A remembrance
மதிப்பிற்குரிய ஐயா அவர்களுக்கு K. G. சாமி ஐயா எனது வாழ்வில் ஒரு வழிகாட்டியாக இருந்தவர். எனது கணவருக்கு உடல்நிலை ஒரு சமயம் சரியில்லாமல் போய் விட்டது. வயிற்று வலி தாங்கமுடியாத வலி. எல்லாவிதமான டெஸ்ட் மருந்து எண்டாஸ் கோப் பார்த்து டாக்டர்கள் ஒன்றுமில்லை என்று சொல்லி விட்டார்கள். கடைசியாக இவரை மனநோயாளி என்று பட்டம் கட்டி ஒரு பிரச்சனை இல்லை வலி என்று சொல்லி கொண்டு இருக்கிறார். இவரை உடனே I.C.U ல் அட்மிட் செய்து 5 நாள் வைத்திருந்து பிறகுதான் சரியாகும் என்பது போல சொல்லிவிட்டார்கள். என்னால் தாங்க முடியவில்லை. அப்பொழுது நான் மனவளக்கலை பயிற்சியில் அகத்தாய்வு 3 நிலையில் இருக்கிறேன். வாழ்த்து மட்டுமே என்பதை உணர்ந்து வாழ்த்தி கொண்டே இருந்தேன். திடீரென K. G. ஐயா நினைவு வந்தது. (பயிற்சிக்காக எனது வீட்டிற்கு அடிக்கடி வருவார் என் வீட்டில் தான் அவருக்கு புளி, தக்காளி, கடுகு தவிர்த்து உணவு தயார் செய்து கொடுப்பேன்.) எங்கள் மீது பிரியமாக இருப்பார். அவரை கண்டாலே எல்லோரும் பயப்படுவார்கள். பலாச்சுளை போன்றது அவர் உள்ளம் என்பது புரிந்தவர்களுக்கும் மட்டுமே தெரியும். முள் மேலே இருந்தாலும் உள்ளே தீச்சுவை கனி போன்றவர் ஐயா அவர்கள்) உடனே அவருக்கு போன் செய்தேன். ஆஸ்பத்திரிக்கு உடனே ஓடி வந்தார். உடனே அவரை வெளியில் நட்பு கொண்டு வா என்றார். ஆனால் டாக்டர்களே உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்று கையெழுத்து வாங்கி கொண்டு வெளியே விடுவதற்கு ரூ 10000 (2002) வருடம் 1 கேட்பார்கள். எனது உறவினர்கள் எல்லாம் பயங்கரமான சண்டை இந்த தாடிகாரன் பேச்சை கேட்டு வெளியே கூட்டி வந்து என்ன செய்வது என்று ஒரே குழப்பம். நான் குரு நம்பியதை விட K. G. ஐயாவை நம்பினேன். பணத்தை கட்டி வெளியே கூட்டி வந்து ஒரு இடத்திற்கு கூட்டி சென்று கஷாயம் போன்ற ஒன்றை குடிக்க செய்து வாந்தி எடுக்க வைத்தார். பயங்கரமான வாந்தி எடுத்ததும் ஒரு மயக்கம் வந்தது. சுடுதண்ணீர் கொடுத்து வீட்டிற்கு கூட்டி வந்து ஒரு தைலம் தலையில் தேய்த்து சுடுதண்ணீரில் குளிக்க வைத்து ரசம் சாதம் கொடுத்து அருட்காப்பு போட்டு ஒரு எலுமிச்சை கனியை கையில் கொடுத்து வீட்டிற்கு போ. தினமும் வாழ்த்து என்று சொன்னார். ஒரு தாயத்தை கொடுத்து மறுநாள் கட்ட சொன்னார். பிறகு எனது வீட்டுகாரர் நல்ல உடல் நலம் தேறி அப்பொழுது பழைய நிலைமைக்கு வந்தார். இந்த நன்றியை நான் மறந்தேன் என்றால் பாவி அல்லவா. இன்று வரை அவரில் ஒவ்வொரு செயலும் ஓர் அர்த்தம் உள்ளது நினைத்து பார்த்து ஒன்றை நான் சரிசெய்து கொள்வேன். என் குழந்தைகள் முதல் எங்கள் குடும்பமே அவருக்கு நன்றி கடன் பட்டு இருக்கிறோம். எங்கள் வாழ்வில் விளக்கேற்றிய என் தெய்வமாக நாங்கள் நினைக்கிறோம். இன்னும் சொல்ல வேண்டியது நிறைய உள்ளது. நெஞ்சில் உள்ளதை வெளியே சொல்லத் தெரியவில்லை.
— அ/நி A.S. Varadarajan பவானி, ஈரோடு 25 Sep 2014