KG Sami1937 — 2006

மகிழ்ச்சிக் கண்ணீர்

A remembrance

இந்த நூலுக்கு உலக சமுதாய சேவா சங்கத்தின் தலைவர் பெருமதிப்பிற்குரிய S.K.M. அவர்களிடம் இருந்து வாழ்த்துரை கிடைக்கப்பெற்றதை நினைந்து நினைந்து மகிழ்ச்சிக் கண்ணீர் வடிக்கின்றேன்.

அதற்கான பொறுப்பை ஏற்று வெற்றிகரமாக அதைச் செயல்படுத்தியவர் பேராசிரியர், புதுச்சேரி நாட்டு நலப்பணித்திட்ட இணைப்பு அலுவலர் முனைவர் கோவிந்தசாமி அவர்கள்தாம். அந்த இனியவர் திரு SKM அவர்களை நேரில் இல்லத்தில் சந்தித்து வாழ்த்துரையை பெற்றுத் தந்தார்.

வாழ்த்துரை எம் கைக்கு வந்த மறு நாளே திரு SKM அவர்கள் புதுச்சேரிக்கு வந்திருந்தார். அதைக் கேள்வியுற்று அய்யா அவர்களை Hotel Accord தங்கும் விடுதியில் சந்திக்கும் வாய்ப்பினை அருட்பேராற்றல் வழங்கியது அய்யா SKM அவர்களின் சந்திப்பை ஏற்படுத்திக் கொடுத்த அருட்பேராற்றலின் வல்லமையை என்னென்று சொல்வது?

எந்த ஒரு பந்தாவும் இன்றி எளிமையாகக் காட்சி அளித்தார் SKM அவர்கள் இந்தத் தொகுப்புப் பணியைப் பாராட்டினார். புதுச்சேரியில் உள்ள K.G.S அவர்களின் பிள்ளைகளின் நலம் விசாரித்தார். பின்னர் உலக சமுதாய சேவா சங்கத்தின் எதிர்காலம் செயல்பாடுகள் பற்றியும் விவரித்தார். மொத்தத்தில் இந்த நூலாக்கப் பணிக்கு மிகப்பெரும் அங்கீகாரம் கிடைத்தமையை எண்ணி ஆனந்தக் கண்ணீர் வடிக்கின்றேன்.


நன்றிக் கண்ணீர்

                முதலில் இந்நூலைத் தம் தலைமையின் கீழ் இயங்கும் மன்றத்தின் சார்பாக வெளியிட முன் வந்து முழு ஆதரவளித்த தலைவர், அருள்நிதி V. ஜானகிராமன் அவர்களுக்கு என்முதற்க்கன் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். சென்ற ஆண்டு அய்யா KGS அவர்களின் நினைவு நாளில் இப்படியொரு நூல் வெளியிடும் கருத்தைத் தெரிவித்த போது உடனே ஏற்று அறிவித்த செயலர் செளந்தரராஜன் அவர்களை என்றும் மறவேன்

                ஆன்மீக அன்பர்கள், அய்யா KGS அவர்களால் வளர்ச்சியடைந்துள்ள மனவளம் கலைப் பேராசிரியர்கள், பயனடைந்த மன்றம் பொறுப்பாளர்கள், தவச் செல்வர்கள் மற்றும் அருள்நிதியர்கள் ஆயிரம் பேருக்கு மேல் இருப்பார்கள் அவர்கள் அனைவருடைய எழுத்தாக்கமும் இந்நூலில் இடம்பெறச் செய்ய ஏற்ற கால அவகாசம் இல்லை. ஆதலினால் இருபத்தேழு பேருடைய கட்டுரைகளைத் தொகுத்து வழங்கியுள்ளேன்.

                அய்யாவின் சிறப்புகளைப் பெருமைகளைப் பறை சாற்றும் நூல் என்றவுடன் கட்டுரைகளை எழுதி அனுப்பிய வெளியூர் அருள்நிதியர்கள் என் வணக்கத்திற்கு என்றும் உரியவர்கள் ஆவர்.

எளியவனின் இம்முயற்சிக்குத்துணை நின்ற அருளாளர்கள் அனைவரையும் வணங்குகின்றேன். எம் ஞானத்தந்தையை பேராசிரியர் KG சாமி அவர்களோடு தமக்குரித அன்புப் பிணைப்புகளை, அவருடைய அறிவின் திறத்தை எல்லாம் அன்பர்கள் தம் கட்டுரைகளில் கொட்டி வைத்துள்ளனர்.

திருநெல்வேலி மன்றப் பொறுப்பாளரும் தலைவருமான அருள்நிதி P.R. சந்திரன் அய்யா KGS அவர்களின் வாழ்வின் கடைசி மணித்துளிகளை என்னிடம் கண்ணீர் மல்கக் கூறீனார். எம் ஞானத்தந்தை அருளாசான் KGS அவர்களைக் காக்கத் தவறிவிட்டோமோ என என்னுள் மிகப்பெரும் உறுத்தல் இருந்துவருகிறது. P.R. சந்திரன் அவர்களின் திருக்கரங்களில்தான் எம் ஆசான் உயிர்விட்டுள்ளார் என்று அறிந்து கண்ணீர் வடிக்கிறோம்.

ஊர்தோறும் ஓடி ஓடிப் போய் பயிற்சிகள் நடத்தி, காய்ச்சல் வந்தாலும் காயகல்பம் நடத்தி, சரியான உணவின்றி உறக்கமின்றி மனவளக்கலை வளர்த்த ஆசிரியப் பெருந்தகை தம் ஆசானோடு ஒன்றிக் கலந்துவிட்டார்.

உலக சமுதாய சேவா சங்கத்தின் செயற்பாடுகளுக்காகத் தன் உயிரையும் கொடுத்துவிட்டார் KGS. மனவளக்கலையை மாபெரும் ஆலமரமாய் வளர்த்துவிட இன்னொரு சீடர், பிறந்து வரப்போவதில்லை. மகரிஷி வாயால் ‘அன்புமகனே’ என்று ஆராதிக்கப்பட்டவர் அய்யா KGS. எழுபதுகளில் மகரிஷி KGS அவர்களுக்கு எழுதிய கடிதங்களில் எல்லாம் ‘என் அன்புமகனுக்கு’ என்றுதான் எழுதியிருப்பார். அந்த அளவிற்கு அருள்தந்தையின் அன்பு மகனாய், முதன்மைச் சீடராய், மனவளக்கலை வளர்க்கும் முதல் தொண்டனாய் ஆனால் புகழ்விரும்பா மேதையாய், காட்சிக்கோ எளியவராய்க் காட்சி அளித்தவர் எம் ஞானத்தந்தை.

இத்தொகுப்பு நூலுக்குக் கட்டுரை அளித்த பெருந்தகைகள், அருள்நிதியர்கள் திருமதி செயலட்சுமி கிருஷ்ணசாமி, தேவன், செயக்கொடி, பெ. மூர்த்தி, பேராசிரியர் சு. பாரதி, அந்தியூர் இரவி, எம்.வி. பாலகுமார், திருமதி யோகேசுவர், திருமதி மலர்விழிராஜன், S. ராமச்சந்திரன், பேராசிரியர் செம்பொருள் அழகன், திருவண்ணாமலை, முரளி, பேரா. கருணாகரன், செஞ்சி நடராஜ பாண்டியன், திருமதி சாந்தி, திருமதி லதா பிச்சாண்டி, திருமதி வசந்தி, ஊத்துக்குளி பிரபாகரன், திரு பூபதி திருமதி ராஜலட்சுமி ராமச்சந்திரன், பேராசிரியர் சுந்தர்ராஜன், திருமதி முத்துச்செல்வி திருமேனி, ஆகியோருக்கெல்லாம் என் அகங்களிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்நூலாக்கத்தின் போது, அவ்வப்போது தொலைபேசி மூலமாக நல்ல ஆலோசனைகள் வழங்கிய அந்தியூர் அருள்நிதி இரவிக்குமார் அவர்களுக்கு எத்தனைமுறை வேண்டுமானாலும் நன்றி சொல்லலாம். புதுச்சேரி யூகோ வங்கியின் மேலாளராய் இருந்து அண்மையில் பணி நிறைவு பெற்ற பேராசிரியர் செம்பொருள் அழகன் அவர்களின் நெறிகாட்டுதலில் நான் பெரிதும் நெகிழ்ந்துபோனேன். பல அறிவுத்திருக் கோயில்கள் பல ஊர்களில் எழும்பிடக் காரணமாயிருந்த KGS அவர்களின் நிர்வாகத்திறனை அவர் நிறைய கூறியுள்ளார். அவரை நான் நன்றியுடன் வணங்குகிறேன்.

அந்தியூர் காவல்துறை ஆய்வாளர் அருள்நிதி பூபதி அவர்கள் மிகுந்த பணிச்சுமைக்கிடையேயும் எனக்குக் கட்டுரை அனுப்பியிருந்தார். அவருக்கு இதயம்கனிந்த நன்றி. திருச்சிப் பேராசிரியர் சுந்தர்ராஜன், திருநெல்வேலி அன்பர் வீரபாகு ஆகியோருக்கெல்லாம் என் கைகூப்பு. இந்நூலைக் கணினியில் வடிவமைத்து நல்லமுறையில் கொடுத்துள்ள ஆன்மீக இணையர் சரவணன் --------- ஆகியோர்க்கு என் நன்றிகள் பலப்பல.

மேற்கண்ட அனைத்து அன்பர்களுக்கும் எனக்கும் அன்புப்பாலமாய்ச் செயல்பட்ட KGS அவர்களின் தவப்புதல்வர் Dr கனக திருமேனி அவர்களிடம் இந்நூலை ஒப்படைக்கின்றேன்.

2.0.2015                                                                                                                                                                                                                                                               உங்களின் உடன்பிறப்பு

புதுச்சேரி                                                                                                                                                                                                                                                      அருள்நிதி, திருவளவன்

— அ/நி திருவளவன் புதுச்சேரி 6 May 2017

More voices

Others who remembered him

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

இறைவனை வேண்டினேன் வாழ்க்கை வளமுடன் வேண்டும் என்று அதற்கு இறைவன் கொடுத்தான் எனக்கு வாழ்க்கை வளமுடன் இருக்க அதோ வேதாத்ரி என தொண்டன் உள்ளார் என்றார். என் குருவின்…

— ச. பூங்கோதை சென்னை

வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்

உள்ளுணர்வுநமது KG ஐயா பயிற்சிக்கு ஒத்துக்கொண்டால் எந்த சூழ்நிலையிலும் தவறாது கலந்து கொள்வார். கிராம மன்றம், பெரிய அறிவுத்திருக்கோயில் என்ற பாகுபாடின்றி…

— A disciple

உயிருள்ளவரை KGS நினைவிருக்கும்

அன்புடையீர், வணக்கம். K.G. சாமி ஐயாவைப் பற்றிய என்னுடைய அனுபவங்களை இங்கு உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் நான் பெரிதும் மகிழ்ச்சி அடைகிறேன். முதலில் ஐயாவுடன்…

— அ/நி, ர. வசந்தி குமாரபாளையம்

குரு பரம்பரையை உருவாக்கியவர் KGS

முன்னுரை:-ஒரு குழந்தையை கண்டு பெற்றோரின் குணாதிசயம் காண்பது போல, மாணவரைக் கொண்டு ஆசிரியரின் திறமையை மதிப்பிடுவது போல ஊழியரைக் கொண்டு முதலாளியை எடைபோடுவது போல,…

— அ/நி V.S. பிரபாகரன் ஊத்துக்குளி

மனவளக்கலையை வளர்த்த பெரியவர் KGS

நான் மனவளக்கலை மன்றத்தில் 1983 ஆம் ஆண்டு பயிற்சிக்குச் சேர்ந்தேன். அய்யாவோடு முதல் சந்திப்பு 1986 இல் ஈரோட்டில் நிகழ்ந்தது. அப்போது ஈரோடு மன்றத்தின் சார்பாக…

— அ/நி சுந்தர்ராஜன் திருச்சி

Kavithai - சமர்ப்பணம்

என்னைத் தொட்டே என்னுள் என்கோசுருண்டு கிடந்த சூக்கும சக்தியைத்தங்களின் தவக்கனல் தட்டி எழுப்பியதுகுருவே!உம் ஆற்றலால் புருவ மத்தியில்விழித்தது ஆற்றல்; விழித்தன…

— அ/நி திருவளவன் புதுச்சேரி