KG Sami1937 — 2006

மாமனிதன்

A remembrance

12/01/2000 அன்று எனக்குத் தெரியாது இன்று நான் ஒரு மாமனிதனை சந்திக்கப் போகிறேன் என்று. நெல்லை அறிவுத் திருக்கோயில் திறப்பு விழா மற்றும் மலர் வெளியீடு சம்பந்தமாக ஈரோடு செல்ல நேர்ந்தது. மலர் வெளியீடு சம்பந்தமாக (என்னுடன் வந்த பேராசிரியர் மற்றும் நண்பர்) நாங்கள் Proof Reading செய்து கொண்டிருந்தோம். அப்பொழுது பேராசிரியர் அவர்கள் தனக்குத் தானே எங்களுக்குக் கேட்கும்படி மாமனிதனை விழாவிற்கு அழைத்திருக்கிறோம். அவருக்கு வேண்டிய செளகரியங்கள் மற்றும் பக்குவ உணவு தயாரித்து கொடுக்க வேண்டும். எங்கள் வீட்டில் இந்தமுறை அவரைக் கவனித்துக் கொள்வது கொஞ்சம் கடினம். என்ன செய்யலாம் என்று வினா எழுப்ப, எந்த ஒரு சிந்தனை இன்றி நான் அந்த பொறுப்பை ஏற்றுக்கொள்கின்ற சமயத்தில் அந்த அறையின் கதவு திறக்க மாமனிதன் வர அவர் பாணியில் என்ன நாகராஜன் வாழ்க வளமுடன்! நெல்லையில் நான் எங்கு தங்குகிறேன் என்று வினவ, பேராசிரியர் நாகராஜன் உடனடியாக என்னைக் காட்டி இவர் வீட்டில் தான் தங்கப் போகிறார்கள் என்று கூறி முடிக்கும் முன் தம்பி! உங்கள்பேர்? நான் ராஜமாணிக்கம். உடனடியாக அவர் ராஜமாணிக்கம் வாழ்க வளமுடன்! இந்த நிகழ்வு இரண்டு நிமிடங்களுக்குள் முடிந்தது. அவரோடு மிக அருகாமையில் இருந்த பழகிய அன்பர்களுக்கு இந்தப் பேச்சு புரியும்! ரத்தின சுருக்கம் என்று சொல்வார்கள் அது இதுதான் போலும்.

     என்னை அவருடன் இணத்ததுக் கட்டிபோட்டது இன்னும் பல சந்தர்ப்பங்கள்.

     நெல்லை அறிவுத்திருக்கோயில் விழாவிற்கு வந்தார். எங்கள் வீட்டில் 3 நாட்கள் தங்கி இருந்தார். அவர் பின்னாலேயே பல நாட்கள் ஒரு சேவகனாக சுற்றிக் கொண்டிருந்தேன். உறவின் ஆழம் விரிந்தது. ஒரு காலகட்டத்தில் மற்றும் ஒரு வருடகாலத்தில் அடிக்கடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரிப்பு மற்றும் அவரின் நிகழ்ச்சி நிரல் தெரிந்து கொண்டு பயிற்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு அமைந்தது. தவம் மற்றும் உடல் பயிற்சி செய்கிறேனோ இல்லையோ அவருக்குப் பணிவிடை செய்வது ஒரு கடமையாக செய்ய ஆரம்பித்தேன்.

     வேலையில்லாச் சூழ்நிலையில் ஒருமுறை அவரிடம் ஓய்வு நேரத்தில் பேசிக்கொண்டிருந்தேன். என் மற்றும் என் வேலையில்லா வருத்தத்தைப் பரிமாறிக் கொள்ளும் பொழுது மாமனிதன் சொன்ன அந்த வார்த்தை இன்னும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. மற்றும் இன்றைய நாள் என் தொழில் வளர்ச்சிக்கு அதுதான் energy source அவர் சொன்ன வாக்கியம் “நீ வேனா என் அருளை (தான் செய்த தவத்தை) உன் தொழில் மேம்பாட்டிற்கு உபயோகித்துக் கொள்”

     வருடம் சரியாக ஞாபகமில்லை 2003 அல்லது 2004 என்று தெரியவில்லை. அவர்கள் வீட்டில் பேத்திக்கும், மருமகளுக்கும் நடந்த விபத்தில் சென்னையில் அவர் 15 நாட்களுக்கு மேல் தங்கும்படி நேர்ந்தது. அவருடனேயே வாழும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. ஒரு மனிதன் பெருந்துயரத்தில் இருக்கும் பொழுது ஏற்படும் சிக்கல்களை மனதாலும், பொருளாதாராத்தாலும் எப்படி மீண்டு வருகிறான் என்பதை அணுஅணுவாக அதை உணர்ந்தேன். மனவளக்கலையால் மட்டுமே மற்றும் சரியான மனவளக் கலைஞனால் மட்டுமே உடனடியாக எந்த ஒரு பெருந்துயரத்திலிருந்தும் மீண்டு வரமுடியும் என்பதை எனக்கும் புரிய வைத்தார். அதனால்தான் அவர் எனக்கு மாமனிதனாகவே திகழ்கிறார்.

     என் திருமணம் அவரால் மட்டுமே நடத்தி வைக்கப்பட்டது. எனக்கு இருந்த சிறு குழப்பத்தை ஒரே வரியில் என்மேல் பாரத்தைப் போட்டு ‘இப்பெண்ணை மணந்துகொள் உன் வாழ்வு நன்றாக இருக்கும்” மறுபேச்சு இல்லாமல் 20 மார்ச்சு 2005-ல் திருமணம் முடிந்தது. என்ன ஒரு சின்ன நெருடல் என்றால், என் மகனைப் பார்க்கவில்லை ஆனால் கருவில் இருக்கும்பொழுதே ஆண் குழந்தை என்று சொல்லி வாழ்த்தி தன ஆகர்ஷணம் செய்து வைத்துச் சென்றார். அவருக்கு முன்பே தெரிந்திருக்கும் போல நாம் இருக்க மாட்டோம் என்று. பிற்பாடு அவருக்கு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் ஆங்காங்கு ஏற்பட்ட நிகழ்வுகளில் அவர் அருகாமையில் இருந்து கவனித்துக் கொள்ள, ஆறுதல் சொல்லமற்றும் சேவை செய்யப் பெரும் வாய்ப்பு கிடைத்தது. அது அவருக்கு தேவைப்பட்டது.

     மகரிஷிகளின் (அவர் மகரிஷி என்று ஒருமையில் சொல்ல மாட்டார்) இழப்பு அவரை மேலும் மனதளவில்துயரத்தைக் கொடுத்தது. அவரால் தாங்கிக் கொல்ல முடியவில்லை. என் வீட்டில்தான் கடைசியாக 27 மார்ச் 2006 அன்று சென்னையிலிருந்து கிளம்பிச் சென்றார். அடுத்த நாள் மகரிஷிகள் மகாசமாதி அடைந்தார்.

     மகரிஷிகள் நடத்திய பயிற்சிமுறை மாதிரி நெல்லை தாமிரபரணி அறிவுத்திருக்கோயிலில் வைத்து மெளன ஏற்பாடு செய்யப்பட்டது. அது மே 2006 முதல் ஒருவாரம். பயிற்சியின்நிகழ்வுகளை அவருடன் இணைந்து எனது இல்லத்தில் வடிவமைத்தோம். ஆனால் என்னால் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலை வந்தது. 30 ஏப்ரல் 2006 அன்று அவர் நெல்லைக்கு ரயிலில் பயணம் செய்ய கையில் நான் தொலைபேசியில் தொடர்பு கொள்ளும் பொழுது கடைசியாக என்னிடம் பேசிய வார்த்தை “அப்ப நீங்க பயிற்சிக்கு வரல” நான் ‘ஆமாம்!’ வாழ்க வளமுடன்!” அவரின் மகாசாமாதி 2 மே 2006.

     இந்தக் கட்டுரையை வெகு நாட்களாக என்னிடம் கேட்ட பாண்டிச்சேரி நண்பருக்கு ஏதோ சூழ்நிலையில் கொடுக்க முடியாமலேயே போனது. ஆனால் இன்று 2-05-2015 மாமனிதன் பற்றி புத்தக வெளியீட்டு விழா நீங்கள் ஒரு கட்டுரை கொடுங்கள் என்றார்கள் எனக்கு நல்ல குருவாக, தோழனாக, வாழ்வின் வழிகாட்டியாக இருந்த இருக்கின்ற ஒருவரை பற்றி எழுதுவதற்கு அவரின் நினைவு நாள்தான் சரி என்று இயற்கை தீர்மானம் செய்து பல வழிகளில் என்னை தொடர்பு கொண்டு எழுத வைத்தது! எழுதிவிட்டேன்.

     அவரின் அருகாமையில், அவர் மனதில் நான் இருந்தேன் என்ற பெருமையுடன் என் வாழ் நீள்கிறது. இன்னும் நான் ஒரு நல்ல மனிதனாக வாழ முயற்சியுடன்….

நன்றி ஐயா!

— அ/நி M.V. இராசமாணிக்கம் சென்னை 6 May 2017

More voices

Others who remembered him

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

இறைவனை வேண்டினேன் வாழ்க்கை வளமுடன் வேண்டும் என்று அதற்கு இறைவன் கொடுத்தான் எனக்கு வாழ்க்கை வளமுடன் இருக்க அதோ வேதாத்ரி என தொண்டன் உள்ளார் என்றார். என் குருவின்…

— ச. பூங்கோதை சென்னை

வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்

உள்ளுணர்வுநமது KG ஐயா பயிற்சிக்கு ஒத்துக்கொண்டால் எந்த சூழ்நிலையிலும் தவறாது கலந்து கொள்வார். கிராம மன்றம், பெரிய அறிவுத்திருக்கோயில் என்ற பாகுபாடின்றி…

— A disciple

உயிருள்ளவரை KGS நினைவிருக்கும்

அன்புடையீர், வணக்கம். K.G. சாமி ஐயாவைப் பற்றிய என்னுடைய அனுபவங்களை இங்கு உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் நான் பெரிதும் மகிழ்ச்சி அடைகிறேன். முதலில் ஐயாவுடன்…

— அ/நி, ர. வசந்தி குமாரபாளையம்

குரு பரம்பரையை உருவாக்கியவர் KGS

முன்னுரை:-ஒரு குழந்தையை கண்டு பெற்றோரின் குணாதிசயம் காண்பது போல, மாணவரைக் கொண்டு ஆசிரியரின் திறமையை மதிப்பிடுவது போல ஊழியரைக் கொண்டு முதலாளியை எடைபோடுவது போல,…

— அ/நி V.S. பிரபாகரன் ஊத்துக்குளி

மனவளக்கலையை வளர்த்த பெரியவர் KGS

நான் மனவளக்கலை மன்றத்தில் 1983 ஆம் ஆண்டு பயிற்சிக்குச் சேர்ந்தேன். அய்யாவோடு முதல் சந்திப்பு 1986 இல் ஈரோட்டில் நிகழ்ந்தது. அப்போது ஈரோடு மன்றத்தின் சார்பாக…

— அ/நி சுந்தர்ராஜன் திருச்சி

Kavithai - சமர்ப்பணம்

என்னைத் தொட்டே என்னுள் என்கோசுருண்டு கிடந்த சூக்கும சக்தியைத்தங்களின் தவக்கனல் தட்டி எழுப்பியதுகுருவே!உம் ஆற்றலால் புருவ மத்தியில்விழித்தது ஆற்றல்; விழித்தன…

— அ/நி திருவளவன் புதுச்சேரி