KG Sami1937 — 2006

ஐயன் KGS அவர்கள்

A remembrance

அருளாசன்வேதாத்திரிமகிழ்ந்தருளிய வேதாத்திர்ய வாழ்வியலை இத்தரணியில் மகிழ்வோடு விதைத்த வித்தகர் கனக கோவிந்தசாமி என்ற KGS மகான். இறை உணர்வில் நிறைந்து வாழ்ந்த வித்தகர் சித்தர் பிரான் இவர்.

மகிரிஷி அவர்கள் அடிக்கடி சொல்வார்கள் என்னையும் கடந்து செல்லுங்கள் என்று. மகிரிஷி அவர்களின் அடி பற்றி அந்த உச்சத்தையும் உள்வரப்பெற்றவர் KGS. அதையும் அடைந்து சித்துக்கள் சித்தியான சித்தரான பின்னரும் தன்னை தனியே காட்டிக்கொள்ளாது வாழ்ந்த பெரும்சித்தரையா கனக கோவிந்தசாமி அவர்கள். சூரியனை மறைக்க சூரியனாலும் முடியாது.

அந்தவித்தகர்தம்அடிக்கேவல்புரிய எம்சிந்தை மிக வழைந்ததாலே என வேதாத்திரி மகிரிஷி ஏவல் புரிவதுமட்டுமே என் வாழ்வின் நோக்கம் என்பதைநிறைவேற்றிநிறைந்தவர். He lived only for serving Maharishi nothing beyond that nothing below that. ஐயன் KGS அவர்கள் chosen to complete his life span also accordingly.

வேதாத்திரி மகிரிஷி அடிபற்றிஅகத்தாய்வு செயல்முறை அதிகமுக்கியம் வலியுறுத்தியவர் KGS. எண்ணம் ஆராய்தல் என்பதற்காக மட்டுமே மூன்று நாள் முழு பயிற்சி நடத்தியவர் பெருஞ்சித்தர் ஐயன் கனக கோவிந்தசாமி. அதை சற்று அழுத்தமாக வலியுருத்தியவர் அந்த அழுத்தம் வலியுறுத்தல் அவர்மீது பயம் கலந்த மரியாதையை ஏற்படுத்தியது. உற்று பழகியவர்களுக்கு தெரியும் அவர் இனியபலா.

எண்ணத்தை ஒழுங்குபடுத்துவதுஉடல் ஆரோக்கியத்துக்கு உகந்ததுஎன்பதை தனது மருத்துவ ஞானத்தோடுபொதிந்துபோதித்தவர் KGS. His concern for health has pushed him to insist for stronger discipline.

ஐயா KGS அவர்கள் நிற்க அதற்குத்தக என்ற வள்ளுவர் வாக்கிற்கு வாழ்ந்து நிறைந்துவழ்ந்த மாமுனிவர்.

குறள் விளக்கம் நல்குவதில் ஐயா அவர்களுக்கு நிகர் ஐயா அவர்களே. வள்ளுவரோடு ஒன்றி உள்நிறைந்து

ஐயா அவர்கள் வழங்கிய விளக்கம் ஊடுருவி உள்ளங்களில், பெரும்தரமாற்றம் ஏற்படுத்தியது. நிர்வாகவியல்

HRM package பற்றி ஐயா அவர்கள் கொடுத்தவிளக்கம் இன்னும் ஒலித்து கொண்டே இருக்கிறது.

குறிப்பில் குறிப்பறிவானை உறுப்பினில்யாதுகொடுத்தும் கொளல். what will be the worth of one own heart or kidney or eye, valuing people both with tangible & intangible reciprocation.

He is worth any price who can professionally execute even unexpressed (however perceived) instruction/direction of the boss for adding larger values. This unique explanation even for administrators spells his indebth invocation of moral.

வேதாத்திரியம், வள்ளுவன், வாழ்வியல் என்ற மும்மரபுகளையும் நிறைவாக உள்ளத்தில் உட்செலுத்தி தன்மாற்றம்தரமாற்றம் ஏற்படுத்தி வான்காந்தகளம் மூலம் இன்றும் வழி நடத்தும் ஐயன்

KGS பாதம் பணிந்து வணங்கி நிறைவு செய்கிறேன். வாழ்க வளமுடன்.

என்றென்ரும் வாழ்க வளமுடன்.

தங்கள் அன்பால் நிறைந்த

செம்பொருள் அழகன்.


— அ/நி Semporulazhagan திருநெல்வேலி 19 Feb 2015

More voices

Others who remembered him

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

இறைவனை வேண்டினேன் வாழ்க்கை வளமுடன் வேண்டும் என்று அதற்கு இறைவன் கொடுத்தான் எனக்கு வாழ்க்கை வளமுடன் இருக்க அதோ வேதாத்ரி என தொண்டன் உள்ளார் என்றார். என் குருவின்…

— ச. பூங்கோதை சென்னை

வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்

உள்ளுணர்வுநமது KG ஐயா பயிற்சிக்கு ஒத்துக்கொண்டால் எந்த சூழ்நிலையிலும் தவறாது கலந்து கொள்வார். கிராம மன்றம், பெரிய அறிவுத்திருக்கோயில் என்ற பாகுபாடின்றி…

— A disciple

உயிருள்ளவரை KGS நினைவிருக்கும்

அன்புடையீர், வணக்கம். K.G. சாமி ஐயாவைப் பற்றிய என்னுடைய அனுபவங்களை இங்கு உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் நான் பெரிதும் மகிழ்ச்சி அடைகிறேன். முதலில் ஐயாவுடன்…

— அ/நி, ர. வசந்தி குமாரபாளையம்

குரு பரம்பரையை உருவாக்கியவர் KGS

முன்னுரை:-ஒரு குழந்தையை கண்டு பெற்றோரின் குணாதிசயம் காண்பது போல, மாணவரைக் கொண்டு ஆசிரியரின் திறமையை மதிப்பிடுவது போல ஊழியரைக் கொண்டு முதலாளியை எடைபோடுவது போல,…

— அ/நி V.S. பிரபாகரன் ஊத்துக்குளி

மனவளக்கலையை வளர்த்த பெரியவர் KGS

நான் மனவளக்கலை மன்றத்தில் 1983 ஆம் ஆண்டு பயிற்சிக்குச் சேர்ந்தேன். அய்யாவோடு முதல் சந்திப்பு 1986 இல் ஈரோட்டில் நிகழ்ந்தது. அப்போது ஈரோடு மன்றத்தின் சார்பாக…

— அ/நி சுந்தர்ராஜன் திருச்சி

Kavithai - சமர்ப்பணம்

என்னைத் தொட்டே என்னுள் என்கோசுருண்டு கிடந்த சூக்கும சக்தியைத்தங்களின் தவக்கனல் தட்டி எழுப்பியதுகுருவே!உம் ஆற்றலால் புருவ மத்தியில்விழித்தது ஆற்றல்; விழித்தன…

— அ/நி திருவளவன் புதுச்சேரி