KG Sami1937 — 2006

தவம் – 34

Signed KG Sami

அந்தந்த அளவில் அந்தந்த உறுப்புகள் அந்தந்த வழிகளில் பாதிக்கப்பட்டு ஜீவகாந்தம் இழப்பாகிறது. என்னே, இறைவன் ஜீவகாந்தத்தை செலவு பண்ணுகிற விதமாகவே வைத்து விட்டானே என்று நினைக்காதீர்கள்.

வரவுக்கும் அவன் ஏற்பாடு பண்ணி வைத்திருக்கிறான். எல்லோரும் சந்தோஷப்படுகிற மாதிரி ஒரு விதத்தில் ஜீவகாந்தம் வரவு வைத்திருக்கிறான். அதுதான் சாப்பாடு. சாப்பிட சாப்பிட ஜீவகாந்தம் வரவாகும். முதலிலேயே சொல்லி இருக்கக் கூடாதா என்பீர்கள்.

சாப்பாடு ஜீவகாந்தமாக மாறாது. சாப்பாட்டில் இருக்கக்கூடிய வான் காந்தம் ஜீவகாந்தமாக மாறும். சாப்பிட்டபின் (Digestion, Assimilation) அரைத்துக் கரைத்து ஆகாரத்தை கூழாகும் மாற்றும். ஆகாரக் கூழிலிருந்து சத்துப் பொருளை எடுத்துக் கொள்ளும் இதெல்லாம் வேலை அல்லவா?

ஆகவே உணவின் மூலமாக சத்து வரவாகிறது. உணவைச் சத்தாக மாற்றுவதற்கு ஜீவகாந்தம் செலவாகிறது. இப்படியெல்லாம் நாம் சாப்பிடுகிற சாப்பாடு அதனால் நமக்கு ஜீவகாந்தம் வருகிறதா அல்லது போகிறதா என்ற கணக்கு பார்த்தால் வருவதைவிட ’செரிமாணம்’ என்ற வேலைக்கு அதிகமாகத்தான் போகிறது.

நல்ல உணவு, பழ, வகைகள், தாதுச்சத்து நிறைந்த உணவு, இயற்கை உணவுகள் என்று ‘Balanced diet’ என்ற வகையில் உணவைச் சாப்பிட்டு வந்தால் செரிமானம் பண்ணுவதற்குச் செலவாகும் காந்தத்தைவிட வரவாகும் காந்தம் அதிகமாக இருக்கும். உணவின் மூலமாக ஜீவகாந்தம் வருவதை தெரிந்து கொள்ளுங்கள். எனவே பொறுப்பாக சிரத்தையாக சாப்பிடுங்கள்.

அடுத்தது respiration. நாம் காற்றை சுவாசிக்கும் போது காற்றிலே இருக்ககூடிய ஆக்சிஜன், நைட்ரஜன் சேர்ந்து உள்ளே போகிறது. நமது உடல் ஆக்ஸிஜனை retain பண்ணிக் கொள்கிறது. இன்னும் ஏதேதோ சேர்த்து நைட்ரஜனை வெளியே தள்ளி விடும்.

நாம் உள்ளே இழுக்கிற காற்றில் வான் காந்தம் அதிகமாக இருக்கும். உள்ளே போய் வெளியே வருமுன் நமது உடல் பிடித்து வைத்துக் கொள்ளும். வெறும் காற்று வெளியே வந்து விடும். அதற்காக வான் காந்தம் வருகிறது என்பதற்காக பொழுது முழுவதும் ’மாங்கு மாங்கு’ என்று மூச்சு இழுத்துவிட்டுக் கொண்டே இருக்க முடியுமா? அந்த வேலையை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று இறைவன் வைத்து விட்டான். ஒரு நிமிடத்துக்கு 16 மூச்சு என்று விட்டான். செரிமானத்தையும் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று வைத்துவிட்டான்.

அப்போ வான்காந்தம் வருவதற்கான வழி உணவு மட்டும் நீர், மூச்சுக் காற்று. இன்னொரு வழி பூமியின் மத்தியில் இருந்து வரும் கதிர் வீச்சு. பூமிக்கு அடியில் atomic fission (அணுச் சிதைவு) தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது.

ஒரு மூலகம் இரண்டு மூலமாகவோ, அல்லது இன்னொரு மூலமாகவோ மாறுவது தான் atomic fission. இந்த Process-ல் free particles இருக்கும். அது வெளியேறி விடும். அது எந்தக் group-லும் சேராது. பெரும்பாலும் அது நைட்ரஜனாக இருக்கும்.

இந்த free particles அங்கேயே அதாவது பூமிக்கு அடியிலேயே இருக்க முடியுமா? அது இருப்பதிலேயே the lightest particle. அது அங்கேயே நிற்க முடியுமா? பூமிக்கடியில் heavy elements தான் இருக்க முடியும். எனவே free particles அண்ட வெளியை நோக்கி ஓடும்.

அவ்வாறு அது அண்டவெளியை நோக்கி ஓடும்போது நமது உடலைக் கடந்து போச்சுதுன்னா அது pick up  பண்ணிக் கொள்ளும். இந்த உடல் 24 மணி நேரமும் இந்த பூமியில் தான் இருக்கிறது. உடலின் surface எவ்வளவு? அதனால் அதைக் கணக்கில் சேர்த்துக் கொள்ள முடியாது. ஆனாலும் பட்டியலில் சேர்த்துக் கொள்ள வேண்டியது தான் லாபகரமாக, உபயோகரமாக உள்ளது அல்லவா?

இன்னொரு வழி. நான்காவது வழி. இறைவன் ஏற்படுத்திய வழி. உங்களுக்குத் தெரியாமல், உங்களைக் கேட்காமல் உங்களுக்குள் வந்துவிடும். நீங்கள் எந்த atomic medium –இல் இருக்கிறீர்களோ அந்த medium உங்களுக்குள் வந்துவிடும் தெரியுமா?

இரண்டு மணி நேரம் குளத்துக்குள் இறங்கி குளியுங்கள். குளத்துத் தண்ணீர் உங்களுக்குள் வந்துவிடும். ஓஹோ, சளி பிடித்துக் கொள்வதைச் சொல்கிறேன் என்று நினைக்காதீர்கள். கை, கால் விரல்கள் எல்லாம் விறைத்து உப்பினாற் போல் இருக்கும். தண்ணீர் புகுந்ததின் அடையாளம் தான் தோல் வீங்கிப் போனது போல் தோற்றமளிக்கும்.

அதேபோல காற்றும் நமக்குள் வரும். அதைவிட காந்தமும் தாராளமாக உள்ளே போகும். காந்தம் காற்றில் கரைந்திருக்கிற காரணத்தால் நமது உடல் காற்றைத் தொட்டுக் கொண்டிருப்பதால் காந்தம் உள்ளே வரும். 4வது வரவு 4 விதமாக வரவு. 10 விதமாக செலவு. நிகரமாக ஒரு இருப்பு இருக்க வேண்டும்.

அந்த இருப்பு அதிகமாக இருக்க வேண்டும். எவ்வளவு அதிகமாக வைத்திருக்க முடியும். பயிற்சிகள் சில செய்து செயற்கை முறையில் பயன்படுத்தி அதிகமாக வைத்துக் கொள்ள முடியும். அதுதான் ஜீவகாந்தப் பெருக்கப் பயிற்சி.

Keep reading

More from the archive

KG Sami

தவம் - 46

உடலுக்கு நோய், மனதுக்கு பைத்தியம், வாழ்க்கையே முடிந்து போனவனும் உண்டு. சரியான வழி, சுலபமான வழி முறை தெரியாது. இப்போ நாம் இவ்வளவு சுலபமான வழிமுறை…

Granthaalayam

வேதாத்திரி மகரிஷியும் நானும்

ஸ்ரீ குரு கனக கோவிந்தசாமி அய்யா அவர்களின் உரைக்கு எழுத்து வடிவம் கொடுத்தவர் திருமதி. S. செல்வி அவர்கள்.அன்பர்களே! நானும் மகரிஷியும் ஒரு நாள் ரயில்ல…

KG Sami

தவம் – 41

Certificate வரும். இப்பொழுதே உங்களை பிரம்ம நிலைக்கு உயர்த்தி விட்டேன். உங்களை பிரம்ம ஞானி என்று அறிவித்து விட்டேன். கூன் விழுந்து உட்கார்ந்து…

KG Sami

தவம் – 32

5mm, 4mm thickness-ல் என்றெல்லாம் கண்ணாடி இருக்கிறது. 1mm thickness-ல் கூட கண்ணாடி இருக்கிறது. சினிமாவில் fighting scene-ல் பயன்படுத்துவார்கள்.…

KG Sami

தவம் - 44

அவருக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்று எண்ணி கீழே கிடந்ததைத் தூக்கி டமால், டமால் என்று அடித்தார் ஒரு அடி. நெப்போலியன் பார்த்துச் சிரித்துக் கொண்டே…

KG Sami

தவம் – 36

தன்னால் வாத்யார் வேலைக்குப் போகவே முடியாது என்று தெரிகிறது. ஏனெனில் அவருக்கு வயது நாற்பத்து ஐந்து. அவர் ‘Teacher training’ அல்லது B.Ed., Course-க்கு…