டலினி யோகம்” என்ற பெயரில் சொல்லிக் கொடுத்து வந்தார்கள். அதற்கு உலக சமுதாய சேவா சங்கத்திலே அருட்பணித் துறையாக “மெய் விளக்கத் தவ மன்றம்” என்ற அமைப்புகளை ஏற்படுத்தினார். இது “சத்திய ஞான சபை” என்று வள்ளலார் ஏற்படுத்திய ஆன்மீக சபையை நினைவுபடுத்துகிறது. சத்தியம் என்றால் மெய், ஞானம் என்பது விளக்கம், சபை என்பது மன்றம் ஆகும் சத்திய ஞான சபையில் தவம் இல்லை. அந்தக் குறையை நீக்கித் தவம் என்ற வார்த்தையையும் சாதனையையும் இணத்து “மெய் விளக்கத் தவ மன்றம்” ஆக்கினார்கள் நமது மகரிஷிகள். இந்தப் பெயர் அவர்கள் யோசனை பண்ணாமல் சூட்டியது. ஆனால் எவ்வளவு பொருத்தமும், சிறப்பும் பாருங்கள். வள்ளலார் பாரம்பர்யத்தில் வந்தவர் நமது அருள் தந்தை என்பதற்கு இது மேலும் ஒரு சான்றாக அமைகிறது.

     இந்த தவத்தைச் செய்வதால் மனவளம் பெருகுகிறது. வாழ்க்கை வளமாக அமைவதற்கு மனவளம் முக்கியம் என்பதால் பின்னால் மனவளக் கலை மன்றம் என்று பெயரை மாற்றினார். “மனவளம் பெருகினால் வாழ்க்கை வளம் பெருகும்” என்பது எடுத்து விளக்கினால் தான் புரியும் எனவே “வாழ்க்கை வளக்கலை” என்றே எதிர்காலத்தில் பெயர் மாறலாம்.

வள்ளுவர் தவம் என்று ஒரு அதிகாரம் எழுதி இருக்கிறார். தமிழ் நாட்டில் தவம் என்பது வழக்கத்தில் இருக்கிறது. வாழ்க்கையின் ஒரு அங்கமாக இருந்தது என்பது இதிலிருந்து தெரிகிறது. அந்தத் தவத்தை உயிரை உணர்வது தொடங்கித் தான் செய்ய வேண்டும் என்பது அந்த அதிகாரத்தில் உள்ள

           ”தன்னுயிர் தான் அறப் பெற்றானை ஏனைய

           மன்னுயிர் எல்லாம் தொழும்”

என்று குறள் விளக்குகிறது. இது சிந்தனைக்குரியது இந்தத் தவத்திற்கு சமஸ்கிருதத்தில் யோகம் என்று பெயர் (உடற்பயிற்சி அல்ல).

     குண்டம் என்றால் நெருப்புச் சட்டி அல்லது நெருப்பு என்றே பொருள். குண்டலினி என்பது உவமையாகு பெயர் (நெருப்பு மேல் நோக்கிச் செல்லும், நீர் கீழ் நோக்கிச் செல்லும்) நெருப்பு போல் குண்டலினி சக்தி குண்டத்திலிருந்து, மூலாதாரத்திலிருந்து மேல் நோக்கிக் செல்லும் தன்மையுடையது. ஆனால் உலக விவகாரங்களில் மனதை செலுத்துவதால் மூலாதாரத்திலேயே இருத்தப்பட்டு விடுகிறது. இது ஒரு இயற்கைக்கு முரணான நிலை.

     ஆகவே இயற்கையினுடைய இயல்பை அனுமதித்து, அதை மேலே கொண்டு சென்று விட்டால் இயற்கையோடு இசைந்து வாழ்வு நடைபெறும். அதாவது வாழ்க்கை இனியதாக மாறும். மேலே கொண்டு செல்வதென்றால், எங்கே கொண்டு செல்வது?

     மூல ஆதாரம்’ மாதிரியே உயிர்ச் சக்தி இருந்து இயங்குவதற்கு அதனோடு சேர்த்து இன்னும் 6 ஆதாரங்கள் இருக்கின்றன. அவை சுவாதிஷ்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி இவையெல்லாம் முதுகுத் தண்டில் உள்ளவை.

     ஆறாவது ஆக்கினை நெற்றியில் இருக்கிறது. அதை “பிட்யூட்டரி சுரப்பி’ என்று வைத்திய முறையில் சொல்வார்கள். ஏழாவது ஆதாரம் உச்சி பிரம்மரந்திரம் என்றும் இதைச் சொல்வார்கள். குண்டலினி சக்தியை ஞானநிலை அடைவதற்கான மேலான நிலையை அடைவதற்கு ஆக்கினைச் சக்கரத்தில்  கொண்டு வந்து வைத்தாலே போதும், என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்தார்கள். அதற்கு கொடுமையானதான பிராணயாமம் உள்ளிட்ட யோக சாதனைகளை மேற்கொண்டாகள். பிராணாயாமத்தில் கும்பகம் முக்கியம். கும்பகம் என்றால் மூச்சை அடக்குவது, மூச்சு உள்ளே செல்லும் பொழுது, பிராண வாய்வு உள்ளே போன கணமே கரியமில வாயுவாகமாறி விடுகிறது. அதனால் தீமைகளே விளைகின்றன. இதை அனுபவத்தில் கண்ட நம் தமிழ் நாட்டுச் சித்தர்கள் சுலபமான ஒரு முறையைத் தேடிக் கண்டுபிடித்தார்கள். அது தான் தொடுமுறை.

     நன்கு தவம் செய்து உயிர்ச்சக்தியின் வளத்தை அதிகரித்துக் கொண்டவர்கள் அந்த உயிர்ச் சக்தியைக் கையிலே தேக்கிச் சீடனுடைய மூலாதாரத்தைத் தொட்டால் சீடனுடைய குண்டலினி சக்தி (உயிர்ச் சக்தி) ஆசானுடைய கையோடு மேலெழுப்பி ஆக்கினைச் சக்கரத்துக்கு வந்து விடும். இது 1 நிமிடத்து வேலை. பிராணாயாம முறையில், எல்லாம் சரியாக நடந்தாலே குறைந்தது 12 ஆண்டு காலம் ஆகும். தொடு முறை நமது ஆசான் அவர்கள் தேர்ந்தெடுத்துக் கொண்ட தீட்சை முறை.

ஆக்கினைச் சக்கரத்திலேயே உயிரை அமர்த்தி உயிரை மனம் கவனிப்பது தான் தவம். மனம் என்பது உயிரினுடைய படர்க்கை நிலை. உயிர் மேல் மனம் வைத்து தவம் செய்வதால் மனதின் படர்க்கை நின்று விடுகிறது. அது அகமுகமாகத் திரும்புகிறது. உயிர் மேல் வந்து அமர்கிறது. அதாவது தன் மூலத்தின் மேல் வந்து அமர்கிறது. மனமாக மாறிச் செலவாகிக் கொண்டிருந்த உயிருக்கு இனிச் செலவில்லை. அதுமட்டுமின்றி, உயிரும் வந்து சேர்ந்துவிடுவதால் உயிருக்கு ஊட்டம் கூடுகிறது.ஊட்டம் கூடிய உயிரிலிருந்து ஆற்றல் கூடிய மனம் வரும்.அதுவும் உயிர் மேல் செலுத்தப் படுகிறது. இப்படியாக, உயிரால் மனமும், மனதால் உயிரும் வளம் பெறுகின்றன. எந்த விதமான செlஅவோ, சங்கடமோ யாருக்கும் இல்லை. ஆக்கினைச் சக்கரத்தில் உயிர்ச் சக்தி நன்கு தேக்கமுற்றால் அதைப் பிரம்ம ரந்திரத்துக்குக் கொண்டு செல்வது எளிது. அதைத் துரிய தவம் என்கி

Keep reading

More from the archive

KG Sami

நீங்களும் சித்தராகலாம்

(ஸ்ரீ குரு கனக கோவிந்தசாமி அய்யா அவர்களின் உரையிலிருந்து) நம்ம நாட்டிலே இப்ப எல்லாம் சித்து, சித்து என்று ஏதேதோ செய்து கொண்டி ருக்கிறாங்க. எந்த…

Granthaalayam

அருளும் பொருளும்

(ஸ்ரீ குரு கனக கோவிந்தசாமி அய்யா அவர்களின் உரையிலிருந்து)பொருள் என்ற வார்த்தைக்கு இரண்டு விதமான அர்த்தங்கள் உண்டு.ஒன்று: உலகத்தில் வாழ் வதற்குத்…

Kanniyappan

வெட்டவெளிக்குமூலம்?

எல்லாபொருட்களுக்கும்மூலம்சுத்தவெளிஎன்றுநாம்சொல்லுகின்றபோது, அந்தச்சுத்தவெளிக்குமூலம்எது, என்றுகேட்கின்றனர். அதாவது,…

KG Sami

தவம் – 27

சுத்தவெளி எங்கே? அது இருந்த இடத்திலே வேறு என்னவோ அல்லவா இருக்குது. விரிவலை இருந்ததே. போச்சே. அது என்ன ஆச்சு. அதுவும் காணாமல் போய்விட்டதே. இரண்டும்…

KG Sami

தவம் - 45

கையைத் தூக்கி இறக்கி, தூக்கி இறக்கி energy ஐ பாஸ் பண்ணுவதற்குக் கற்றுக் கொடுத்திருப்பார்கள். இதை அகத்தாய்வு இரண்டாம் நிலையிலேயே கற்றுக்…

Arulnithi Muthappan

நயத்தக்க நாகரீகம்

பணத்தைப் பரிகொடுத்த சிலர் மகரிஷிகளிடம் புகார் சொல்வார்கள். மகரிஷிகள் சொல்கின்ற பதில்: ‘எனக்குத் தெரிந்து நான் பாவம் செய்ததில்லை. எனது பெற்றோரும்…