KG Sami1937 — 2006

தவம்-14

Signed KG Sami

புதுப் பொண்ணு மாப்பிள்ளை வந்தா ஆரத்தி எடுக்கறாங்க பாருங்க, மஞ்சள் தண்ணீர் கலந்து தாம்பாளத்தில் அதை எப்படி சுத்துவது. மெதுவாக தந்திரமாக தண்ணீர் மட்டும் சுத்தற மாதிரி தாம்பாளம் ஆடாமல் மெதுவாகச் சுத்துவார்கள்.

அது போல தலை மெதுவாகச் சுத்தும். “கிரு கிரு” வென்று ஆடாது. கண்ணுக்குத் தெரியாத மாதிரி ஆடாது. நுட்பமாக கவனிக்க வேண்டும். அது மாதிரி குருமார்கள் வந்து விட்டதா? இல்லையா? என்பதை தெரிந்து கொள்வார்கள். ஆக்கினைச் சக்கரம் இவருக்கு வந்து விட்டதா? இல்லையா? என்று கவனித்து விடுவார்கள். புருவம் எழுந்து விடும். ஒரு Shining வந்து விடும்.

நீங்கள் பெரும்பாலும் இஸ்லாமானவர்களை பார்த்து இருப்பீர்கள். 5 வேளையும் நன்கு தொழுகை செய்பவர்களை பார்த்தால் முகத்தில் பம்மலா வரும் புருவங்களுக்கு மேல் Brain cells open ஆவதுதான் அதற்குக் காரணம். குருமார்கள் கண்டுபிடித்து விடுவார்கள். தவம் வந்து விட்டது. வரவில்லை என்று இந்த குரு பார்க்கிறார். சிஷ்யனுக்குத் தவம் வரவில்லை. “ஏய் இங்கே வாடா உனக்குத் தவம் வர மாட்டேங்குது” “ஆமா சாமி வர மாட்டேன்குது”. “எதுக்கு வரமாட்டேங்குது” தெரியலை சாமி. நீ விட்டுட்டு வந்ததில் எதையோ நினைத்துக் கொண்டு இருக்கிறாய் பெண்டாட்டி மேலே பிரியமா. இல்லை சாமி அவளிடம் கோபித்துக் கொண்டுதான் ஆசிரமத்துக்கு வந்தேன்.

”அப்போ பசங்க மேல பிரியமா” – “அதெல்லாம் கிடையாது சாமி. அதெல்லாம் வானரங்க பசங்களை நினைக்கலை”. “அப்போ தோப்பு, துரவு மேல பிரியமா” “தோப்பாவது, துரவாவது எங்க எல்லாம் பொட்டல் காடு சாமி அதெல்லாம் இல்லைசாமி”. “பின்னே வேறு என்ன தான் உன்னை இழுக்குது அங்கிருந்து அப்படி” என்று கேட்கிறார்.

அவன் சொல்கிறாம் “எங்க வீட்டுல ஒரு எருமை மாடு இருக்குது சாமி. அது மேல எனக்குப் பிரியம் அதிகம். என் மேல அதுக்கும் பிரியம். (அது தான் ரொம்ப முக்கியம்) அது நா(னி) ல்லாமல் மேயுதோ, மேயல்லையோ, தலைக் கயிற்றை கையில் பிடித்துக் கொண்டு பின்னாலே போனா வாய்க்கால் கரையில் மேய்ந்து கொண்டே வரும். இல்லைன்னா அங்கேயும் இங்கேயும் பார்க்கும். மேயாது நான் தொட்டியைக் கலக்கினா தான் தண்ணீர் குடிக்கும். இல்லைன்னா குடிக்காது. இதை விட மோசம் என்ன வென்றால் நான் பால் கறந்தால் தான் அது பால் கொடுக்கும். இல்லைன்னா யாருக்கும் பால் கொடுக்காது. ஆகவே அது வயித்துக்கும் திங்காம, தண்ணியும் குடிக்காம, பாலும் கொடுக்காம, மடி கதைத்துப் போய் என்ன சிரமப்படுதோ, இருக்குதோ, செத்துடுச்சோ தெரியலை சாமி. அதையே நினைச்சிட்டிருக்கேன்” சாமி.

நியாயம் தானே. அவ்வளவு பிரியம் எருமை மாடு மேல. “அப்போ சரிடா. நல்லதாப் போச்சு” என்றார் சாமியார். “என்னங்க சாமி” என்றான். “நீ எருமை மாட்டையே நினைத்துக் கொண்டு தவம் செய்” என்றார். “இதை முதலிலேயே சொல்லி இருக்கக் கூடாதா. இரண்டு நாள் வீணாகப் போச்சே” என்று சொல்லி எருமை மாடு, எருமைமாடு என்று சொல்லி தவம் செய்கிறான்.

சில நாட்கள் போன பிற்பாடு இவனுக்கு நல்ல தவம் வந்து விட்டது என்று சாமியார் கண்டு பிடித்து விட்டார். அதை உறுதி செய்வதற்கு “டேய் இங்கே வாடா” என்று கூப்பிடுகிறார் வந்தான். “நம்ம ஆசிரமம் ஒன்றும் அப்படி தாழ்ந்த நிலை வாசல் அல்ல. நானே குனியாமல் தான் போசுகிறேன். நீ கொஞ்சம் உயரம். குனிஞ்சு போக வேண்டியது தான். ஏண்டா தரையோடு தரையா படுத்துக் கிட்டு போற மாதிரி குனிஞ்சிகிட்டு போற” என்கிறார்.

”அது சாமி கொம்பு இடிக்கும்” என்ன? தனக்கு கொம்பு இருக்கிறதாகவும் அது அந்த நிலையில் இடிக்கும் என்பதற்காகவும் குனிந்து கொண்டே போகிறான். அப்போ என்ன அர்த்தம். அவன் எருமை மாடாகவே மாறிவிட்டான். மனம் எதை நினைக்கிறதோ அதுவாகவே மாறும்.

எனக்கு தெய்வ நிலை தான் வேணும். தெய்வத்தை நினைத்தால் தெய்வமாகிப் போகிறேன். தெய்வம் எங்கே இருக்கிறது. கோயில்ல ஒரு கை சாய்த்துக் கொண்டு ஒரு கை தூக்கிக் கொண்டு இருக்கிறதே. அது தானே நான் அந்தத் தெய்வத்தையே நினைத்து, நினைத்து தெய்வமாகிப் போய் விடுகிறேன். மனம் எதை நினைக்குதோ அதுவாக மாறும்.

அதில் வேற இஷ்ட தெய்வம், கஷ்ட தெய்வம் என்றெல்லாம் இருக்கிறது. சுலபமான வழி. ஆனால் கோயிலில் இருக்கிற தெய்வத்தை நினைச்சு தவம் செய்தீர்களென்றால் கூடிய சீக்கிரம் நீங்கள் கல்லாகி விடுவீர்கள். ஏன் சொல்லுங்கள். கோயில்ல தெய்வமா இருப்பது கல் தானே. கல்லையே நினைத்துக் கொண்டு தவம் செய்தால் கல்லாகித்தான் போவோம்.

கண்ணதாசன் தமாசாக ஒரு பாட்டு எழுதி இருக்கிறார். கடவுள் ஏன் கல்லானார் மனம் கல்லாய்ப் போன மனிதர்களாலே. மனம் ஏன் கல்லாய்ப் போச்சு. நன்றாக சிந்தனை செய்து பாருங்கள். குதர்க்கமாகச் சொல்கிறேன் என்று நினைக்காதீர்கள். கடவுள் ஏன் கல்லானார்? மனம் கல்லாய்ப் போன மனிதர்களால். மனம் ஏன் கல்லாப் போச்சுது. கல்லையே நினைத்து நினைத்து மனம் கல்லாப் போச்சுது. இது சரியான வழி அல்ல.

மகரிஷிகள் கண்டு பிடித்தது கடவுளையே நினைத்து நினைத்து கடவுளாகி விடலாம் என்றால் கடவுள் என்றால் என்ன? கடவுளுடைய தத்துவம் என்ன? எது கடவுள்? அப்படித் தான் அவர்கள் சுத்தவெளித் தத்துவத்தைக் கொண்டு வந்தார்கள். வேதாந்தத்தில் ரொம்ப விளக்கமாக இருக்குது. நித்தர்கள் அனுபவமாக சொல்லி இருக்கிறார்கள். வேதாந்திகள் ஆராய்ச்சியில் கொண்டு வந்து சொல்வார்கள். சித்தாந்திகள் அனுபவித்துச் சொல்லி இருக்கிறார்கள். சுத்தவெளி தான் தெய்வம் என்று.

Keep reading

More from the archive

Granthaalayam

அன்பும் சிவமும்

ஸ்ரீ குரு கனக கோவிந்தசாமி அய்யா அவர்களின் உரைக்குஎழுத்து வடிவம் கொடுத்தவர் திருமதி. S. செல்வி அவர்கள்.அன்பு சிவம்இரண் டென்பர் அறிவிலார்அன்பே சிவமாவ…

Granthaalayam

வீடு பேறு

(ஸ்ரீ குரு கனக கோவிந்தசாமி அய்யா அவர்கள் ஆற்றிய உரை - பேச்சு நடையில்) அன்பர்களே! நாம் இறைவனைத் தேடுகிறோம், ஆனால் இறைவன்னா என்ன? என்று தெரியாமலே…

Puthiya Bharathi

சைவமும், அசைவமும்

சென்ற இதழில் வெளியான சைவமும், அசைவமும் என்ற விளக்கங்களைத் தொடர்ந்துமுட்டை சைவமா? அசைவமா?பால் சைவமா? அசைவமா?என்ற கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கான…

KG Sami

தவம் – 36

தன்னால் வாத்யார் வேலைக்குப் போகவே முடியாது என்று தெரிகிறது. ஏனெனில் அவருக்கு வயது நாற்பத்து ஐந்து. அவர் ‘Teacher training’ அல்லது B.Ed., Course-க்கு…

Granthaalayam

உயிர்

ஸ்ரீ குரு கனக கோவிந்தசாமி அய்யா அவர்களின் உரைக்குஎழுத்து வடிவம் கொடுத்தவர் திருமதி. S. செல்வி அவர்கள்.அன்பர்களே!இந்த பிரபஞ்சத்தின் அடிப்படை ஆகாசம்…

KG Sami

தவம் - 3

மிகப் பழங்காலத்தில் பிராணாயாமத்தில் மூலம் அவரவர்களும் தாங்கள் மூலாதாரத்திலிருந்து உயிர்ச் சக்தியை ஆக்கினைச் சக்கரத்துக்குக் கொண்டு வருவார்கள்.…