KG Sami1937 — 2006

தவம் – 19

Signed KG Sami

அந்த தைரியத்திலே அலாரம் வைத்துக் கொண்டு தூங்குவீர்கள் பாருங்கள். ரயிலுக்குப் போகிறவர்கள் அந்த அலாரம் இல்லையெனில் என்ன செய்வீர்கள். அலாரம் வைத்துக் கொண்டு தூங்குகிற மாதிரி அந்தச் சரியான நேரத்துக்கு உங்களை இறைநிலையே எழுப்பி விடும்.

உடலுக்கு உடல் மறதி என்பது நிரந்தரமானது அல்ல. ஒரு குறிப்பிட்ட நேரத்தில் இரத்த ஓட்டம் வந்து எழுப்பி விடும். ஆகவே அந்த நிலையை நீங்கள் அடைந்தீர்கள் ஆனால், கவலை இல்லாமல் செய்யுங்கள், என்ன ஆகுமோ, ஏது ஆகுமோ, என்று நீங்கள் அனுபவித்து இருப்பீர்கள்.

அன்பர்கள் பலபேர் வருவார்கள். “நான் தேடிக் கொண்டே இருந்தேன்” ‘எதை’ “என்னைத் தான். தவம் செய்து கொண்டே  இருந்தேனா, காணாமல் போயிட்டேன் என்னாச்சு தெரியலை. என்னை மறந்து விட்டேன். பயமா போயிட்டது. அப்பப்போ எனக்கு என்னவோ ஆயிட்டுது, என்று முழித்துக் கொண்டு விடுவேன்” என்று பலர் சொல்வார்கள்.

இந்தத் தத்துவம் உங்களுக்கு தெரிந்தது என்றால் அந்த நிலை வரும் போது மிரள மாட்டீர்கள். இந்த மாதிரி நமது அருள் தந்தையவர்கள் சுத்த வெளித் தத்துவத்தை கண்டு பிடித்தார்கள். அது தான் இறைநிலை என்பதைக் கண்டு பிடித்தார்கள். அதை அடைவதற்கு அதை நினைக்க வேண்டும் என்றும் கண்டு பிடித்தார்கள். அதை அடைவதற்கு அதை நினைக்க வேண்டும் என்றும் கண்டுபிடித்தார்கள். தெரிந்தால் தானே நினைப்பதற்கு.

உங்களுக்கு ஆவக்காய் ஊறுகாய் கதை சொன்னேன். நீங்கள் சரியாக follow பண்ணினீர்கள். ஒரு ஜப்பான்காரன் வந்து உட்கார்ந்து இருந்தான் என்று வைத்துக் கொள்ளுங்கள். அவன் ஊறுகாயைப் பார்த்ததேயில்லை. ஊறுகாயைச் சாப்பிட்டதுமில்லை. அவனுக்கு நான் சொன்ன கதை எவ்வாறு ருசிக்கும்.

முன்னே பின்னே ஊறுகாய் தெரிந்திருந்தால் தானே கற்பனை பண்ண முடியும். முன்னே பின்னே சுத்தவெளியைப் பார்த்திருந்தால் தானே சுத்தவெளியை நினைக்க முடியும். சுத்தவெளியாக ஆகிவிடலாம். இதுவரைக்கும் அந்த அனுபவம் கிடையாதே.

நமது அருள் தந்தையவர்கள் நினைக்கிறார்கள். அதனால் என்ன? நான் கொண்டு போய் விட்டு விடுகிறேன். யாரை? சீடனை. சீடனை நான் கொண்டு போய் சுத்தவெளியில் விட்டு விடுகிறேன் என்கிறார். அது எப்படி? அதற்கு டிக்கெட் எல்லாம் வாங்க வேண்டாமா. அதெல்லாம் ஒன்றும் வாங்க வேண்டாம். என் கூடவே வாருங்கள். முரண்படாது என் கூடவே வாருங்கள்.

என் மனதோடு உங்கள் மனதை இணைத்துக் கொள்கிறேன். எந்த அளவுக்கும் நினைக்க வேண்டும் என்றால் நான் வேறு சீடன் வேறு இல்லை என்ற அளவுக்கு நினைக்க வேண்டும் என்று கலந்து நினைக்க வேண்டும். அது சாதாரணமாக எல்லோருக்கும் வருமா?

துரியாதீதம் Technique-ஐ யார் வேண்டுமானாலும் தெரிந்து கொண்டும் யார் வேண்டுமானாலும் ‘துரியாதீத தீட்சை’ கொடுத்து விடலாம் என்று நினைக்காதீர்கள். எல்லோருக்கும் வராது அந்த நிலை. காசு, பணம், மனைவி, மக்கள், இன்ப, துன்பம் இதிலேயே கிடப்பவர்களுக்கு சீடனைத் தன் மனதோடு இணைத்துக் கொள்ள முடியாது.

ஆகவே ஒரு அளவில் துறவு நிலை வேண்டும். உலகத்தைப் பற்றிய சிந்தனை குறைவாகவும், கடவுளைப் பற்றிய சிந்தனை அதிகமாகவும், ஆன்மீக நாட்டம், ஆன்மீக தேற்றம், அதில் முதிர்ச்சி, அதில் தேர்ச்சி உடையவர்களுக்குத் தான் சீடனை நினைத்து சீடனுடைய மனதை தன் மனதோடு இணைத்துக் கொள்ள முடியும்.

இப்பொழுது குருவின் மனம் வேறு, சீடனின் மனம் வேறு இல்லை என்று வந்து போனது. அப்பொழுது குரு என்ன நினைக்கிறாரோ, சீடன் அதை நினைத்தாகனும். இரண்டு மனம் இல்லையே, குரு எதை அகக் காட்சியாக மனதால் பார்க்கிறாரோ அதைச் சீடன் அகக் காட்சியாக பார்த்து ஆக வேண்டும். இரண்டு மனம் இல்லை.

குருவாகப்பட்டவர் மனதை இணைத்துக் கொண்டு சீடனின் மனதை இணைத்துக் கொண்டு சந்திரன், சூரியன், சக்தி களம் தாண்டிப் போகிறார். சிவகளத்தில் நிற்கிறார்கள். யார், யார் நிற்கிறார்கள் – குருவும், சீடனும் நிற்கிறார்கள். அப்புறம் என்ன? பார்த்தாச்சு இல்லையா? இன்றைக்குப் பார்த்ததை நாளைக்கு நினைச்சுக் கிட்டா சரியாப் போச்சு. தினம் வந்து குரு காட்டிக் கொடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

மனதுக்கு ஒரு அனுபவம் இருக்குது. நேற்று சாப்பிட்ட இடியாப்பம் என்னமா இருந்தது. நல்லா இருந்தது. தேங்காய்ப் பால் வேறு ஊற்றி இருந்தார்கள். மெல்லிய நூலாக அடடா அந்தச் சுவையை நான் எப்படிச் சொல்றது? சர்க்கரை வேறு தேங்காய்ப் பாலிலே போட்டிருந்தார்கள் பாருங்கள். இப்பவா சாப்பிட்டீங்க நீங்க. இவ்வளவு நல்லா வர்ணனை பண்றீங்க.

பழைய அனுபவத்தை நினைவு கூர்ந்து அதை புதிய அனுபவமாக மாற்றிக் கொள்ளக் கூடிய நினைத்துக் கொள்ளக் கூடிய தன்மை மனதுக்கு இருக்கிறது. அதை வைத்துக் கொண்டு குரு ஒரு நாள் உங்களுக்குத் துரியாதீதம் கொடுத்து விட்டால் போதும். எத்தனை நாள் வேண்டுமானாலும் அதை நினைத்து நினைத்து அதுவாக மாறி நீங்கள் சுத்தவெளியை துரியாதீத தவத்தை செய்யலாம். இதுதான் முறை.

விஞ்ஞானம் தெரிந்ததால் நமது அருள் தந்தையவர்கள் பிரபஞ்சத்தை எடுத்துச் சொல்லிக் கொண்டு இது பிரபஞ்சம். இதற்கு ஐந்து பூதம் இருக்கிறது. அது விஞ்ஞானம் – Universe என்பதை எடுத்துக் கொண்டு எல்லாம் சேர்ந்து ஒன்றாக இருக்கிறது என்று சொல்வார்கள்.

Keep reading

More from the archive

KG Sami

தவம் – 33

ஆகவே ஜீவகாந்தம் ஒரு minimum critical level ஐ விட குறைந்து விடக் கூடாது. குறைந்து போனால் conversion ஏற்பட்டு சூடு உண்டாகும். அப்படியெல்லாம் நமக்கு…

Granthaalayam

எல்லோரிடமும் இணக்கம்

(ஸ்ரீ குரு கனக கோவிந்தசாமி அய்யா அவர்கள் ஆற்றிய உரை - பேச்சு நடையில்)அன்பர்களே! இணக்கம் என்ற தமிழ்ச்சொல், பிணக்கு என்பதனுடைய எதிர்ப்பதம்.…

KG Sami

மாயையும் ஞானமும்

(ஸ்ரீ குரு கனக கோவிந்தசாமி அய்யா அவர்கள் ஆற்றிய உரை - பேச்சு நடையில்) அன்பர்களே! வாழ்வின் நோக்கம் இன்பமா?, துன்பமா?. வாழ்வின் நோக்கம் இன்பம்.…

KG Sami

தவம்-15

வேதாந்திகள் சொன்னது என்ன? அறிவே தெய்வம். சித்தாந்திகள் சொன்னதற்கும், வேதாந்திகள் சொன்னதற்கும் வித்தியாசம் இருக்குதா? இவர்கள் சுத்தவெளிதான் தெய்வம்…

Kannimuthu

வள்ளார் வழி

காற்றாலே, புவியாலே: சுகன்மத னாலே”கனலாலே, புனலாலே கதிராதி யாலேகூற்றாலே பிணியாலே கொலைக்கருவி யாலேகோளாலெ பிற இயற்றும் கொடுஞ்செயல்க ளாலே.வேற்றாலே…

KG SAMI

பொங்கல் வாழ்த்து - 1970

புதுமைச் சித்தர் தத்துவஞானி உலகச் சமுதாய சேவா சங்கத்தலைவர் தவத்திரு வேதாத்திரி சுவாமிகள் அவர்கட்கு அன்னாரின் மாணாக்கருள் ஒருவனான காரைக்கால் க.…