KG Sami1937 — 2006

தவம் – 23

Signed KG Sami

தவம் செய்வதற்கு ஒரே தெய்வத்தை (பிரம்மாவை) வேண்டி தவம் செய்தார்கள். அவன் என்ன கேட்டான் என்றால், ‘நித்திய தத்துவம்’ தத்துவம் என்றால் இந்த இடத்தில் ஆற்றல் எதிரிகளை வெல்லக்கூடிய, யாராலும் ஜெயிக்க முடியாத ஒரு ஆற்றல். நித்தியம் என்றால் என்றைக்கும் இருக்கக்கூடிய, யாராலும் அழிக்கப்பட முடியாத ஒரு ஆற்றல் வேண்டும் என்று கேட்கவில்லை, கேட்க நினைத்தான்.

இது தேவர்களுக்கு எல்லாம் தெரிந்து போய்விட்டது. உடனே அவர்கள் அங்கே ஓடி, இங்கே ஓடி ஏதாவது பண்ணி ஆக வேண்டும் என்று சரஸ்வதி காலில் விழுந்து நீங்கள் அவன் நாக்கில் விழுந்து கொஞ்சம் வார்த்தையை மாத்திவிடு. சரி என்று அந்தம்மா அவன் நாக்கில் வந்து உட்கார்ந்தார்கள். ‘ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே’ – இங்கே ‘ஆவுது’ பாருங்க. அவன் தவம் இருந்து வரம் கேட்கும்போது  நாக்கை ஒரு சுண்டு சுண்டினாங்க. அவன் ‘நித்திரைத் தத்துவம் கொடு’ என்று சொல்லி விட்டான். அதற்கு என்ன? கொடுத்தேன் என்றார். அவன் அப்பவே தூங்க ஆரம்பித்து விட்டான்.

என்ன கேட்க நினைத்தான் என்பதை மட்டும் நாம் நினைவுபடுத்திக் கொள்வோம். என்றென்றைக்கும் அழியாத ஒரு ஆற்றலைக் கொடு என்று அர்த்தம். நித்தியம் என்றால் Forever என்று அர்த்தம். ஆனந்தம் என்றால் என்ன? ஆனந்தம் என்றால் சந்தோஷம். ஆனந்தம் சந்தோஷமென்றால் இது வேண்டுமா நமக்கு மகிழ்ச்சி வேண்டும் – சந்தோஷம் வேண்டாம்.

மகிழ்ச்சிக்கும், சந்தோஷத்துக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது. சந்தோஷத்தையும் பிரிக்கலாம். பகுபதம் சம் + தோஷம். ‘பந்தம்’ என்றால் உறவு. ‘பந்தி’ என்றால் உறவினன். உறவினர்கள் எல்லாம் எப்படி இருக்கிறார்கள். வந்து உட்கார்ந்து சாப்பிட்டு விட்டு ஏப்பம் விட்டுப் போவதற்குத் தான் இருக்கிறார்கள். ஆனால் கொண்டு வந்து கொடுப்பதற்கு என்று ஒருத்தர் இருக்கிறார். அவர் தான் சம்மந்தி. நல்ல உறவுக்காரர் யார் என்றால் சம்மந்திதான். சம் + பந்தி. நல்ல உறவுக்காரர் சம் என்றால் நல்ல.

இப்போ சந்தோஷத்துக்கு வருவோம். அது மனநிலை. எப்படிப்பட்ட மனநிலை என்றால் குற்றத்தில் சிறந்தது, மோசமானது என்று அர்த்தமில்லை. சற்றே பரவாயில்லை, வைத்துக் கொள்ளலாம் என்று எடுத்துக் கொள்ளலாம். ஏனென்றால் மகிழ்ச்சி தான் என்றாலும் அந்த சந்தோஷத்தில் ஒரு குற்றம் இருக்கிறது. அந்த நேரம் இறைவனை மறந்து விடுவோம். சந்தோஷம் என்று வந்தால் இறைவனை மறந்துவிட வேண்டியது. கஷ்டம் என்று வந்தால் இறைவனைக் கூப்பிட வேண்டியது. என்ன இருந்தாலும் அது ஒரு உணர்ச்சி நிலை தானே. Emotional Mood –ல் அது ஒன்று. ஆகவே ஆனந்தம் என்றால் சந்தோஷம் இல்லை. கலப்பே இல்லாதது. நித்தியம் Forever ஆனந்தம் வேண்டும் என்று நாம் இறைவனைக் கேட்கிறோம். வார்த்தையை மாற்றிப் போட்டால் அர்த்தம் வித்தியாசப்படும்.

ஆனந்தம் பகுபதம். எப்படி பிரிக்கலாம். ஆன் + அந்தம் என்று பிரிக்கலாம். இரண்டு வார்த்தைகளுமே ஆன்மீக வார்த்தைகள் தான். ஆன் என்றால் ஆன்மா என்று ஒரு பொருளும் ஆன் என்றால் அந்த ஆன்மாவை உடைய மனிதன் என்று ஒரு பொருளும் உண்டு.

நேற்று மகரிஷிகளை சென்று தரிசனம் செய்த போது அவர் ‘ஆன்மா’ என்பதை கரு மையம் என்று விளங்கிக் கொள்ள வேண்டும் என்று சொன்னார்கள். ஆனால் இதுவரைக்கும் நாம் ஆன்மா என்ற வார்த்தைக்கு கொள்ளக்கூடிய அர்த்தம் என்ன? உயிர். ஆன்மா உயிர். ஆன்மாவுக்கும் உயிருக்கும் வித்தியாசம் என்ன? என்று கேட்ட பொழுது, அது சமஸ்கிருதம். இது தமிழ் என்று பதில் சொல்லலாம். அப்படி இல்லை. இன்னும் ஆழமாகப் போக வேண்டும் கருமையம்.

இறை நிலையில் தொடங்கி இதுவரைக்கும் வந்த பிரபஞ்ச சரித்திரம் அத்தனையும் அடக்கமாக இருக்கிறது. ஒவ்வொரு ஆன்மாவிலும், ஒவ்வொரு கருமையத்திலும். ஆகவே அந்த (ஆன்மா) கருமையத்தை உடையவன் மனிதன். இறைநிலையில் இருந்து இன்று வரைக்கும் ஒவ்வொருவரிடமும் இருக்கக்கூடிய இறைநிலையின் சரித்திரம் ஒவ்வொருவரிடமும் ஒன்றாகத் தானே இருக்க வேண்டும். ஒன்றாகத் தான் இருக்கிறது. பஞ்ச பூதம் வரைக்கும் அந்தச் சரித்திரம் ஒன்றாகத் தான் இருக்கிறது.

ஒரே பதிவு தான் நல்ல பதிவு. அது மேல் நோக்கு வேகம் முன்னேற்றம். அதாவது களங்கத்தை ஏற்படுத்திக் கொள்ளாது. மேலும் மேலும் இறைநிலை என்ன ஆச்சு, தொடக்கத்தில் இறைநிலை என்ன ஆச்சு? இறைத் துகள் ஆச்சு. எது இறைத் துகள் ஆச்சு? இறைநிலை தெய்வம் இறைத்துகள் ஆச்சு.

இறைநிலை எவ்வளவு பெரியது? இறைத்துகள் எவ்வளவு சிறியது. ஆகவே சிறியது பெரியதாகத் துடிக்கிறது. முற்படுகிறது. அதற்கான உள்ளாற்றல் (Pontential) அந்த இறைத் துகளிலேயே இருக்கிறது. அதுகூட இல்லாமல் சூழ்ந்திருக்கக்கூடிய சுத்தவெளியானது அதை Compress பண்ணி அது ‘Compression is depression’ என்று சொல்வார்கள். அதுவே தன்னை விரித்துக் கொள்ளக்கூடிய ஆற்றலைத் தருவதும் அதுதான். இது நிரந்தரம். அதனால் தான் அந்த ஆற்றல் விண்துகளாக மாறுகிறது.

அந்த விண்துகள் காற்று, நெருப்பு, நீர், நிலம் என்று படிப்படியாக மேல்நிலை உயர்வு சிறப்பு தங்கு தடையில்லாமல், கால நீளம் வேண்டுமானால் நமக்கு பெரிதாகவோ, சிறிதாகவோ இருக்கலாம். ஆனால் தங்கு தடை இல்லாமல் பஞ்சபூதங்கள் வரைக்கும் வருகிறது.

அதன்பின் அதே உள்ளாற்றல் தன்னை முழுமையை நோக்கி உயர உயர்த்திக் கொள்ளத் துடிக்கிற உள்ளாற்றல் ஜீவனாக மாறுகிறது. அதாவது இதுவரைக்கும் இல்லாத ஒரு சிறப்பு பஞ்ச பூதத்தில் இல்லாத ஒரு சிறப்பு. பஞ்சபூதம் எதற்கும் இன்னொரு பூதம் இருப்பது தெரியாது. தான் இருப்பதும் தெரியாது.

அந்த மேன்மை தான் இப்பொழுது வருகிறது. ‘உணர்தல்’ என்பதாக. ஜீவன் என்றால் என்ன? ஜீவனுக்கும், பூதத்துக்கும் என்ன வித்தியாசம்? பஞ்ச பூதம் + உணர்தல் = ஜீவன். நாம் தான் இன்னொன்று இருப்பதை தெரிந்து கொள்ளலாம். தெரிந்து கொண்டு என்ன பண்ணப் போகிறோம் என்றால் ஏதோ நாம் மட்டும் இல்லை. இன்னும் ஏகப்பட்ட விஷயம் இருக்குது, என்று அந்தத் தன் முனைப்பு அங்கேயே அறுந்து போகும். தோன்றிய இடத்திலேயே தன்முனைப்பு அறுந்து போகும்.

ஆகவே அறிதலில் இன்பம். அந்த உணர்தலில் அறிதல் இன்பம் தோன்றி மேலும், மேலும் அறிய வேண்டும், இன்னும் அறிய வேண்டும், அதற்கு மேலும் அறிய வேண்டும் என்ற ஒரு துடிப்பு, முனைப்பு அணுவிலேயே ஆரம்பமாகி விட்டது. முதல் ஜீவனிடத்தில் ஆரம்பமாகி விட்டது. அமீபா, தாவரம் என்று சொல்வார்கள். அந்தச் சரித்திரத்தை நாம் சுருக்கிக் கொள்வோம்.

இந்த Process அறிய, அறிய பல விஷயங்கள் தெரிய, தெரிய அதை Record பண்ணிக் கொள்கிற சாமர்த்தியம் இருக்கிறது. பரிணாமத்தில் ஏற்படுகிறது ஜீவன்களிடம். இதுவரைக்கும் என்ன நடந்தது. பரிணாமத்தில் அந்தச் சரித்திரம் பூதங்களிடம் இருக்குது. அடக்கமாக இருக்கிறது, அலை இயக்கமாக ஆனால் Refer பண்ணத் தெரியாது.

நூலகம் மாதிரி. ஆனால் போய்ப் படிக்கிறத வாசகர்கள் மாதிரி ஜீவன்கள் உணர்தல் தொடங்கும் போது, ஓஹோ, அப்படித் தொடங்கியதா. கல் தான் மண்ணாச்சா, நீர் தான் மண்ணாச்சா என்ற மாதிரி இயற்கை இரகசியங்களை, தனது இரகசியங்களைத் தானே தெரிந்து கொள்கிற வல்லமை. அதனால் இந்த அறிவு மேலே மேலே வளர்கிறது.

இங்கே தன்னடக்கம் வரனும். அறிய, அறிய தலைக்கனம் வரும். கொங்கணவர்க்கு வந்த மாதிரி. இங்கே தன்னடக்கம் வரவேண்டும். அறிதலில் அதைத் ‘திருவள்ளுவர்’ தான் அந்த இடத்துக்குப் போய் சொல்கிறார். அறிய, அறிய நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டோம் என்று இருக்கக் கூடாது. இதுகூடத் தெரியாமல் இருந்திருக்கிறோம் என்பது தெரிகிறது. அதுதான் அறியாமை.

யாரோ ஒரு பெரியவர், ஒரு மஹான் இறைவனுக்கு நிவேத்யம் செய்வதற்கு நான் என்னப்பா கொடுக்கிறதுக்கு உனக்கு. என்னிடம் ஒண்ணுமே இல்லை. இருக்கிறதில் ஒன்றைத் தேடிப் பிடித்தால் கிடைக்கிறது அது அறியாமைதான்.

Keep reading

More from the archive

KG Sami

ஜீவ காந்தப் பெருக்கம்

ஊருணி நீர் நிறைந்தற்றே உலகவாம்பேரறி வாளன் திருஎன்றார் வள்ளுவர்.ஊர்ப் பொது கிணற்றில் அல்லது குளத்தில் நீர் நிறைந்திருந்தால் அது எவ்வாறு ஊர்…

Granthaalayam

ஒரே கல்லில் இரண்டு மாங்காய்

ஸ்ரீ குரு கனக கோவிந்தசாமி அய்யா அவர்களின் உரைக்கு எழுத்துவடிவம் கொடுத்தவர் திருமதி. S. செல்வி அவர்கள்.அன்பர்களே!இறைநிலையை புலன்களால் உணர்ந்து…

KG Sami

தவம் – 8

(3) தலையில் பேன் ஊறுவது போல் இருக்கும், எவ்வளவு நேரம் கிண்டிப் பார்த்தாலும் ஒரு பேனும் அகப்படாது. இந்த நிகழ்ச்சி எதைக் குறிக்கிறது? ஒட்டு மொத்தமாக…

KG Sami

தவம் – 20

நமது பிரபஞ்சத்தை Universe ஆக எடுத்துக் கொண்டு, அது 2000 கோடி ஒளியாண்டு diameter இருக்கிறது என்று சொல்லி, எல்லைக்கு அப்பால் என்ன இருக்கிறது.…

KG Sami

நட்பு நலம்

(ஸ்ரீ குரு கனக கோவிந்தசாமி அய்யா அவர்களின் உரையிலிருந்து) இன்னைய தேதில ஒருத்தருக்கு உலகம் பூரா நண்பர்கள் இருக்காங்க. ஆணுக்கு ஆண், பெண்ணுக்கு பெண்…

Granthaalayam

இறைவனும் இறைநீதியும்

(ஸ்ரீ குரு கனக கோவிந்தசாமி அய்யா அவர்கள் ஆற்றிய உரை - பேச்சு நடையில்) அன்பர்களே! நாம் இறைவனைத் தேடுகிறோம், ஆனால் இறைவன்னா என்ன? என்று தெரியாமலே…