KG Sami1937 — 2006

தவம்-7

Signed KG Sami

வேக இயக்கங்களோடு தொடர்பு கொண்டு தானும் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருப்பது மனம். இந்த இயக்கம் மனிதகுலம் தோன்றிய காலத்திலிருந்து நடை பெற்றுக் கொண்டிருப்பதால் அதை நிறுத்துவது என்பதோ, ஏன் குறைப்பது என்பதோ முடியாத காரியம். ஆனால் இயக்கம் நிறுத்தப் பட்டால் தானே துரியாதீதம்?

அந்த இயக்கத்தைக் குறைப்பதற்காக மகரிஷிகள் ஏற்படுத்திய ஏற்பாடு துரியம். ஆக்கினைச் சக்கரத் தவத்திலேயே வேகத்தளர்வு ஓரளவு நிகழ்ந்து விடுகிறது. அதை முழுமைப் படுத்திக் கொள்வது துரிய தவத்தின் வேலை.

மூளையில் பல கோடிக்கணக்கான கபாடங்கள் (brain cells) இருக்கின்றன. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு வேலை. எல்லாம் சேர்ந்த இயக்கம் தான் உணர்வாக, மனமாக, அறிவாக இயங்கிக் கொண்டிருக்கிறது. அதற்கும் தனித் தனியாகக் கபாடங்கள் உண்டு. அவற்றின் பிரிவுகளுக்கும், உட்பிரிவுகளுக்கும் கபாடங்கள் தனித்தனியாக உண்டு. இவையெல்லாம் ஒரே சமயத்தில் இயங்காமல் ஒரு தொடர் இயக்கமாக நடைபெறுகிறது. சில நேரங்களில் எல்லாமே நேர்ந்து இயங்குவதும் உண்டு. மனக்குழப்பம், கடுங்கோபம், உணர்ச்சித் தீவிரங்கள், வெறி, பைத்தியம் முதலியவற்றுக்கும் எல்லாம் இந்தத் தொடர் இயக்கங்கள், தொடர்பில்லாமல் இயங்குவதும் ஒரே சமயத்தில் இயங்குவதும் காரணம்.

மூளைச் செல்கள் ஒவ்வொன்றும் பெரும்பாலும் இயக்கமில்லாமல் (dummy) தான் இருக்கின்றன. அவற்றைப் பயன்படுத்தினால்தான் அறியும் திறனும், அறிவுத் திறனும் கூடும். மூளைச் செல்கள் இயங்காமல் இருந்தால் ‘மூடம்’ என்ற நிலை. அவை இருக்கின்றன. ஆனால் இயங்கவில்லை. இயக்கத்திற்குக் கொண்டுவரப்படவில்லை என்று அர்த்தம்.

ஆக்கினை, துரியம் முதலிய தவங்களிலும், மூளைச் செல்களின் இயக்கம் வித்தியாசப்படுகிறது தூக்கத்திலும் சிந்தனையிலும் அவற்றின் இயக்க வேகம் குறையும். தூக்கத்தில் நின்று போனது மாதிரி தோன்றும். ஆனால் நிற்பதில்லை. இந்த இயக்கக் குறைவுகள் எல்லாம் தானாக நிகழ்பவை. சிந்தனையிலும் கூட இயக்கக் குறைவு நம்மால் விரும்பி முயன்று ஏற்படுத்தப்படுகிறது. அதனால் தவம் செய்யும் நம் முயற்சியும் இயக்கக் குறைவும் சேர்ந்து இயங்குகின்றன. தன்னில் தானாக (automatic) இயங்குகின்றன.

துரியாதீத தவத்தின் இயக்கம் நிற்கத் தொடங்குகிறது. நின்று விட்ட நிலை தான் சமாதி. ஆனால் அந்நிலையில் ஒரு அதிர்வு (frequency) இருந்து கொண்டிருக்கும். துரியாதீத நிலையில் ஏற்படுவது ஒரு குறிப்பிட்ட technique ஐ பயன்படுத்தி நாமாக அடைவது. இந்நிலை மருத்துவர்களால் ஏற்படுத்தப்பட்டால் அனஸ்தீஸியா. இந்நிலை வியாதியின் தீவிரவாதத்தால் ஏற்பட்டால் கோமா (Coma). இந்நிலை செயற்கையாக ஒரு பேரதிர்ச்சியால் ஏற்பட்டால் மரணம். மூளையில் கபாடங்கள் பலப்பல இருக்கின்றன. அதனால் தான் மூளையை ஆயிரம் இதழ் கொண்ட தாமரையாக வர்ணிக்கிறார்கள் (thousand petals). அந்தக் கபாடங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு வேலை. எல்லாக் கபாடங்களும் செழிப்பாகவும், இயக்கத் திறன் குன்றாமலும் இருக்க வேண்டும். எல்லாக் கபாடங்களும் இயக்கத்திற்கு வந்து விடிவதில்லை. குழந்தைப் பருவத்தில் இருந்து இயங்குகின்ற கபாடங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வரும். ஆனாலும் ஓரளவில் அவை நின்று விடுகின்றன. மறுபடியும் கபாடங்கள் இயங்க ஆரம்பிப்பது உண்டு. அதற்குத் தக்கவாறு அறிவுக் கூர்மை, எண்ணப் போக்கு, குணாதிசயங்கள் இவை எல்லாம் மாறுபடும். குழந்தைகளிடத்திலும், சிறுவர்களிடத்திலும் பொறுமையாக கவனித்தால் இது தெரிய வரும்.

மூளையில் கோடிக் கணக்கான கபாடங்கள் உள்ளன. அவை ஒவ்வொன்றின் இயக்கத்திறன்தான் நமது அறிவின் திறன். ஆனால் தலையில் இருக்கக் கூடிய அத்தனைக் கபாடங்களும் இயக்கத்திறன் இல்லாமல் சோர்ந்து இருக்கும். சாதாரணமானவர்களுக்கு நூற்றுக்கு பதினைந்து கபாடங்கள் தான் விழிப்பு நிலையில் இருந்து இயங்கிக் கொண்டிருக்கும். மற்றவை எல்லாம் தூங்கிக் கொண்டிருக்கும். அதாவது இயக்கம் இல்லாமல் சூம்பி இருக்கும். இயங்கிக் கொண்டிருக்கக்கூடிய கபாடங்கள் பெரிதாகவும், இயங்காமல் இருக்கக் கூடிய கப்படங்களின் அளவு சிறியதாகவும் இருப்பது இயல்பு. சாதாரணமானவர்களுக் கெல்லாம் சுமார் 13% லிருந்து 15% கபாடங்கள் தான் இயக்கத்தில் இருக்கும். அவற்றினுடைய இயங்கும் எல்லை சிறிதாக இருப்பது இயல்பு. அதே நபருக்கு இயங்கா கபாடங்கள் அதிகம். அவற்றினுடைய மொத்த அளவு (எண்ணிக்கை இல்லை Volume) மிகவும் குறைவாக இருக்கும்.

இதனால் தான் அறிவாளிகளுக்குத் தலை பெரிதாகவும், மற்றவர்களுக்குச் சிறிதாகவும் இருப்பது. நடுத்தரமான அறிவியக்கம் உள்ளவர்களுக்குச் சுமார் 15% லிருந்து 25% மூளைக் கபாடங்கள் இயங்கும். அதனால் அவர்களுடைய அறிவுத் திறன் சுமாராக இருக்கும். கெட்டிக்காரர்களாக இருப்பார்கள். மூளையினுடைய அளவும் பெரிதாகி விடும். ஏனெனில் இயங்குகின்ற கபாடங்களின் எண்ணிக்கை அதிகமாகி இருக்கும். அறிஞர்கள், சிந்தனையாளர்கள், விஞ்ஞானிகள் இவர்களுக்கெல்லாம் சுமார் 25% லிருந்து 40% மூளைக் கபாடங்கள் இயக்கத்திற்கும் செயல்பாட்டிற்கும் வரும். அப்படி என்றால் அவர்களுடைய சிந்தனையாற்றலும், அறிவாற்றலும் கூடுதலாக இருக்கும். இவர்கள் தலை பெரியதாக இருக்கும். நெற்றியில் புருவங்களுக்கு மேலே ஒரு முண்டு போன்ற எழுச்சி இருக்கும். மேலே சொன்னதெல்லாம் பெரும்பாலான நிலைகள். மாறுபாடும் உண்டு.

தவம் செய்யச் செய்ய (ஆக்கினை முதல் துரியாதீதம் வரை) மூளை செல்கள் ஒவ்வொன்றாக விழிப்புக்கும், இயக்கத்துக்கும் வரும். அதனால் மூளையும், தலையும் மெல்ல மெல்ல பெரிதாகிக் கொண்டே வரும். இளைஞர்களானால் இது தெளிவாகவும், பெரிதாகவும் இருக்கும். புருவம் எழுச்சியடைந்து கொண்டே இருக்கும். நெற்றியின் பகுதிகள் துண்டு, துண்டாக எழுச்சியடைந்து கொண்டிருக்கும். ஒருவரைச் சிறிது காலம் பார்க்காமல் இருந்து ஒரு மூன்று மாதம் கழித்துப் பார்த்தால் இந்த உண்மை தெரிய வரும். எங்கே இடித்துக் கொண்டோம்? ஏன் வீங்கி இருக்கிறது? என்று யோசிக்கும் படியாக இருக்கும். தலையிலும் இந்த நிலை தெரிய வரும். shower ல் தலை தேய்த்துக் குளிக்கும் போது இது என்ன? எங்கே முட்டிக் கொண்டோம். ‘கன்னுக் குட்டிக்கு கொம்பு முளைப்பது போல் துருத்திக் கொண்டே வருகிறதே ! என்று சந்தேகப் படத் தோன்றும்.

இந்த நிலையை உறுதி செய்து கொள்ள மகரிஷிகள் ஒரு யோசனை சொல்வார்கள். அதன்படி ஆக்கினை தீட்சை எடுத்தவுடன் ஒரு போட்டோ எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு மூன்று அல்லது நான்கு மாதங்கள் கழித்து மறுபடியும் ஒரு போட்டோ எடுக்க வேண்டும். அதே காமிரா, அதே லென்ஸ், அதே தூரம், அதே கோணம் எல்லாம் வைத்து எடுக்க வேண்டும். பிரிண்ட் போட்டுப் பார்த்தால் இரண்டு போட்டோக்களுக்கும் தெளிவாக வித்தியாசம் தெரியும். இந்தப் பரிசோதனையை செய்து பார்க்க என்னிடத்தில் அக்காலத்தில் பொருளாதார வசதி இல்லை. பொருளாதார வசதி உள்ளவர்களும் செய்து பார்த்ததாகத் தெரியவில்லை. ஆனால் கையில் தடவிப் பார்ப்பதற்கு வித்தியாசம் தெரிகிறது. இரண்டு வருடம், மூன்று வருடம் இடைவெளி கொடுத்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களிலும் வித்தியாசம் தெரிகிறது.

மூளை செல்கள் விழிப்புக்கும், இயக்கத்துக்கும் வருகின்றன என்பதற்கும் மூளை வளர்கிறது என்பதற்கும் மண்டை ஓடு விரிவடைகிறது என்பதற்க்கும் வேறு நிரூபணங்கள் உள்ளன. அவை எனக்கு ஏற்பட்ட அனுபவங்கள். அவற்றைத் தொடர்ந்து மகரிஷிகளிடம் கேட்டுப் பெற்ற விளக்கங்கள்.

(1) ஒரு நாள் தவம் செய்து கொண்டிருந்த பொழுது மூடிய கண்களுக்குள் ‘பளீரென்று’ ஒரு பெருவெளிச்சம் தெரிந்தது. (2) ஒரு நாள் ‘கோடை இடி’ போன்ற சத்தம் கேட்டது.

     இவை இரண்டுக்கும் ஒரே விளக்கம் தான். தவம் செய்து கொண்டிருக்கும் பொழுது நமது உயிர்ச் சக்தி வலச் சுழலாக மூளையை ஊடுருவிச் சுழன்று வரும். மூளைக் கபாடங்களை இடித்துத் திறந்து விடும். அவை தூங்கிக் கொண்டிருப்பதால் தட்டி எழுப்புவது போல் எழுப்பும். சாதாரணமாக மூளைக் கபாடங்கள் இதிலேயே விழிப்படைந்து விடும். சில நேரங்களில் சில கபாடங்கள் சண்டித்தனமாக விழிக்காமல் இயக்கத்துக்கு வராமல் இருந்தால் சுழலும் உயிர்ச்சக்தி அவற்றை பல வந்தமாக உசுப்பும். அவையும் ‘திடுக்கென’ பதற்றத்துடன் இயக்க நிலையை கொள்ளும். உடலில் வாயு அதிகமாக இருக்கிறதா, சூடு இருக்கிறதா என்பதற்குத் தகுந்தவாறு சத்தமோ, வெளிச்சமோ தோன்றும். அதாவது தோன்றுவது போல் இருக்கும்.

Keep reading

More from the archive

Granthaalayam

மாயையும் ஞானமும்

(ஸ்ரீ குரு கனக கோவிந்தசாமி அய்யா அவர்கள் ஆற்றிய உரை - பேச்சு நடையில்) அன்பர்களே! வாழ்வின் நோக்கம் இன்பமா?, துன்பமா?. வாழ்வின் நோக்கம் இன்பம்.…

KG Sami

Thalattu Vethathri - 60

வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன் !அருட் தந்தையின் அருள் வாரிசாம் உலகநலத் தொண்டர் , மூத்த பேராசிரியர் திரு. கே. ஜி. சாமி ஐயா அவர்களின் அருட்கவிகள் அடங்கிய…

Granthaalayam

சீர்திருத்தமும் முன்னேற்றமும்

ஸ்ரீ குரு கனக கோவிந்தசாமி அய்யா அவர்களின் உரைக்கு எழுத்துவடிவம் கொடுத்தவர் திருமதி. S. செல்வி அவர்கள்.அன்பர்களே!நமது வாழ்க்கையை சீராகவும்,…

KG Sami

தவம் – 33

ஆகவே ஜீவகாந்தம் ஒரு minimum critical level ஐ விட குறைந்து விடக் கூடாது. குறைந்து போனால் conversion ஏற்பட்டு சூடு உண்டாகும். அப்படியெல்லாம் நமக்கு…

Kannimuthu

விஞ்ஞானமும்அறிவுஇயலும்

இயற்கையினைஎடுத்துநுகர்ந்தனுபோகிக்க,பொருளியலும்அரசியலும்பெருகலாச்சு,இயற்கையிலேஊடுறுவும்ஒழுங்கைஉன்ன,இயல்கலைகள்பலவகையும்தோன்றலாச்சு,இயற்கையதன்நுணுக்கங்கள…

Kannimuthu

வள்ளார் வழி

காற்றாலே, புவியாலே: சுகன்மத னாலே”கனலாலே, புனலாலே கதிராதி யாலேகூற்றாலே பிணியாலே கொலைக்கருவி யாலேகோளாலெ பிற இயற்றும் கொடுஞ்செயல்க ளாலே.வேற்றாலே…