KG Sami1937 — 2006

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

A remembrance

இறைவனை வேண்டினேன் வாழ்க்கை வளமுடன் வேண்டும் என்று அதற்கு இறைவன் கொடுத்தான் எனக்கு வாழ்க்கை வளமுடன் இருக்க அதோ வேதாத்ரி என தொண்டன் உள்ளார் என்றார். என் குருவின் அருளும் கிடைக்கப்பெற்றேன். மனவளக்கலை என்ற மாமருந்தும் கிடைக்கப்பெற்றேன். உடல் வளர்க்க உடற்பயிற்சி, மனம் வளர்க்க அகத்தாய்வு. உயிர்வளர்க்க காயகற்பம் பெற்றேன். அதைவிடவும் சேறு பெற்றேன் எப்போது! K.G. சுவாமி ஐயாவின் காயகற்ப மறுபயிற்சி கிடைக்கப்பெற்றேன். மேலும் ஆனந்தம் கொண்டேன். அன்று முதல் காயகற்பத்தின் மகிமை என் உடலையும், உயிரையும் புடம் போட்ட தங்கமாக மாறகண்டேன். இன்றுவரை என் சிந்தையில் கொண்ட தங்கத்தின் சுரங்கத்தைத் தோண்டுவதைப் போன்று உயிரின் ஆழத்தை உணர்ந்துக் கொண்டே இருக்கிறேன் நான். ஐயா, பெயரில் நான் கண்ட விளக்கம்

{K. என்றால் காயம்}

{G. என்றால் கற்பம்}

தெரிந்ததை பகிர்ந்துக் கொண்டேன்

(பிழை இருந்தால் மன்னிக்கவும்)

வாழ்க வளமுடன்

— ச. பூங்கோதை சென்னை 5 Apr 2017

More voices

Others who remembered him

வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்

உள்ளுணர்வுநமது KG ஐயா பயிற்சிக்கு ஒத்துக்கொண்டால் எந்த சூழ்நிலையிலும் தவறாது கலந்து கொள்வார். கிராம மன்றம், பெரிய அறிவுத்திருக்கோயில் என்ற பாகுபாடின்றி…

— A disciple

உயிருள்ளவரை KGS நினைவிருக்கும்

அன்புடையீர், வணக்கம். K.G. சாமி ஐயாவைப் பற்றிய என்னுடைய அனுபவங்களை இங்கு உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் நான் பெரிதும் மகிழ்ச்சி அடைகிறேன். முதலில் ஐயாவுடன்…

— அ/நி, ர. வசந்தி குமாரபாளையம்

குரு பரம்பரையை உருவாக்கியவர் KGS

முன்னுரை:-ஒரு குழந்தையை கண்டு பெற்றோரின் குணாதிசயம் காண்பது போல, மாணவரைக் கொண்டு ஆசிரியரின் திறமையை மதிப்பிடுவது போல ஊழியரைக் கொண்டு முதலாளியை எடைபோடுவது போல,…

— அ/நி V.S. பிரபாகரன் ஊத்துக்குளி

மனவளக்கலையை வளர்த்த பெரியவர் KGS

நான் மனவளக்கலை மன்றத்தில் 1983 ஆம் ஆண்டு பயிற்சிக்குச் சேர்ந்தேன். அய்யாவோடு முதல் சந்திப்பு 1986 இல் ஈரோட்டில் நிகழ்ந்தது. அப்போது ஈரோடு மன்றத்தின் சார்பாக…

— அ/நி சுந்தர்ராஜன் திருச்சி

Kavithai - சமர்ப்பணம்

என்னைத் தொட்டே என்னுள் என்கோசுருண்டு கிடந்த சூக்கும சக்தியைத்தங்களின் தவக்கனல் தட்டி எழுப்பியதுகுருவே!உம் ஆற்றலால் புருவ மத்தியில்விழித்தது ஆற்றல்; விழித்தன…

— அ/நி திருவளவன் புதுச்சேரி

தூங்காமல் தூங்கியவர்

மனவள கலை மாணவ செல்வங்களுக்கு வணக்கம். ஐயா K.G. சுவாமி அவர்களை முதலில் 1978 இல் புதுச்சேரி இராஜா தியேட்டர் அருகே திருமுடி நகரில் அமைந்துள்ள குப்புசாமி ஐயா…

— அ/நி பெ. மூர்த்தி புதுச்சேரி