அந்த அறியாமையை நிவேத்தனமாக கொடுத்து விடுகிறேன். எடுத்துக் கொள். வேறு ஒன்றும் என்னிடம் கிடையாது. அவருக்கு கை இருக்கலாம். கால் இருக்கலாம். கையிலே கமண்டலம் இருக்கலாம். ஆயிரம் இருக்கலாம். ஆனால் அதெல்லாம் உடைமை இல்லை. எது நிரந்தரமான, நிச்சயமான உடைமை என்றால் அறியாமை.
’அறிதொறும் அறியாமை கண்டொற்றால் தெரிந்து கொள்ள, தெரிந்து கொள்ள இது கூட தெரியாமல் இருந்திருக்கிறோம் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். அந்த அறியாமை தான் ஜீவனிலிருந்து மனிதனாக மாற, மாற அறியாமை மாறி அறிவுடைமையாக மலர்கின்ற உள்ளாற்றல் Potency இறைநிலையிலிருந்து கிடைத்தது. நாம் அங்கிருந்து கொண்டு வந்த தாய் வீட்டு சீதனம். மேலே, மேலே தன்னை வளர்த்துக் கொள்வதற்கு ஒரு ஆற்றலாக வருகிறது. அவ்வாறு நாம் தெரிந்து கொண்டே இருக்க வேண்டியதுதானா? ஆமாம்.
தெரியப்படாதது ஒன்று இருக்கிறது என்பது வரைக்கும் தெரிந்து கொண்டே இருக்க வேண்டும். தெரியப்படாதது என்பது எது? தெய்வநிலைதான். தெய்வநிலை பிடிபடும் வரைக்கும் தெரிந்து கொண்டே இருக்க வேண்டியது தான். தெய்வநிலை என்று ஒன்று இருக்கிறது. அது சுய பிரக்ஞையாக வர வேண்டும். சொன்னார்கள் கேட்டு விட்டோம். புரிந்தது. ஆமாம்.
அப்புறம் நினைத்துப் பார்த்தோம். சரியாகத் தான் இருக்கிறது. அப்புறம் சாப்பிடக் கூப்பிட்டார்கள். போனோம் அப்படி என்று இருக்கக் கூடாது. சாப்பிடப் போகும் போதும், சாப்பிடும் போதும் காரத்துக்காகக் கண்ணீர் வடிக்கும் போதும், Sweet-க்காக நாக்கில் ஜலம் வடியும் போதும் அதை மறக்கக் கூடாது. அந்த அறியப்படாதது ஒன்று பாக்கி என்று இல்லாத நிலை வரைக்கும் இறைநிலை வரைக்கும் நாம் அறிந்து கொண்டு விட்டோம் என்றால் அப்புறம் ஒன்றும் இல்லையே அறிவதற்கு. அதுவரைக்கும் வரக்கூடிய அறிவை Compress பண்ணி மூலை முடுக்கெல்லாம் போட்டு பெட்டியில் வைத்து சாத்தி இறுக்கிப் பூட்டு போட்டு பூட்டி வைத்த மாதிரி புலன்கள் வழியாக பொருள்கள் மேல் செலுத்துகிறோம். நின்று நிதானித்துச் சிந்தனை பண்ணிப் பார்க்கும் போது இதில் உள்ள அவலம் தெரியும். எவ்வளவு மோசமான பேர்வழிகள் நாம் என்று இதில் உள்ள அவலம் தெரியும்.
இறைநிலை நினையாமல் மறவாமல் இருந்து கொண்டிருக்க வேண்டும். ஜீவனுடைய ஒரு இலட்சணம் என்னவென்றால் உணர்வு. இது அமீபாவுக்கு உணர்வு. மனிதனுக்கு என்ன? தெய்வம். இருக்கிறது. நீக்கமற எங்கும் இருக்கிறது. நிறைந்து இருக்கிறது. இருக்கிறது என்றால் அது ஒன்றுதான் இருக்கிறது.
தாயுமானவர் வாசகம் என்று சொல்வார்கள். ‘இருந்ததனை இருந்தபடி இருந்து காட்டி’ தாயுமானவர் தன் குருவிடம் போய், “எனக்கு உபதேசம் கொடுங்க” என்று சொன்னார். அதற்கு அவர், “சும்மா இரு” என்றார் உபதேசம் முடிஞ்சு போச்சு. “இருந்ததனை இருந்தபடி இருந்து காட்டி மௌனமாக இரு” என்று சொல்லிக் காட்டினார்.
நாம் இப்போ தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் ‘இருந்தது எது’, ‘எதைத் தெரிந்து கொள்ள வேண்டும்’, ‘உபதேசம் என்ன?’ ‘எதை அறிய வேண்டும்’. இருந்தது பார் ஒன்று. என்ன இருந்தது. பனை மரம் இருந்தது. அதற்கு முன்பு பனங்கொட்டை இருந்தது. அதற்கு முன்பு மண் இருந்தது. அதற்கு முன்பு தண்ணீர் இருந்தது. ஒன்றுக்கு முன்னால் எதுவும் இருந்ததில்லை. அதுதான் இருந்தது. அது எது?
தெய்வ நிலை. அது எப்படி இருந்தது. அமைதியாக, பேசாமல். பேசாமல் என்றால் கை, கால்களை அடக்கிக் கொண்டு என்று நான் சொல்லவில்லை. இருந்தது தெய்வம். அதை நாம் அறிய வேண்டும் என்பது தான் ஆன்மீகத்தினுடைய இலட்சியம். உலக சமுதாய சேவா சங்கத்தினுடைய இலட்சியம்.
அது அறியப்படாதது வரைக்கும் ‘ஆ… எனக்கு! நகர்ந்து உட்கார். இது என்னுடைய இடம். கொடுக்க மாட்டேன். வீணாகப் போனாலும் போனால் போகிறது. கொடுக்க மாட்டேன்’ என்று செருக்கு இருந்து கொண்டே இருக்கும்.
‘அது நான். நான் அது’. இருக்குமிடம் எங்கும். யார் இருக்குமிடம். யார் இருக்குமிடம் அது இருக்குமிடம் எங்கும் என்று அர்த்தம் பண்ணிக் கொள்ளலாம். நான் சொல்ல வந்தது ‘நான் இருக்குமிடம் எங்கும். நான் எங்கும் இருக்கிறேன்.’
எனக்கு ஒரு பேனா வேண்டும். அந்தப் பேனாவிலும் நான் இருக்கிறேன். எனக்கு ஏன் அந்தப் பேனா வேண்டும். எழுத வேண்டுமே. எழுதும் போது வரும். இல்லை என்று வைத்துக் கொள்ளுங்கள். 100 பேனா கொடுத்தாலும் பத்தாது.
யாரோ ஒரு Lord England-ல் இருந்தார். அவர்கள் அடிக்கடி விருந்து நடத்துகிறார்கள். அவர் விருந்துக்கு அடிக்கடி போய் வருகிறவர். அவர் இறந்த பிற்பாடு அவர் அலமாரியைத் திறந்து பார்த்தால் ஆயிரக்கணக்கான Spoonகள். பெரிய Lord விருந்துக்குப் போன ஒவ்வொரு இடத்தில் Spoon-ஐ எடுத்து ‘கோட் பாக்கெட்டில்’ போட்டுக் கொண்டு வந்துவிடுவாராம்.
அதுதான் ‘தான்’ ‘தனது Spoon-ஐ தான் சாப்பாட்டை எடுத்து வாயில் வைக்குது. Spoon தான் தெய்வம்’ என்று நினைத்துக் கொண்டார். அப்படி எது கொடுத்தாலும் போதாது, இறைநிலை உணரப்படாத வரைக்கும். இறைநிலையை உணர்ந்து விட்டால் ‘என்னுடையது தானே, என்னுடையதை எடுத்து நான் ஏன் அலமாரியில் வைக்க வேண்டும். அதற்கு எங்கும் இருக்கிறது. O.K. அதாவது நான் எங்கும் இருக்கிறேன். நான் எதிலும் இருக்கிறேன். நான் எதுவுமாகவும் இருக்கிறேன் என்ற ஒரு உணர்வு நினைக்காமலும் மறக்காமலும் வேண்டும். அதற்காகத் தான் நமது அருள்தந்தை அவர்கள் துரியாதீதம் கொடுக்கிறார்கள். ‘துரியாதீத தவ விளக்கம் கொடுக்கிறார்கள்’. அது போதவில்லை.
அதனுடைய விலாசம் Comparatively அதைவிட பெரிது இல்ல என்ற் நமது அன்பர்கள் தெரிந்து கொண்டிருக்க மாட்டார்கள் என்று இன்னொரு தவம் கொடுக்கிறார்கள் துரியாதீத தவம் மாதிரியே. கடைசியில் துரியாதீத தவத்தில் என்ன செய்கிறோம். இறைநிலையை உணர்வாகப் பெறுகிறோம். அவ்வளவுதான். அப்புறம் இன்னும் என்ன வேண்டும். அதையே இன்னும் நன்றாகத் தெரிந்து கொண்டால் தேவை இல்லை. எப்படித் தெரிந்து கொள்ளலாம். ‘பஞ்ச பூத நவக் கிரகம்’ தவம் மூலமாக.
’பஞ்ச பூத நவக் கிரக’ தவத்தில் (இறைவெளிக்கு) சுத்தவெளிக்கு செல்வதற்கு வேறு ஒரு பாதை. இமயமலை மேலே ஏறிவிட்டார்கள். அது முதலிலேயே முடிந்து போச்சு. அப்புறம் ஏன் சும்மா ஏறிக் கொண்டு இருக்கிறார்கள். பாருங்கள். இன்னும் ஒரு வழி உண்டானால் அதையும் தெரிந்து கொள்வோமே என்ற முறையில் பூதங்களை எல்லாம் தெரிந்து கொண்டு ‘விண்’ என்ற பூதத்தின் மேல் மனம் செலுத்தி தவம் செய்கிறோம்.
’விண்’ என்ற பூதம் எங்கே இருக்கிறது அசலாக? விண்ணிலே இருக்கிறது. அண்டவெளியிலே இருக்கிறது. அண்ட வெளியாக இருக்கிறது. அண்ட வெளி முழுவது நிரம்பி இருக்கிறது. அன்பர்களே! “அதற்கு அந்தாண்ட என்ன இருக்கிறது?’ ‘Curiosity’.
Curiosity-க்கு தமிழில் வார்த்தை என்பார்கள் தமிழறிஞர் நெடுஞ்செழியன் ‘ஆவல், ஆர்வம்’ அதெல்லாம் இல்லை. தெரு முனையில் ‘மோடி மஸ்தான்’ கூட்டம் போடுகிறான். ‘மொட்டை பறக்கப் போகுது, கீரிக்கும், பாம்புக்கும் சண்டை நடக்கப் போகுது என்று கூட்டம் கூட்டிக் கொண்டு இருப்பான். உங்களுக்குத் தெரியுமில்லையா? அப்புறம் ஏன் எட்டிப் பார்க்கிறீர்கள். அதுதான்’ Curiosity’ அந்த அர்த்தம் ‘Curiosity’-ல் இருக்குது. தமிழில் ஆசையிலோ, ஆர்வத்திலோ இல்லை. அதனால் அது எங்கிருந்தாலும் தெரிந்து கொள்வோம்.
திருக்குறளுக்கு உரை எழுதி இருக்கிறார். அதையும் படியுங்கள். படித்துவிட்டு வைத்து விடுங்கள். ஆகவே ‘நட்சத்திர மண்டலமாக ஒரு கூட்டம், அந்த நட்சத்திர மண்டலம் இருந்து இயங்குவதற்கு ஒரு கூட்டம். எவ்வளவு கிடைத்திருக்கிறது. கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் கிடைத்திருக்கிறது. போதாதா பொருளால் திருப்தியடையாதது மனம்.