KG Sami1937 — 2006

என் உத்தம நண்பர் KGS

A remembrance

அருள்நிதி கனக கோவிந்தசாமி என்ற KG சாமி முதன்முதலில் 1968ஆம் ஆண்டில் கேள்விப்பட்டேன். மேலும் அன்பொளி என்ற மாத இதழில் கேள்விபதில் வரும். அதில் அதிக கேள்வி கேட்பவர் KG சாமிதான். சுமார் 30 கேள்விகள் என்றால் அதில் 25 கேள்விகள் அவர்கள் கேட்கும் கேள்வியாகத்தான் இருக்கும். அவரைப் பார்க்க வேண்டும் என்றேன். அவரைப் பார்த்தேன் ஆனால் அவரோடு பேச இயலவில்லை. 1969-ம் ஆண்டு புதுச்சேரி அரியாங்குப்பம், ராதாகிருஷ்ணன் நகரில் ஒரு தவமையத்தை அ.நி.ரங்கநாதன் அ.நி. தட்சிணாமூர்த்தி, அநி. குப்புசாமி அவர்களும் நானும் சேர்ந்து மெய்விளக்கத் தவமையம் என்ற தவ மையத்தைத் தொடங்கினோம். அருள்தந்தை அவர்கள் மாதம் ஒருமுறை அந்த மையத்திற்கு வருவார்கள். அப்போது அவர்கள் உலக அமைதி நோன்பு 3 நாட்களுக்கு மேற்கொள்ள வேண்டும் என்ற விருப்பத்தைத் தெரிவித்தார்கள். மெய் விளக்கத்தத்துவங்களை மானசீக முறையில் கருத்துக்களாகப் பரப்பும் முறையே எந்த நோன்பு. 19-4-1970 முதல் 21-04-1970 வரையிலான அந்தப் புனித நாட்கள் புதுவை மெய்யுணர்வான அன்பர்கள் உள்ளத்தில் நீங்கா நினைவு பெற்ற பொன்னாட்களாகும். காரைக்கால், கடலூர், புதுவை, சென்னையிலிருந்து ஏறத்தாழ 20 மெய்யுணர்வாளர்கள் கலந்து கொண்டார்கள். இந்த மெளன நோன்பில்தான் அ.நி K.G. சாமியைச் சந்தித்தேன். ஆனால் அவரோடு நெருங்கிப் பேச இயலவில்லை.

                பிறகு சில நாட்கள் கழித்து அவர்கள் காரைக்காலில் இருந்து புதுவை GADக்கு மாற்றப்பட்டார். நான் அப்போது Office Supt G.H. ல் பணியாற்றினேன். எங்கள் இருவருடைய நட்பும் ஆழமாய் வேரூன்றியது. அவருடைய முயற்சியால் அரியாங்குப்பத்தில் இயங்கிய மன்றம் புதுவைக்கு மாற்றப்பட்டது. பிறகு எங்களது பெரும் முயற்சியால் முதல்சகாயகல்ப பயிற்சி புதுவைக்கு அடுத்த முதலியார்பேட்டை, குருகிருஷ்ணா கல்யாண மண்டபத்தில் நடந்தது. ஏறத்தாழ 466 பேர்கள் கலந்துகொண்டு பயன் அடைந்தார்கள். நமது அருள் தந்தை அவர்கள் என்னையும் K.G.S. யும் அழைத்துப் பாராட்டி மகிழ்ந்தார்கள்.

எங்கள் நட்பு நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே வந்தது. எங்கு சென்றாலும் அவர்கள் என்னைப் பெரும்பாலும் அழைத்துக் கொண்டே செல்வார்கள். சில சமயங்களில் நான் அவருடன் செல்ல முடியவில்லையென்றால் அ.நி செல்லபெருமாள்தான் அவருடன் செல்வார் K.G.S. அவர்கள் அ.நி.செல்லபெருமாளைச் சொந்தப் பிள்ளையாகவே பாவித்து நடத்திவந்தார். ஒருமுறை நான் அலுவலக காரணமாக டெல்லி செல்ல நேர்ந்தது. அப்போது எனது மூத்த மகள் ஒருபாட்டு போட்டியில் கலந்து கொள்ள நேர்ந்தது. நான் அ.நி.KGS யிடம் ஒப்புவித்து விட்டு சென்றுவிட்டேன். செல்லுவதற்கு முன் அ.நி.KGS அவர்கள் உனது பெண் கண்டிப்பாக போட்டியில் வெற்றி பெற்று உனக்கும் உன் குடும்பத்திற்கும் நல்புகழ் வாங்கித் தருவார். என்று அறுதியிட்டுக் கூறினார். அவர்கள் வாக்குப்படியே அந்தப் போட்டியில் வெற்றிபெற்று முதல் பரிசை புதுவை IG யிடம் வாங்கினாள் எனவே அவர்கள் வாக்குபலிதமாகும் என்று உறுதியாகக் கூறலாம். ஒருமுறை நான் Civil Supplies Dept. Asst Director பணியாற்றிய போது பெரும் சோதனையைச் சந்திக்க நேர்ந்தது. அப்போது Director, Delhiக்கு சென்றுவிட்டார். Dy director ஒரு வாரம் விடுப்பில் சென்று விட்டார். என்னை, என்னுடைய Civil Supplies Dept. Secretary அழைத்து நாளைக்கு உங்கள் Dept க்கு Dehil லிருந்து திடீர் Inspection வரப்போகிறார்கள். நீங்கள் தான் அவர்களைச் சமாளிக்க வேண்டும். தயாராக எல்லா கோப்புகளையும் எடுத்து வாருங்கள் என்று கூறிவிட்டார். இருப்பது ஒரே ஒரு இரவு, என்னால் தனியாக எல்லா கோப்புகளையும் பார்த்து அவர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாது. எனவே அ.நி.KGS யிடம் விஷயத்தைக் கூறினேன். அதற்கு அவர்கள் ஒரு உபாயத்தைக் கூறினார். நீங்கள் Meeting நடக்கும் ஒரு மணி நேரத்திற்கு முன்னால் Secretariat க்குச் சென்று விடுங்கள். நீங்கள் அமர்ந்து கொண்டு பிரணவதவத்தை ஒரு அரை மணி நேரத்திற்குக் குறையாமல் செய்யுங்கள். இந்தத் தவத்தை நமது அருள்தந்தையை முன் நிறுத்திச் செய்யுங்கள். நானும் என் அருள் அலையை உங்களிடம் செலுத்துகிறேன், என்றார்கள். துணிச்சலுடன் தவத்தை மனதில் நிறுத்தி Meeting நடக்கும் முன் அறையில் அமர்ந்தே. Meeting நடக்கும் முன், என்னை என் Secretary அழைத்து நீங்கள் முன் அறையிளேயே அமர்ந்திருங்கள். தேவைப்பட்டால் உங்களைக் கூப்பிடுகிறேன். என்றார்கள். சுமார் ஒன்றரை மணி நேரம் கழித்து, என் Secretary என்னை அவர் அறையிலேயே அமர வைத்து எப்படி இவ்வளவு கேள்விகளுக்கும் சரியான பதிலைக் கூறினார்கள் எனக்கு மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார்கள். எனக்கு ஒன்றுமே கூறஇயலவில்லை.

என்பிள்ளைகளுக்கு அவர்கள் ஒரு ஞானத்தந்தையாக திகழ்ந்து வந்தார்கள். அவர்களுடைய அருளாசிகளாலும் அவர்களுடைய வாழ்த்துக்களாலும், என்பிள்ளைகளுக்கு நல்ல கணவன்கள் அமைந்து அவர்கள் குடும்ப அமைதியைக் காத்து வருகிறார்கள். என் வீட்டிற்கு முதல் மாடி கட்டுவதற்கு அவர்களுடைய யுக்தியும் அவர்களுடைய அருளாசியும்தான். முதல்மாடி கட்டுவதற்குத் தினமும் தவறாமல் சர்வசியதன ஆகக்‌ஷண சங்கற்பம் நம்பிக்கையோடு செய்யுங்கள் என்றார்கள். அதன்படி செய்தேன். கிடைக்க வேண்டிய Loan உம் கிடைத்தது. என் தந்தையினுடைய சொத்தை விற்ற பணமும் சரியான நேரத்தில் கிடைத்தது.

எல்லாம் வல்ல இறையாற்றலின் கருணையும், ஆசானின் அருளாசியும் KGS ன் அருளாசியும் தான் என்னை மகிழ்ச்சியில் திக்கு முக்காடச் செய்தது. அ.நி. K.G.S இன் சமயோசித தன்மையும் அவர்களுடைய வாக்குப் பலிதமும் கண்டு வியந்தேன்.

நான் மதுமேகம் என்ற (Diabetes) நோயால் கடந்த 40 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டு வருகிறேன். அதற்கு நமது அ.நி KGS அவர்கள் 30 ஆண்டுகளுக்கு முன் ஒரு செய்யுளை அமைத்து தினமும் தவம் முடிந்தபின் இந்த செய்யுளைக் கூறப் பணித்தார். அது கீழ் வருமாறு

சிறு நீரில் குருதி தன்னில் சீக்கிரம் இனிப்பு குன்றும், நறுமணம் மாறா கூந்தல் நல்ல சொர்ணத்தோடு உறுதியாய் உடல்நலத்தை வேதாத்திரி வாழ்த்தால் எய்தி பெருசிவேன் நீண்ட ஆயுள் பொருளோடு அருளும் கூட; இந்தச் செய்யுளை தினமும் மணப்பாடம் செய்து வருகிறேன்.

— அ/நி V. ஜானகிராமன் புதுச்சேரி 6 May 2017

More voices

Others who remembered him

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

இறைவனை வேண்டினேன் வாழ்க்கை வளமுடன் வேண்டும் என்று அதற்கு இறைவன் கொடுத்தான் எனக்கு வாழ்க்கை வளமுடன் இருக்க அதோ வேதாத்ரி என தொண்டன் உள்ளார் என்றார். என் குருவின்…

— ச. பூங்கோதை சென்னை

வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்

உள்ளுணர்வுநமது KG ஐயா பயிற்சிக்கு ஒத்துக்கொண்டால் எந்த சூழ்நிலையிலும் தவறாது கலந்து கொள்வார். கிராம மன்றம், பெரிய அறிவுத்திருக்கோயில் என்ற பாகுபாடின்றி…

— A disciple

உயிருள்ளவரை KGS நினைவிருக்கும்

அன்புடையீர், வணக்கம். K.G. சாமி ஐயாவைப் பற்றிய என்னுடைய அனுபவங்களை இங்கு உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் நான் பெரிதும் மகிழ்ச்சி அடைகிறேன். முதலில் ஐயாவுடன்…

— அ/நி, ர. வசந்தி குமாரபாளையம்

குரு பரம்பரையை உருவாக்கியவர் KGS

முன்னுரை:-ஒரு குழந்தையை கண்டு பெற்றோரின் குணாதிசயம் காண்பது போல, மாணவரைக் கொண்டு ஆசிரியரின் திறமையை மதிப்பிடுவது போல ஊழியரைக் கொண்டு முதலாளியை எடைபோடுவது போல,…

— அ/நி V.S. பிரபாகரன் ஊத்துக்குளி

மனவளக்கலையை வளர்த்த பெரியவர் KGS

நான் மனவளக்கலை மன்றத்தில் 1983 ஆம் ஆண்டு பயிற்சிக்குச் சேர்ந்தேன். அய்யாவோடு முதல் சந்திப்பு 1986 இல் ஈரோட்டில் நிகழ்ந்தது. அப்போது ஈரோடு மன்றத்தின் சார்பாக…

— அ/நி சுந்தர்ராஜன் திருச்சி

Kavithai - சமர்ப்பணம்

என்னைத் தொட்டே என்னுள் என்கோசுருண்டு கிடந்த சூக்கும சக்தியைத்தங்களின் தவக்கனல் தட்டி எழுப்பியதுகுருவே!உம் ஆற்றலால் புருவ மத்தியில்விழித்தது ஆற்றல்; விழித்தன…

— அ/நி திருவளவன் புதுச்சேரி