KG Sami1937 — 2006

வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!

A remembrance

என்னுடைய மன்றத்தில் K.G.S ஐயா 1996 ஆம் வருடம் எனக்கு முதல்நிலை அகத்தாய்வு வகுப்பு எடுத்தார்கள். அன்றிலிருந்து ஐயாவின் மறைவு வரை அவருடன் பழகவும் பணியாற்றவும் வாய்ப்புக் கிடைத்தது.

                ஐயா எங்கள் குடும்பத்தில் ஒருவராக இருந்தார்கள். துக்கமும், மகிழ்ச்சியையும் அவருடன் பகிர்ந்துக் கொள்வேன்.

                எனது தந்தை பெயர் M. மாரியப்பன் ஒருமுறை அவர்கள் திடீரென்று மனரீதியாகப் பாதிக்கப்பட்டார்கள். எங்கு பார்த்தாலும் பாம்புத் தோற்றம் தெரிவதாகவும் பயந்து, பயந்து கட்டிலடியில், எதாவது மறைவில் ஒடுங்கிக் கொள்வார்கள்.

                மனரீதியாக மருத்துவரை பார்த்து சிகிச்சை எடுத்தும் பலனில்லை. இந்நிகழ்ச்சி நடந்தது வருடம் 2000த்தில் நான் பவானி என்ற ஊரில் பொறுப்பாசிரியையாக அருட்பணியில் இருந்தேன்.

                K.G.S. ஐயாவிடம் அப்பாவின் உடல், மனநிலையைச் சொன்னேன். அப்பாவின் வயது அப்பொழுது 74 கோவில்பட்டி என்ற ஊரில் இருந்தார்கள். ஐயா உடனே அப்பாவை பவானி அழைத்து வா நாம பார்க்கலாம் என்றார்கள்.

அதன்படி அப்பாவும் வந்தார்கள். ஏற்கனவே துரியம்வரை தவம் எடுத்தவர்கள் அப்பா.

                ஐயா என் வீட்டிற்கு வந்து அப்பாவுடன் பேசிக்கொண்டே சாப்பிட்டார்கள். அப்பாவோ சுவரை விட்டு எழுந்து ஓடவே முயற்சித்தார்கள்.

                பின்னர் ஐயா ஒரு அருட்காப்புக் கொடுத்தார்கள். அதிலிருந்து அப்பா அமைதியாக உட்கார்ந்து விட்டார்கள். அதன் பின் அப்பாவின் முதுகு தண்டில் கையை வைத்து ஸ்கேன் செய்வது போல பார்த்து விட்டு என்னையும் பார்க்கச் சொன்னார்கள். எந்த எடத்தில் சூடு தெரிகிறது என்று கேட்டார்கள்.

                நானும் அனாகதத்தில் சூடு தெரிகிறது என்றேன். அவ்வளவு தான் என்று சொல்லிவிட்டு தண்டுவடச் சுத்தி செய்து கையை ஒரு சொடக்கு சொடக்கினார்கள்.

                அந்த நிமிடத்திலிருந்து அப்பாவின் மனநிலையும், உடல்நிலையும் மாறிவிட்டது. இன்று 84 வயது வரை நல்ல மன நிலையுடன் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள்.

                அதோடு மட்டுமல்லாமல் சாத்தூருக்கு அருட்பணிக்குச் சென்றபோது கோவில்பட்டியில் போய் எங்க அப்பாவை பார்த்து வந்தார்கள் ஐயா. ஐயாவை அன்றிலிருந்து தினமும் எங்கள் அப்பா வாழ்த்தினார்கள். அவர் மறைவுக்குப் பின் ஐயாவின் குடும்பத்தை வாழ்த்திக் கொண்டிருக்கிறார்கள்.

                ஐயா ஒரு பலாப்பழம் வெளித்தோற்றம் கரடுமுரடானது உள்ளே ஒரு இனிமையான மனிதர். எந்த உயிர் துன்பப்பட்டாலும் உதவுவது என்ற வேதாத்ரியத்திற்கு இலக்கணமாக வாழ்ந்தவர்.

                நானும், எனது குடும்பத்தாரும் நாள்தோறும் நன்றியுடன் அவரை நினைத்துக் கொண்டிருக்கிறோம். அவரின் குடும்பத்தை வாழ்த்துகிறோம்.

இப்படிக்கு

பே. லதா பிச்சாண்டி

ரங்கராஜாபுரம் டிரஸ்ட்

சென்னை.

                ஐயா திருநெல்வேலிக்குப் போவதற்கு முன் வாரம் புதன்கிழமையன்று ஈரோட்டில் நடந்த பெண்கள் வகுப்பிற்குத் தலைமையேற்றுப் பேசவந்தார். எப்போதும் புதன்கிழமை ஒரு நாள் வகுப்பென்றால் நாங்கள் பெண்கள் அனைவரும் வீட்டிலிருந்து மதிய உணவு கொண்டுவருவோம். KGS பேசுகிறார் என்றால் எங்களுக்கு ஒரே கொண்டாட்டம் தான். நாங்கள் எல்லாம் போட்டி போட்டுக்கொண்டு அவருக்கு உணவளிப்போம். நான் அந்தப் புதனன்று அவருக்காகவே சமைத்து எடுத்துப் போயிருந்தேன். என்னிடம் உணவை வாங்கிக் கொண்டே, “இந்தா பொண்ணு இதான் உங்கிட்ட இருந்து நான் சாப்பிடும் கடைசிச் சாப்பாடு,” என்ற சொல்லிப் பூடகமாகச் சிரித்தார். “அய்யா ஏன் அப்படிச் சொல்றீங்க?” என்றேன்.

                ”நான்தான் எங்க ஊருக்குப் போகப் போறேனே,” என்றாரே பார்க்கலாம்.

                அய்யாவின் அன்றை உரை மிக அற்புதமாக இருந்தது. நாங்கள் அருள்நிதியர்கள் எல்லாம் சூழ அமர்ந்து KGS உடன் சாப்பிட்ட நிகழ்வை என்னால் மறக்க முடியவில்லை.

— அ/நி லதா பிச்சாண்டி சென்னை 31 Mar 2015

More voices

Others who remembered him

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

இறைவனை வேண்டினேன் வாழ்க்கை வளமுடன் வேண்டும் என்று அதற்கு இறைவன் கொடுத்தான் எனக்கு வாழ்க்கை வளமுடன் இருக்க அதோ வேதாத்ரி என தொண்டன் உள்ளார் என்றார். என் குருவின்…

— ச. பூங்கோதை சென்னை

வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்

உள்ளுணர்வுநமது KG ஐயா பயிற்சிக்கு ஒத்துக்கொண்டால் எந்த சூழ்நிலையிலும் தவறாது கலந்து கொள்வார். கிராம மன்றம், பெரிய அறிவுத்திருக்கோயில் என்ற பாகுபாடின்றி…

— A disciple

உயிருள்ளவரை KGS நினைவிருக்கும்

அன்புடையீர், வணக்கம். K.G. சாமி ஐயாவைப் பற்றிய என்னுடைய அனுபவங்களை இங்கு உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் நான் பெரிதும் மகிழ்ச்சி அடைகிறேன். முதலில் ஐயாவுடன்…

— அ/நி, ர. வசந்தி குமாரபாளையம்

குரு பரம்பரையை உருவாக்கியவர் KGS

முன்னுரை:-ஒரு குழந்தையை கண்டு பெற்றோரின் குணாதிசயம் காண்பது போல, மாணவரைக் கொண்டு ஆசிரியரின் திறமையை மதிப்பிடுவது போல ஊழியரைக் கொண்டு முதலாளியை எடைபோடுவது போல,…

— அ/நி V.S. பிரபாகரன் ஊத்துக்குளி

மனவளக்கலையை வளர்த்த பெரியவர் KGS

நான் மனவளக்கலை மன்றத்தில் 1983 ஆம் ஆண்டு பயிற்சிக்குச் சேர்ந்தேன். அய்யாவோடு முதல் சந்திப்பு 1986 இல் ஈரோட்டில் நிகழ்ந்தது. அப்போது ஈரோடு மன்றத்தின் சார்பாக…

— அ/நி சுந்தர்ராஜன் திருச்சி

Kavithai - சமர்ப்பணம்

என்னைத் தொட்டே என்னுள் என்கோசுருண்டு கிடந்த சூக்கும சக்தியைத்தங்களின் தவக்கனல் தட்டி எழுப்பியதுகுருவே!உம் ஆற்றலால் புருவ மத்தியில்விழித்தது ஆற்றல்; விழித்தன…

— அ/நி திருவளவன் புதுச்சேரி