KG Sami1937 — 2006

வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்

A remembrance

உள்ளுணர்வு

நமது KG ஐயா பயிற்சிக்கு ஒத்துக்கொண்டால் எந்த சூழ்நிலையிலும் தவறாது கலந்து கொள்வார். கிராம மன்றம், பெரிய அறிவுத்திருக்கோயில் என்ற பாகுபாடின்றி அனைத்திற்கும் செல்வார். இடையில் நிறுத்துவதேயில்லை; விதி ஒருமுறை சதி செய்தது சென்னையில் நமது ஐயாவுக்கு பயிற்சி; காலையில் இருந்து ஏனோ தடுமாற்றம்; தவிப்பு 11:30 மணிக்கு சபையிடம் சொல்லிவிட்டு ஆழியாறு விரைகிறார். அந்த நாள் மார்ச் 28 என சொல்லவும் வேண்டுமா? நமது ஐயாவின் உள்ளுணர்வு பொய்க்குமா?

GOD OWN

பொதுவாக கடையில் சாப்பிடாமல் வீடுகளில் சாப்பிடும் வழக்கமுடையவர் நமது KG ஐயா! முதல் முறையாக ஊத்துக்குளி வரும்போது நமது வீட்டிற்கு அழைத்துச் சென்றோம்; ’ஆயில்மில் இது குடோன்’ என விளக்கினோம். உடனே நமது KG ஐயா “God own” ‘Godown’ அல்ல என்றார் தனக்கே உரிய பாணியில்: ஐயா! சிலகாலம் வீட்டிற்கு வருவதை தவிர்த்தார், வினவியபோது –ve அவை இயக்கத்தை சொல்லி சில வழிமுறைகள் சொல்லி கொடுத்தார்; அதை செய்தபின் மீண்டும் வீட்டிற்கு வர ஆரம்பித்தார்; என்னே ஒரு கருணை நமது மண்டபம் அதிகளவில் வேதாத்திரிய திருமணங்களை நடத்திய பெருமை நமது KG ஐயாவையே சேரும், தமிழகம் முழுக்க பல்வேறு திருமணங்களை வேதாத்திரிய தத்துவப்படி சிறிதும் பிசராமல் நடத்திக் கொடுத்தார். நமது திருமணத்தையும் நடத்தி தர பிப்ரவரியில் ஒப்புக் கொண்டார்கள்; பத்திரிக்கை அடித்தாயிற்று. ஜூன் மாதம் திருமணம் என்று; ஆனால் மார்ச் 28ல் மகரிஷி மஹாசமாதி; மே 2 ல் அணுக்க தொண்டரின் சமாதி; ஆனபோதிலும் அதேபத்திரிக்கை எல்லோருக்கும் அனுப்பினோம், பே: சிங்காரவேலு ஐயா நடத்தி கொடுத்தார். சூட்சுமமாய் வந்தார்கள் மகரிஷியும், நமது ஐயாவும். நன்றி ஐயா! நன்றி.

— A disciple 6 May 2017

More voices

Others who remembered him

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

இறைவனை வேண்டினேன் வாழ்க்கை வளமுடன் வேண்டும் என்று அதற்கு இறைவன் கொடுத்தான் எனக்கு வாழ்க்கை வளமுடன் இருக்க அதோ வேதாத்ரி என தொண்டன் உள்ளார் என்றார். என் குருவின்…

— ச. பூங்கோதை சென்னை

உயிருள்ளவரை KGS நினைவிருக்கும்

அன்புடையீர், வணக்கம். K.G. சாமி ஐயாவைப் பற்றிய என்னுடைய அனுபவங்களை இங்கு உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் நான் பெரிதும் மகிழ்ச்சி அடைகிறேன். முதலில் ஐயாவுடன்…

— அ/நி, ர. வசந்தி குமாரபாளையம்

குரு பரம்பரையை உருவாக்கியவர் KGS

முன்னுரை:-ஒரு குழந்தையை கண்டு பெற்றோரின் குணாதிசயம் காண்பது போல, மாணவரைக் கொண்டு ஆசிரியரின் திறமையை மதிப்பிடுவது போல ஊழியரைக் கொண்டு முதலாளியை எடைபோடுவது போல,…

— அ/நி V.S. பிரபாகரன் ஊத்துக்குளி

மனவளக்கலையை வளர்த்த பெரியவர் KGS

நான் மனவளக்கலை மன்றத்தில் 1983 ஆம் ஆண்டு பயிற்சிக்குச் சேர்ந்தேன். அய்யாவோடு முதல் சந்திப்பு 1986 இல் ஈரோட்டில் நிகழ்ந்தது. அப்போது ஈரோடு மன்றத்தின் சார்பாக…

— அ/நி சுந்தர்ராஜன் திருச்சி

Kavithai - சமர்ப்பணம்

என்னைத் தொட்டே என்னுள் என்கோசுருண்டு கிடந்த சூக்கும சக்தியைத்தங்களின் தவக்கனல் தட்டி எழுப்பியதுகுருவே!உம் ஆற்றலால் புருவ மத்தியில்விழித்தது ஆற்றல்; விழித்தன…

— அ/நி திருவளவன் புதுச்சேரி

தூங்காமல் தூங்கியவர்

மனவள கலை மாணவ செல்வங்களுக்கு வணக்கம். ஐயா K.G. சுவாமி அவர்களை முதலில் 1978 இல் புதுச்சேரி இராஜா தியேட்டர் அருகே திருமுடி நகரில் அமைந்துள்ள குப்புசாமி ஐயா…

— அ/நி பெ. மூர்த்தி புதுச்சேரி