KG Sami1937 — 2006

கடமை வீரர் K. G. சாமி

A remembrance

     கடமை வீரர் K. G. சாமி ஐயா அவர்களை நான் சந்தித்த ஆண்டு 1994. (10.02.1994). கல்வே பங்களாவில் மன்றம் நடந்து கொண்டிருந்த நேரம், எனது நண்பன் அன்பழகன் மூலம் மனவளக்கலை எனக்கு அறிமுகம் ஆனது. எனக்கு ஞானதீட்சை அளித்தவர் C. கிருஷ்ணசாமி ஐயா அவர்கள் மற்றும் துரியதீட்சை, துரியாதீத தீட்சை அளித்தவர் K. G. சாமி ஐயா அவர்கள். எனது வீடு இலாஸ்பேட்டையில் உள்ளதால், K. G. S. ஐயாவின் வீட்டில் நடைபெறும் வாராந்திர கூட்டு தவத்தில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அப்பொழுது தான் ஐயாவின் சொற்பொழிவுகளைக் கேட்கும் வாய்ப்பு அதிகரித்தது அவர்கள் வீட்டில் கூட்டு தியானம் ஒவ்வொரு வாரம் செவ்வாய் கிழமை தோறும் மாலை 7 மணிக்கு கூட்டு தியானம் சொற்பொழிவு அவர் வீட்டின் ஹாலில் நடைபெறும். பல பகுதிகளில் இருந்து அன்பர்கள் கலந்து கொள்வார்கள். சில மாதங்களுக்குப் பிறகு காலையிலும் கூட்டுத் தவம் நடைபெற்றது. அதிலும் கலந்துகொள்வோம். ஐயா அவர்கள் நாங்கள் காலை 6.30 மணி தவத்திற்குச் செல்வதற்கு முன்பாக உடற்பயிற்சிக் கலை செய்து முடித்துவிட்டு பின் தவத்தை தொடங்குவார்கள். அவர்களிடம் நான் கற்றுக் கொண்டது நாள் தவறாமல் உடற்பயிற்சி, தவம் செய்யும் பழக்கம் எனது சிறு வயது முதல் பழக்கமானது. அவரின் சொற்பொழிவுகளில் அவர் அன்றாட வாழ்க்கையில் தான் கற்றறிந்த தத்துவங்கள் எந்த எந்த வழிகளில் பயன்படுத்துவது, எப்படி பயன்பட்டது போன்ற வாழ்க்கை தத்துவத்தை எளிய முறையில் உணர்த்தி விளங்க வைப்பார்கள்.

     ஒரு சமயம் அன்னை லோகாம்பாள் அவர்கள் உடல் நலம் (94) குன்றியிருந்த சமயம். அவர்களை காண மன்றத்து அன்பர்கள் 30 பேர் இருக்கும் அவர்களுடன் நானும் எனது அம்மாவும் சேர்ந்து கூடுவாஞ்சேரி புறப்பட்டுச் சென்றோம். முதன் முதலாக அன்னை லோகாம்பாளை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. பல நாட்கள் கோமா நிலையில் இருந்த அன்னை லோகாம்பாள் அவர்கள் அன்று கண் விழித்து எங்கள் அனைவரையும் பார்த்து டீ குடித்துவிட்டு செல்லுமாறு கூறினார்கள். அந்த நிலையிலும் அவர்களின் தாயுள்ளம் எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. பின் நாங்கள் அனைவரும் அருள்தந்தையைக் காண திருவான்மியூர் சென்றோம். அப்பொழுதெல்லாம் சுவாமிஜி 6 மாதம் இந்தியாவிலும் 6 மாதம் மற்ற நாடுகளுக்கும் பயணம் செய்து தனது தொண்டு செய்து வருவார்கள், எங்களோடு வந்த பெரும்பாளோரில் சுவாமிஜியை முதன்முதலாக பார்க்கும் வாய்ப்பை ஏற்படுத்தி தந்தவர் K.G.S. ஐயா அவர்கள். சுவாமிஜியைக் காண அனைவரும் திருவான்மியூர் உள்ள தலைமை மையத்திற்கு சென்றோம். சுவாமிஜி மாடியில் இருப்பதாகக் கூறினார்கள். மேல் சென்று அனைவரும் அமர்ந்தோம். சிறிது நேரத்தில் சுவாமிஜி வந்தார்கள். அனைவரும் மிக்க மகிழ்ச்சி மாதா, பிதா, குரு, தெய்வம் என்று சொல்லும் வரிசையில் தனக்கு இறை நிலையைத் தெய்வத்தை உணர்த்திய குருவை கண்ட மகிழ்ச்சியில் மௌனமாக அமர்ந்திருந்தோம். அப்பொழுது சுவாமிஜி ஒவ்வொருவராக பெயரை கேட்டார்கள். அப்பொழுது முதன் முதலாக என்னையும் கேட்டார்கள் அப்போது எனது பெயர் தேவன் என்று நான் சொன்னேன். அதற்கு சுவாமிஜி என்ன தேவன் என்று மீண்டும் கேட்டார்கள். அப்பொழுது தான் புரிந்தது தான் எந்த நிலை வரை பயிற்சி எடுத்துள்ளேன் என்பதை அறிந்து கொள்ள கேட்ட கேள்வி என்று. மீண்டும் நான் அருள்நிதி தேவன் என்று சொன்னேன், தாழ்ந்த குரலோடு அதற்கு சுவாமிஜியின் பதில் ‘நீ உணவு அதிகம் சாப்பிட வேண்டும்’ என்று கூறினார்கள். இதைக் கேட்ட எனது அம்மாவிற்கு மிக்க மகிழ்ச்சி ஒவ்வொரு தாய்க்கும் தன் மகன் நன்றாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருப்பது இயல்புதானே. அதுவும் ஒரு மகானின் வாயில் இருந்து வந்த வார்த்தை சாதாரன வார்த்தை அல்ல இறைவனின் வார்த்தை அல்லவா அது. இவ்வாறு சில நிமிடங்கள் கழிந்தன. இதற்கு இடையில் K.G.S.  ஐயா அவர்கள் சுவாமிஜியிடம் கண்ணமாளும் வந்துள்ளார் என்று கூற (கண்ணம்மாள் K.G.S. ஐயாவின் மனைவி) அதற்கு சுவாமிஜியின் பதில், பசுவுக்குத் தெரியாதா தனது கன்று எங்கு உள்ளது என்று. எங்களோடு வந்த அனைவருக்கும் மிக்க மகிழ்ச்சி, தாய்க்கும் கன்றுக்கும் உள்ள தொடர்பு எங்கள் தொடர்பு என்பதை உணர்த்துகின்றார் குரு. அம்மாவோ கூட்டத்தில் கடைசியாக இருந்ததினால் சுவாமிஜி பார்த்திருக்க வாய்ப்பில்லை என்று K.G.S. ஐயா நினைத்ததினால் தன் மனைவியை அறிமுகப்படுத்துவது தனது கடமையாக கூறியிருக்கலாம். அப்பொழுதுதான் K.G.S. ஐயாவிற்கும் சுவாமிஜிக்கும் எந்த அளவு நெருங்கிய தொடர்பு உள்ளதை உணரமுடிந்தது.

     K.G.S. ஐயா நினத்திருந்தால் தானும் தன் மனைவியும் தனியாக சென்று பார்த்துவிட்டு வந்திருக்கலாம். ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை தனது மன்றத்து அன்பர்களும் குருவை சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தார். அதனால் தான் அவரின் பூத உடல் மறைத்தாலும் அவரின் தொண்டுள்ளத்தை பாண்டிச்சேரி மக்களால் மறக்க முடியாது.

     அது மட்டும் அல்ல சுவாமிஜியின் தத்துவங்களை உள்ளது உள்ளவாறு ஆணித்தரமாக எடுத்துக்கூறும் ஆழ்ந்த தத்துவஞானம் பெற்றவர். சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் மதிக்கும் தன்மை கொண்டவர் ஆனால் தான் கற்ற வித்தையாகிய சுவாமிஜியின் பயிற்சியை மதிக்காதவர்களை அவர் ஒரு பொழுதும் ஏற்றுக்கொள்வதில்லை. எடுத்துக்காட்டாக அகத்தாய்வு பயிற்சியின் பொழுதும் ஏற்றுக்கொள்வதில்லை. எடுத்துக்காட்டாக அகத்தாய்வு பயிற்சியின் பொழுது ஒரு சில வகுப்பிற்கு வராதவர்களுக்கு அவர் சான்றிதழ் வழங்குவதில்லை மீண்டும் அடுத்த முறை நடக்கும் பயிற்சியில் கலந்து கொண்ட பிறகே அவர்களுக்குச் சான்றிதழ் வழங்குவார். அது மட்டுமல்ல தானும் 7 மணிக்குத் தொடங்கும் அகத்தாய்வு பயிற்சிக்கு 6.50 க்குள் 10 நிமிடம் முன்பாக வந்து விடுவார். அவரின் இதுபோன்ற அரிய பண்புகள் எங்களை அவர்பால் ஈர்த்தன. செய்வதைத்தான் சொல்வார், சொல்வதைத்தான் செய்வார். உண்மையைக் கடைபிடிப்பது எளிது என்பதை அனைவருக்கும் உணர்த்தியவர் K.G.S. ஐயா அவர்கள்.

     ஐயா அவர்கள் அன்று போட்ட விதைகள்தாம் இன்று பல ஊர்களில் பேராசிரியர்கள் உருவாக காரணமாக அமைந்துள்ளது. நாங்கள் எந்த ஊர் மன்றத்திற்கு சென்றாலும் அங்குள்ள அன்பர்கள் ஐயாவைப் பாராட்டாமல் இருந்ததில்லை. ஐயா அவர்கள் ஒவ்வொரு சனி, ஞாயிறு வெளி ஊர்களில் உள்ள மன்றங்களுக்குச் செல்வதற்காக, வெள்ளிக்கிழமை காலையிலேயே வேலைக்குப் போகும் போதே தனக்கு வேண்டிய உடைகளை எடுத்துக்கொண்டு கிளம்பிவிடுவார். நமக்கெல்லாம் சனி, ஞாயிறு விடுமுறை நாட்கள். ஆனால் ஐயாவிற்கோ வாரத்தின் 7-நாட்களும் ஓய்வில்லாமல் உழைத்தார். அவருடைய டைரியைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது அதில் அவர் எழுதியது அத்தனையும் எந்தெந்த நாள் எந்தெந்த ஊரில் பயிற்சிக்குச் செல்ல வேண்டும் என்பதுதான். சற்றேறத்தாழ 2½  ஆண்டுகளுக்கு முன்பாகவே பயிற்சி தேதி கேட்டு வாங்கி கொள்வார்கள். ஐயா அவர்கள் பயிற்சி நடத்திய நேரத்தோடு அவர் பயணம் செய்த நேரமே அதிகம் இருக்கும். சில ஊர்களில் காயகல்ப பயிற்சிக்காக தேதி வாங்கி இருப்பார்கள். அதற்காக அவர் இரவு முழுக்கப் பயணம் செய்து செல்ல வேண்டியிருக்கும். அது மட்டுமல்ல பல ஊர்களுக்கு பஸ் வசதியே இருக்காது பல மணி நேரம் காத்திருந்து செல்ல வேண்டி வரும். அதை எல்லாம் பொருட்படுத்தாது அவர் பயிற்சி அளித்து வந்தார். அவரைப் பார்க்கும் பொழுது அந்த வயதிலும் இதுபோன்று, நம்மால் செய்ய முடியுமா? என்பது கேள்விக் குறியாகவே உள்ளது.

     ஐயாவின் பணியை தொடர்ந்து அவரின் மகன் கனகதிருமேனி அண்ணன் அவர்களும் சுவாமிஜி விட்டு சென்ற அரிய கலையான ஓமியோபதி மருத்துவத்தைச் சிறப்புற மக்கள் நலம் கருதியே தனது ஓய்வு நேரத்தில் மக்களுக்குத் தொண்டு செய்து வருகின்றார்.

     அது மட்டும் அல்ல ஒரு ஆங்கில பழமொழி சொல்வார்கள் ‘பசித்தவனுக்கு மீனை தராதே மீன் பிடிக்கக் கற்றுக்கொடு’ என்று அதுபோலவே திருமேனி அண்ணனும் அரிய உயரிய கலையாகிய ஓமியோபதி கலையை மனவளக்கலை அன்பர்களுக்கு இலவசமாக கற்று கொடுத்து வருகின்றார்கள். பல ஊர்களுக்கு சென்று ஓமியோபதி பயிற்சி அளித்து வருகின்றார். அவரின் பணி சிறக்க நாம் அனைவரும் வாழ்த்துவோம். வாழ்க வளமுடன், வாழ்க வளமுடன், வாழ்க வளமுடன்.

— அ/நி தேவன் புதுச்சேரி 6 May 2017

More voices

Others who remembered him

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

இறைவனை வேண்டினேன் வாழ்க்கை வளமுடன் வேண்டும் என்று அதற்கு இறைவன் கொடுத்தான் எனக்கு வாழ்க்கை வளமுடன் இருக்க அதோ வேதாத்ரி என தொண்டன் உள்ளார் என்றார். என் குருவின்…

— ச. பூங்கோதை சென்னை

வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்

உள்ளுணர்வுநமது KG ஐயா பயிற்சிக்கு ஒத்துக்கொண்டால் எந்த சூழ்நிலையிலும் தவறாது கலந்து கொள்வார். கிராம மன்றம், பெரிய அறிவுத்திருக்கோயில் என்ற பாகுபாடின்றி…

— A disciple

உயிருள்ளவரை KGS நினைவிருக்கும்

அன்புடையீர், வணக்கம். K.G. சாமி ஐயாவைப் பற்றிய என்னுடைய அனுபவங்களை இங்கு உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் நான் பெரிதும் மகிழ்ச்சி அடைகிறேன். முதலில் ஐயாவுடன்…

— அ/நி, ர. வசந்தி குமாரபாளையம்

குரு பரம்பரையை உருவாக்கியவர் KGS

முன்னுரை:-ஒரு குழந்தையை கண்டு பெற்றோரின் குணாதிசயம் காண்பது போல, மாணவரைக் கொண்டு ஆசிரியரின் திறமையை மதிப்பிடுவது போல ஊழியரைக் கொண்டு முதலாளியை எடைபோடுவது போல,…

— அ/நி V.S. பிரபாகரன் ஊத்துக்குளி

மனவளக்கலையை வளர்த்த பெரியவர் KGS

நான் மனவளக்கலை மன்றத்தில் 1983 ஆம் ஆண்டு பயிற்சிக்குச் சேர்ந்தேன். அய்யாவோடு முதல் சந்திப்பு 1986 இல் ஈரோட்டில் நிகழ்ந்தது. அப்போது ஈரோடு மன்றத்தின் சார்பாக…

— அ/நி சுந்தர்ராஜன் திருச்சி

Kavithai - சமர்ப்பணம்

என்னைத் தொட்டே என்னுள் என்கோசுருண்டு கிடந்த சூக்கும சக்தியைத்தங்களின் தவக்கனல் தட்டி எழுப்பியதுகுருவே!உம் ஆற்றலால் புருவ மத்தியில்விழித்தது ஆற்றல்; விழித்தன…

— அ/நி திருவளவன் புதுச்சேரி