A remembrance
எல்லாம் வல்ல இறை அருளாலும், குரு அருளாலும் பேரா. K.G. சாமி அய்யா அவர்களின், ஆன்மிக சேவையை நினைவு கூர்ந்து எழுத முற்படுகிறேன் K.G.S. தெய்வீக ஆன்மா உதவ வேண்டும், என K.G.S-ன் திருமேனியை நினைந்து வணங்குகிறேன் ஐயா.
நான் தற்போது ஈரோடு மாவட்டம், அந்தியூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறேன். கடந்த 1996 முதல் 1999 வரை அந்தியூரில் பணியாற்றி இருக்கிறேன். அப்போது அந்தியூரில் மனவளக்கலை தவமையம் இல்லாததால் அன்பர்கள் உதவியுடன் மன்றம் அமைத்து அதன் பொறுப்பாசிரியராக பேரா. K.G. சாமி ஐயாவின் ஆன்மீக சேவை மிகவும் இனிப்பாக இருந்தது. அவரை அடிக்கடி அந்தியூர் மன்றத்துக்கு வரவழைப்போர் அவரின் சொற்பொழிவு என்றால் மன்றத்தில் கூட்டம் நிறைந்திருந்தது.
ஒருமுறை மன்ற அவையில் ஒருவர் சாமி அய்யாவிடம், ஐயா என் மகளுக்கு கல்யாண வயது ஆகியும் கல்யாணம் ஆகவில்லை. அவருக்கு ஏதோ காத்து (ஆவி) பிடித்திருக்கும் போல் இருக்கிறது. நான் மிகவும் சிரமத்துடன் இருக்கிறேன். நீங்கள் ஏதாவது உதவி செய்ய முடியுமா என்று கண்ணீர் மல்க வேண்டினார், உடனே அய்யாவும், உன் வீட்டில் தவமும், சங்கல்பம் செய்து தருகிறேன் சரியாகிவிடும் என சொல்லி, அதற்கான நாள் குறிப்பிட்டும் அந்த நாளில் வந்து அந்த அன்பரின் வீட்டில் தங்கினார். வீட்டின் உள் அறையில் அய்யாவும், வெளி ஹாலை அண்ணன், அவர் மனைவி, அவர் மகன் ஆகியோர் தூங்கியுள்ளனர். இரவு நடு நசி 1 மணிக்கு அந்த அன்பரின் மகன் அன்பரின் தலைமாட்டில் விகாரமாக உட்கார்ந்து கொண்டு, தன் அப்பாவை ஏய், ஏய் என கூப்பிட்டு எழுப்பி, டேய் அந்த சாமியாரை வீட்டைவிட்டு போக சொல் காலையில் வீட்டில் பூஜை செய்தாள் நான் உன்னை கொன்று விடுவேன் என மிரட்டியுள்ளான். அந்த அன்பரும், அவர் மனைவியும் மிகவும் பயந்துள்ளனர். இதை காதில் கேட்ட K.G. ஐயாவும் எழுந்து போய் அந்த பெண்ணிடம் வந்து உட்கார்ந்து என்னை எதற்காக பூஜை செய்ய வேண்டாம், எனவும் வீட்டை விட்டு போக சொல்கிறாய் என கேட்க அந்த பெண் K.G. யிடம் பதில் சொல்லாமல், அவர் அப்பாவையே மீண்டும் மிரட்டியுள்ளது. ஐயாவும் ஆழ் நிலையைல் அந்த பெண்ணை, ஆக்கினை, மூலாதூரத்தை தொட்டும் பாஸஸ் பார்சொல் கொடுத்தார். சாமி விசாரித்த அந்த பெண்ணை பிடித்த ஆண் ஆவி சாமி K.G.யிடம் பேசினார். அப்போது அந்த பெண் குரல் மாறி ஆணின் குரல் கலந்து வந்து. எங்களுக்கு விந்தையாக இருந்தது. என் பெயர் K.G. சாமி, நான் வேதாத்திரி மகரிஷியின் சீடன், என்னிடம் உண்மையைச் சொல் உனக்கு உதவி செய்கிறேன் என சொல்ல, அதற்கு அந்த பெண்ணிடம் இருந்த ஆவி தான் ஆண், என்று சொல்லி, என்னை சிலர் ஏவி விட்டு, அவர்கள் சொல்வதை சொல்ல சொல்கிறார்கள்; மறுத்தால் என்னை மாவு பிண்டத்தில் வைத்து ஊசியால் குத்தி சித்ரவதை செய்கிறார்கள் என சொல்லி அழுதது. அவ்வாறு செய்தவர்களை சொல்ல மறுத்துவிட்டது. உடனே சாமியும் அந்த ஆவியை சாந்தபடுத்தி அப்போதே “அற்பசாந்தி” தவம் செய்தும் அந்த ஆவியை, சாந்தி கலந்தோட்டு கலந்துவிட்டு அதற்கு விமோச்சனமும், அந்த பெண்ணிற்கு விடுதலையும் உடனே செய்தார். இந்த நிகழ்வு நெஞ்சில் நீங்கா இடம் பெற்றுள்ளது. அடுத்து 6 மாதத்திற்குள் அந்த பெண்ணிற்கு திருமணம் ஆகி குழந்தகள் பெற்று நலமுடன் வாழ்கிறார்.
இப்படிக்கு
அ/நி. P. பூபதி. உ. ஆ
அந்தியூர்
ஈரோடு மாவட்டம்
சில நாட்களுக்கு பிறகு, அந்தியூர் மன்றத்தில் தீட்சை பெற்ற பெண் ஒருவர் குற்றாலம் என்ற ஊரில் குடும்பத்துடன் குடியிருந்து வந்துள்ளார். இவரின் உடலை, அளவுக்கு அதிகமான சக்தி உருவாவதாலும், அதனால் தன் பக்கத்தில் தன் குழந்தைகள் கூட தூங்க மறுப்பதாகவும் அதனால் குடும்ப வாழ்க்கை பரிபோய்விடுமோ என பயந்து ஒரு யோகிநிலை அணுகி சொல்லியுள்ளார். அவரும் அந்த பெண்ணுக்கு சாந்தியாக தவம் நன்கு செய்ய வைத்தும் பலன் இல்லாததால் அந்த பெண்ணிடம் நீ தீட்சை வாங்கிய நபரிடம் சாந்தி தவ “டச்” கொடுத்தால் உனக்கு உடல்நிலை சரியாக வாய்ப்புள்ளது என சொல்லியுள்ளார். உடனே அந்த பெண்ணால் தன் அம்மா வீட்டுக்கு போகிறேன் என்று சொல்லிவிட்டு அந்த பெண்ணுக்கு நான் தீட்சை கொடுத்தேன் என்பதற்காக, என் வீட்டிற்கு வந்து விவரம் சொன்னார். எனது கையை பிடித்து, அவனை உள்ளங்கையோடு வைத்தார். எனக்கு கரண்ட் சாக் அடிப்பது போல் ஏதோ ஆற்றல் விர் என பாய்ந்தது. மேலும் வீட்டில் ஓடிய சீலிங் பேனை ஒரு பாயிண்டில் வைத்து அதை அந்த பெண் உற்று பார்த்தார். பெண் வீரியம் குறைந்து நிற்கும் அளவுக்கு வந்து. எனக்கும், எனது மனைவிக்கும் இதை பார்த்து மிகவும் ஆச்சரியமாக இருந்தது. உடனே நான் பேரா K.G. சாமி ஐயாவுக்கு தகவல் சொன்னாள். அவரும் அவர் வீட்டிற்கு வரச்சொல்ல, நான் அந்த பெண்ணை அப்பா, அம்மாவையும், வரச்சொல்லி, சாமி அய்யா வீட்டிற்கு அழைத்து சென்றேன். சாமி அய்யாவும் அந்த பெண்ணிடம் பேசினார். சிறிது நேரத்தில், பேசும் போதே பெண்குரலில், ஆண் குரல் தோணி கலந்து வந்தது. அந்த பெண்ணை பிடித்திருந்தவர் தான் வெளிநாட்டுக்காரர் என்றும் தனக்கு தமிழ் ஆங்கிலம் இன்னும் பல பாசை தெரியும் என சொல்லி இந்த பெண்ணுக்கு உதவி செய்ய தான் இந்த பெண்ணுடன் இருக்கிறேன். நான் ஒரு ஆன்மீக ஆர்வம் உள்ளவன் தான் என்றும், என்னால் இந்த பெண் உடலில், காந்த ஆற்றல் கூடிக் கொண்டு தான் இருக்கிறது எந்த பெண்ணின் கை ஒருவரை பார்த்து கீழ் இருந்து மேல் நோக்கி அசைத்தால், குண்டிலியை சக்தி மேலோங்கும் என கூறியுள்ளார். அதை சாந்தப்படுத்தியும், அந்த பெண்ணை சாமி கேட்டார். உன்னுடன் இருப்பது நல்ல சக்தி தான் அதை நீ பயன்படுத்திக்கொள். என சொல்ல அந்த பெண் பயந்து வேண்டாம் என மறுத்தார். அதன் பின் சாமியும், அந்த பெண்ணிடம் இருந்த ஆவியுடன் பேசி, தனக்குள் கொண்டுவந்துப் பின் தவம் மூலம் சக்திகளை கலப்பு செய்துவிட்டார். அந்த பெண்ணிடம் சாமி பேச்சு கொடுத்து என்னிடம் வா என கேட்டபோது, அந்த பெண் சாமியின் இரு கால்களையும் பிடித்து கொண்டார். பின் சக்திகளம் கலப்பு பெற்றவுடன் அந்த பெண் மயங்கிவிட்டார். சிறிது நேரம் கழித்து மயக்கம் தெளிந்தபின் நடந்த சமயம் எதுவும் அந்த பெண்ணுக்கு தெரியவில்லை. அதன் பின் தன் உடல் நல்றாக உள்ளது என தெறிவிக்கப்பட்டு, சாமி யின் கால்களில் விழுந்து அழுத காட்சி, அந்த பெண் சந்தோஷப்பட்ட நிகழ்வு இன்னும் சாமியின் ஆன்மீக பலத்தை பறைசாற்றுகிறது. இந்த நிகழ்வு ஒரு சாதாரண மனிதரால் செய்ய இயலாது. K.G. சாமி அய்யா, அவர்கள், மகாசக்தி மனிதர், கொடுத்தவாறு குரு பக்தி கொண்டவர் என்றும் இவரின் அதிசயங்களை எழுத உதவிய சாமியை நினைந்து வணங்குகிறேன்
P. பூபதி. உதவிஆய்வாளர்
அந்தியூர்
ஈரோடு மாவட்டம்
— அ/நி P. பூபதி அந்தியூர் 6 May 2017