KG Sami1937 — 2006

அவனிக்கோர்அறிவுக்கோவில்

Signed Kannimuthu

1.    தேனாறும்சோலைபலதோன்றும்குன்றம்.

  • திரண்டெல்லாபுறங்களிலும்சூழ்ந்தஆறு.

     வானூறும்தண்ணமுதம்வாகாய்ப்பாயும்

விதமாககீழ்மேலும்ஓடும்ஆறு.

     கானாறும்நறுமணத்தால்கிறுகிறுத்துக்

           கவிழ்ந்தாடும்மந்தியினம்குவிந்தஆறு.

     பாநாறும்சொற்சுவையும்பொருள்சுவையும்

           பொதிந்துகவிபொங்கிவரும்ஆழியாறே!

2.    இங்கிருந்துபலநூறுகல்தூரத்தில்

           செங்கையருகில்வேதாத்திரியான்தோன்ற்,

     அங்கிருந்துஅகிலமெலாஅலைந்துதேடி

           அவனியிலேஅமைதிதனைநிலைக்கச்செய்யத்

     தங்குதடைஇல்லாமல்தழைத்தானந்தம்

           தரணியெலாம்ஒருகுடும்பம்என்றுவாழப்

     பொங்கிவரும்அறிவுக்குக்கோயில்செய்யப்

           புதியஇடம்ஆழியாற்றைத்தேர்ந்துகண்டான்.

3.    ஈங்காரும்இன்றுவரைபோதிக்காத

           இயல்பானவாழ்க்கைமுறைவகுத்துத்தந்து,

     ஆங்காரும்எளிதாகஏறும்வண்ணம்

           அமைதிவழிஎளியமுறையோகம்ஈந்து,

     பாங்காகஇனியுலகுபதமாம்வாறு

           பக்குவமாய்க்கர்மயோகம்படைத்தளித்து,

     ஓம்காரமண்டபமாய்அறிவுக்கோவில்

           உண்டாக்கஉளங்கொண்டான்என்றன்தந்தை!

4.    அறிவுக்குக்கோவிலொன்றுஇதுநாள்யாரும்

           அமைக்காதகுற்றத்தாலன்றோதீய

     நெறிநின்றுமனிதகுலம்நாசம்நோக்கி

           நினைவு, சொல், செயல்ஆற்றிநடக்கலாச்சு!

     செறிவுற்றபதிவழித்துச்சீர்மைசெய்ய,

           சிந்தனையில்செம்மையினைச்செலுத்தஏற்ற

     அறிவுக்குக்கோவிலொன்றுபெற்றுவிட்டோம்:

           அகலுமன்றோஇனிபொருளோடறிவுஏழ்மை!

5.    அவனிக்கோஅமைதியில்லை.அமைதிஆக்க

           அறிஞரெல்லாம்அவரவரும்ஒவ்வோர்மார்க்கம்

     கவனிக்கத்தந்தார்கள், காலம்தோறும்.

           கானல்நீர்போலமைதிதொலைவில்போச்சு.

     இவணிங்குயுகயுகமாய்இன்பம்குன்றி,

           ஏற்பாரும்இழிந்தாரும்எங்கும்காணும்

     பவனிக்குக்காரணத்தைத்தந்தைகண்டான்

           பவம்நீக்கஅறிவுக்கோர்கோவில்கண்டான்!

6.    இலர்பலராய்ஆனதுஏன்? நோன்பில்லாதார்

இன்றுவரைஎண்ணிக்கைகூடலானார்.

பலர்நோலார்ஆனதொருகுறையாலன்றோ

பண்டுதொட்டேஇன்றுவரைபாவம்பொங்கிச்

சிலர்கூடச்சிறிதேனும்மகிழ்வார்இன்றிச்

சிறுமையுற்றார்! வறுமையுற்றார்! அதனால்நோற்பார்

உளர்நிறையஎன்னுகின்றஉலகம்காண

உளங்கொண்டான்அறிவுக்குக்கோவில்கண்டான்!

7.    அறிவறிந்தால்அறிவாகிஅறிவுக்குள்ளே

அரசியருக்கும்அரும்பொருளாய்அவனைகாண்போம்;

அறிவறிந்தால்ஆண்டவனைஎதிலும்காண்போம்;

அறிவாளிஅறிவில்லான்என்னும்பேதம்

அறிவறிந்துஅவனானோர்க்கேதுசெல்வீர்!

அறிவெதற்கும்உள்ளிருந்துஊக்கும்தன்மை

அறிவோடுஅறிவாகும்போதுதோன்றும்.

அறிவாங்கேஅவனாகும். அதற்கோர்கோவில்!

8.    எண்ணத்தைப்பண்படுத்தி, தீயஎண்ணம்

எழாமலேகாப்பதற்குத்திட்டம்தந்து,

எண்ணத்தில்எழுமாசை ‘தீங்கா? இல்லை,

நலம்விளைக்குமா?’என்றுஆயச்சொல்லி,

எண்ணமெழுந்திழிசினமாய்மாறாவண்ணம்

எளிதாகத்தற்காப்பும்அமைத்துவைத்து,

எண்ணத்தில்இறைவனையும், இறையுள்எண்ணம்

எழும்வகையும்விளக்குமிந்தஅறிவுக்கோவில்!

9.    ’இறைவனேஎழுந்துவந்துமனிதனானான்’

எனில், இங்கேஇத்தகையஅமளிஏனோ?

‘இறைவனே     மனிதனெனமனிதன்காணா

மயக்கத்தால்’. மனம்தெளிந்துமயக்கம்போனால்,

‘இறைவனேஇவன்’என்றும், இவனேஎங்கும்

இருப்பதையும்எல்லோரும்இணைந்துகாண

இறையுருவாம்என்றன்குருஅமைத்துத்தந்தான்

இனிதாகஅறுவுக்கோர்அழகுக்கோவில்!

Keep reading

More from the archive

KG Sami

மாதா, பிதா, குரு, தெய்வம்

(ஸ்ரீ குரு கனக கோவிந்தசாமி அய்யா அவர்களின் உரையிலிருந்து)வாழ்க்கை நெறிநூலறுந்த பட்டம் காற்றில் எப்படிப் பறக்குமோ, அது போல பலபேரது வாழ்க்கை முறை…

Kannimuthu

வேறு

பிறப்புக்கு முன்நீயுன் தந்தை தாயே:பிறப்பின்பின் உணர்ச்சிபெற்ற பஞ்ச பூதம்:இறப்புக்குப் பின்நீயுன் மக்கள் என்றுபிறவித்தொடர் தத்துவத்தில் புரட்சி…

Kannimuthu

அறிவிற்கு நான்கு நிலை

அறிவிற்கு நான்குநிலை: இயற்கைத் தேவைஅவைமட்டும் நிறைவுகொளல் ஒன்(று); (இ)ரண்டு பொறி புலனால் இயற்கைஎழில் ரசித்தல்; மூன்று, பகுத்தறிவால் இயற்கைரக சியங்களை…

Granthaalayam

வேதாத்திரி மகரிஷியும் நானும்

ஸ்ரீ குரு கனக கோவிந்தசாமி அய்யா அவர்களின் உரைக்கு எழுத்து வடிவம் கொடுத்தவர் திருமதி. S. செல்வி அவர்கள்.அன்பர்களே! நானும் மகரிஷியும் ஒரு நாள் ரயில்ல…

KG Sami

தீதும் நன்றும்

(ஸ்ரீ குரு கனக கோவிந்தசாமி அய்யா அவர்களின் உரையிலிருந்து)இன்னைக்கு பல பேர் நான் யாருக்கும் ஒரு கெடுதலும் செய்யலையே!, ஆனால் இறைவன் ஏன் எனக்கு…

KG Sami

தவம் – 39

ஆசிரியர் பயிற்சி மனவளக்கலையை மற்றவர்களுக்கு கற்றுக் கொடுப்பதற்கு எவ்வாறு குனிய வேண்டும், எவ்வாறு தொட வேண்டும், எவ்வாறு தீட்சை கொடுக்க வேண்டும்…