A remembrance
குரு வாழ்க குருவே துணை
எங்கள் குடும்பத்தின் நெருங்கிய நட்புடனும், அன்புடனும், தொடர்புடையவர்களில் மதிப்பிற்குரிய KG சாமி ஐயா அவர்களும் ஒருவர்.
எங்கள் அப்பா அருள் நிதி S.M. ராஜாமணி பாளையங்கோட்டை மனவளக்கலை மன்றத்தில் நிர்வாகிகளில் ஒருவர். அப்போது தான் KG சாமி அய்யாவுடன் நட்பும், அன்பும், ஆசியும் எங்கள் குடும்பத்திற்குக் கிடைத்தது.
KG சாமியிடம் நாங்கள் கண்ட நல்ல குணங்கள்
எல்லோருக்கும் எதையும் எதிர்பாராமல் உதவும் பண்பு
எதையும் வெளிப்படையாக உண்மையாக பேசும் சுபாவம்
அவர்களால் முடிந்த உதவி எல்லா வகையிலும்
எனக்குத் திருமணமானது சாமி கொடுத்த வாழ்த்துதான் காரணம்
திருமணமான பின்பு குழந்தை சுகப்பிரசவத்திற்கு சாமி easy birth மாத்திரைகள் ஹோமியோபதியில் குழந்தை உண்டான 5வது மாதத்திலிருந்து மருந்து கொடுத்தார்கள். 6, 7, 8, 9, மாதங்கள் முறையாக மாத்திரைகள் சாப்பிட்டதின் பலன் – Normal Delivery ஆனது. குடும்பத்தில் எல்லோருக்கும் மகிழ்ச்சி - KG சாமிக்கு அனைவரும் நன்றி கூறினோம். எனது மூத்த பையன் பெயர் ராஜாமணி என்ற வெங்கடேசன். ஒருமுறை சாமி வீட்டிற்கு வந்த போது பையன் பெயர் கேட்டார்கள் அப்பா பெயர் சேர்த்து ராஜாமணி என்ற வெங்கடேசன் என்று சொன்னேன். அப்போது சாமி சொன்னார்கள், ஒரு ராஜாமணியையே சமாளிக்க முடியவில்லை. எதற்கு இன்னொரு ராஜாமணி என்று சொல்லி விட்டார்கள். அப்போது அப்பாவும் உடன் இருந்தார். ஒன்றும் சொல்லவில்லை.
எங்கள் அப்பா அருள்நிதி ராஜாமணி அவர்கள் 4 வருடம் தொடர்ந்து மெளன விரதம் இருந்தார்கள். அப்பா 20 வருடம் இயற்கை உணவு தான் சாப்பிடுவார்கள். தென் மாவட்டங்களில் KG சாமி ஐயா பயிற்சி எங்கு நடந்தாலும் அப்பா சென்று சாமியுடன் தான் இருப்பார்கள். 2 நாள் பயிற்சி முடிந்ததும் சாமியை ஈரோடு அனுப்பிவிட்டுத்தான் எங்கள் வீட்டிற்கு வருவார்கள்.
நான் ஒருமுறை ஈரோடுக்கு சாமி வீட்டிற்குச் சென்ற போது நன்றாக உபசரித்து வீட்டில் சாப்பிடச் சொல்லிப் பின் சாமிக்குள்ள 1 வேஷ்டி 1 சால்வை எல்லாம் எனக்குக் கொடுத்து ஆசீர்வாதம் பண்ணினார்கள். அதை நான் இன்னும் பத்திரமாக வைத்திருக்கிறேன்.
நார்மல் பிரசவமாக குழந்தை பிறப்பதற்கு சாமி சொன்ன மாத்திரைகள் நாங்கள் எங்கள், குடும்பம், நண்பர்கள் அனைவருக்கும் சொல்லி இன்று வரை Normal Delivery ஆக 25 குழந்தைகள் பிறந்துள்ளனர்.
அந்தப் பணியை இப்போது சாமியின் பையன் Dr. திருமேனி அவர்கள் குழந்தைப் பேறு உண்டாவதற்கு மருந்து கொடுத்து நிறைய தம்பதியர்களுடைய குடும்பத்தில், குலம் தழைக்க மருத்துவப் பணி ஆற்றி வருகிறார்கள் என்பது எங்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி தருகிறது.
ஒருமுறை மதுரையில் பயிற்சி 2 நாள் அகத்தாய்வு, சாமி, அப்பா எல்லோரும் பேரா. ராமநாதன் ஐயா வீட்டில் தங்கியிருந்தார்கள். அப்போது எங்கள் அப்பாவிற்கு நெஞ்சு வலி – Heart Attack – வந்து வடமலையான் Hospital Admit ICU நாங்கள் செய்தி கேட்டு மதுரை வரும் வரை எங்கள் அப்பாவுடன் Hospital இருந்தது KG சாமி அய்யா தான் அப்பாவைக் காப்பாற்றியது. எங்கள் குடும்பத்தில் யாரும் KG சாமியை மறந்தது கிடையாது.
அதே போல் KG சாமியைத் திருநெல்வேலியில் Shifa Hospitalல் சேர்த்திருந்தார்கள். அப்போது சாமி கூட Hospital ல் எங்கள் அப்பா இருந்தார்கள். ஆனால் சாமியைக் காப்பாற்ற எங்களால் முடியவில்லை.
என்றும் நன்றியுடன்
அ/நி. ராஜாமணி அய்யா குடும்பத்தினர்
அ/நி S.M.V. Veeraabhagu
— அ/நி இரா. வீரபாகு, திருநெல்வேலி 6 May 2017