KG Sami1937 — 2006

தூங்காமல் தூங்கியவர்

A remembrance

மனவள கலை மாணவ செல்வங்களுக்கு வணக்கம்.

     ஐயா K.G. சுவாமி அவர்களை முதலில் 1978 இல் புதுச்சேரி இராஜா தியேட்டர் அருகே திருமுடி நகரில் அமைந்துள்ள குப்புசாமி ஐயா மனவளக்கலை மன்றத்தில் ஐயாவை சந்தித்து பிறகு படிப்படியாக எல்லா நிலைகளையும் அதாவது ஆக்கினை சாந்தி யோகம் துரியம் துரியாதீதம் மன்றப் பயிற்சிகள் கண்ணாடி பயிற்ச்சி, தீப பயிற்ச்சி, காயகல்ப பயிற்ச்சி, உடற்பயிற்ச்சி, கரும்புள்ளி பயிற்ச்சி எடுத்து ஆழியார்க்கு 5 முறை சென்று மகரிஷியின் (பொள்ளாட்சியில் உள்ள) மேல்நிலை பயிற்ச்சி எடுத்து அருள் நிதி ஆனேன். மற்ற மாணவர்களையும் பல குடும்பங்களையும் மன்றத்தில் இணைத்தேன். இதில் ஆசிரியர் திருவளவன் ஆசிரியர் உஷா கோபால் அவர்களையும் மன்றத்தில் இணைத்தேன், அவர்களையும் அருள்நிதி ஆகினேன். மன்றத்தின் தொடர்பால் செல்வபெருமாள் குடும்பம் மற்ற மன்ற நண்பர்கள் பழக்கம் ஏற்பட்டது. எல்லா குடும்பங்களுக்கும் K.G. சுவாமி ஐயா தன ஆக்கர்ஷ்ன சங்கல்பம் செய்து (அஃதாவது லஷ்மி பூஜை) வார குரு ஓரையில் செய்து பல குடும்பங்களை நல்வழி செய்தார். அவர் உறக்கம் ஓய்வின்றி பல சங்கங்களை திறந்து வைத்து தமிழ்நாடு முழுக்க அருள்நீர் ஊற்றி வளர்த்து வந்தார். எல்லாவற்றிர்க்கும் கூட இருந்து அவருடன் இருந்து வந்தேன். அவர் எங்களை பிள்ளை போல் வளர்த்து வந்தார். நான் அப்போது ரேடியோ டி.வி. பழுது நீக்கும் பணியில் இருந்தேன். இப்பொழுது சித்த வைத்தியம் செய்து கொண்டிருக்கிறேன் K.G.S. சுவாமி ஐயா அவர்கள் மகரிஷியின் அத்தனை பேச்சுகளையும் ஒளிப்பதிவு நாடாவில் (கேசட்) பதிவு செய்து கொண்டு வந்து கொடுப்பார். அவைகளைக் கேட்டு நாங்கள் வாழ்க்கையிள் வழி வகுத்து வாழ்வோம். ஒருமுறை நானும் K.G.S. சுவாமியும் லாஸ்பேட்டை வழியாக வந்துக் கொண்டிருந்தோம். வழியில் 70 வயதான பாட்டி உப்பு விற்றுக் கொண்டு இருந்தாள். கூடை நிறைய உப்பு. சுவாமிக்கு மனம் பதைத்தது. இந்த வயதில் உழைத்து உணவு உண்ண வேண்டும் என்ற நிலையில் இருக்கிறார் என்று மனம் வருந்தினார். பாட்டியின் பாரத்தை குறைக்க அருகே சென்று உப்புக் கூடையை இறக்கி வைத்து 15 படி உப்பை வாங்கிக் கொண்டு அதற்க்குரிய காசை கொடுத்து கூடையை தலையில் தூக்கிவிட்டார். தலை பாரம் குறைந்த பாட்டி மகிழ்ந்து சென்றாள். வீட்டுக்கு வந்து உப்பை மற்ற மாணவர்களுக்கு பகிர்ந்துக் கொடுத்தார். நடந்த விவரத்தை எங்களுக்கு சொன்னார். இதில் சாமியின் தயவு குணம் தெரிந்தது. வேதாத்திரி மகரிஷி பிறந்த இடம் கூட்டுவாஞ்சேரி, K.G. சுவாமி பிறந்தது காரைக்காலில் உள்ள கோட்டுச்சேரி. முதல் மனவளக்கலை மன்றம் அமைத்து பாண்டிச்சேரி. இவருடன் காரைக்கால், திருவாரூர், சேலம், ஈரோடு, சென்னை, திருவான்மயூர், இன்னும் பல இடங்களுக்கு என்னுடன் நண்பர் ஜெயக்கொடி, செல்வ பெருமாள், பாலாஜி (C.D கடை) அவர்களும் வருவார்கள். மன்ற தலைவர் ஜானகிராமன் கிருஷ்ணசாமி ஆசிரியர் நாகராஜன் ஆசிரியர் செல்வ பெருமாள் குடும்பம், தேவிதாசன் குடும்பம், சித்தா மருத்துவர் இராதாகிருஷ்ணன் குடும்பம், உஷா கோபால் குடும்பம், K.G. சுவாமிநினைவாக வாழ்ந்து வருகிறோம்.

தூங்குக தூங்கிச் செயற்பல தூங்கற்க

தூங்காமல் செய்யும் வினை

K.G. சுவாமி ஐயா அவர்கள் மனவளக்கலை அன்பர்களுக்கு ஆசி வழங்கி மகரிஷியோடு தூங்காமல் தூங்கி வாழ்ந்து வருகிறார். அவர் ஆசியோடு வாழ்க வளமுடன் என்று வாழ்த்தி வணங்குவோம்.

இப்படிக்கு,

அருள்நிதி பெ. மூர்த்தி,

49, புதுத் தெரு,

முத்தியால்பேட்டை,

புதுச்சேரி – 3.

Cell No: 9994361005

— அ/நி பெ. மூர்த்தி புதுச்சேரி 6 May 2017

More voices

Others who remembered him

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

இறைவனை வேண்டினேன் வாழ்க்கை வளமுடன் வேண்டும் என்று அதற்கு இறைவன் கொடுத்தான் எனக்கு வாழ்க்கை வளமுடன் இருக்க அதோ வேதாத்ரி என தொண்டன் உள்ளார் என்றார். என் குருவின்…

— ச. பூங்கோதை சென்னை

வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்

உள்ளுணர்வுநமது KG ஐயா பயிற்சிக்கு ஒத்துக்கொண்டால் எந்த சூழ்நிலையிலும் தவறாது கலந்து கொள்வார். கிராம மன்றம், பெரிய அறிவுத்திருக்கோயில் என்ற பாகுபாடின்றி…

— A disciple

உயிருள்ளவரை KGS நினைவிருக்கும்

அன்புடையீர், வணக்கம். K.G. சாமி ஐயாவைப் பற்றிய என்னுடைய அனுபவங்களை இங்கு உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் நான் பெரிதும் மகிழ்ச்சி அடைகிறேன். முதலில் ஐயாவுடன்…

— அ/நி, ர. வசந்தி குமாரபாளையம்

குரு பரம்பரையை உருவாக்கியவர் KGS

முன்னுரை:-ஒரு குழந்தையை கண்டு பெற்றோரின் குணாதிசயம் காண்பது போல, மாணவரைக் கொண்டு ஆசிரியரின் திறமையை மதிப்பிடுவது போல ஊழியரைக் கொண்டு முதலாளியை எடைபோடுவது போல,…

— அ/நி V.S. பிரபாகரன் ஊத்துக்குளி

மனவளக்கலையை வளர்த்த பெரியவர் KGS

நான் மனவளக்கலை மன்றத்தில் 1983 ஆம் ஆண்டு பயிற்சிக்குச் சேர்ந்தேன். அய்யாவோடு முதல் சந்திப்பு 1986 இல் ஈரோட்டில் நிகழ்ந்தது. அப்போது ஈரோடு மன்றத்தின் சார்பாக…

— அ/நி சுந்தர்ராஜன் திருச்சி

Kavithai - சமர்ப்பணம்

என்னைத் தொட்டே என்னுள் என்கோசுருண்டு கிடந்த சூக்கும சக்தியைத்தங்களின் தவக்கனல் தட்டி எழுப்பியதுகுருவே!உம் ஆற்றலால் புருவ மத்தியில்விழித்தது ஆற்றல்; விழித்தன…

— அ/நி திருவளவன் புதுச்சேரி